(Reading time: 21 - 42 minutes)

26. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

வன் இழுப்புக்குட்பட்டு அறைக்குள் அவசரமாய் வந்தாலும், வரும் போதே  பார்வையால் அறையை அலசி இருந்தாளே மனோ…. யாரும் இல்லா ரூமுக்கு இழுத்துட்டு வந்தா என்ன அர்த்தம்னு அவ டென்ஷனும் ஆகி இருந்தாளே….. இதில் மூன்றவதாய் யார்?

அதுவும் ஒரு பெண் குரல்….அதுவும்ம்ம்ம்ம்ம்ம்…. அவளது குரலே….நிமிர்ந்து பார்த்த மனோ திக்ப்ரமித்துப் போயிருந்தாள்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

ஏனெனில் போனை எடுத்துப் பேசிக் கொண்டிருந்தது சாட் சாத் அவளேதான்….. அதாவது அவளைப் போன்ற உருவமுடைய, குரலுடைய ஒரு பெண்…… உண்மையில் அது பெண்தானா???

சற்று கூர்ந்து பார்த்தவள் அடுத்த கணம் தாவி தன்னவனை சூழ்ந்திருந்தாள்…… அவள் கைகள் அவன் தோள்களில் மாலையாய்…..  ……அத்தனை விஷயம் புரிந்திருந்தது அந்த நொடியில் அவளுக்கு….

 இந்த இவளைப் போன்ற இது….இவளது பாதுகாப்பிற்கான அவனது ஏற்பாடு  என்பது அவளது புரிதல். அவளை சி இ ஓ வாக இன்றைய நிலையில் அவன் சேர சொன்னதிலிருந்து அவள் மனதில் சில அலை பாய்தல்…

இன்றைய நிலையில் அவள் சி ஈ ஓவாவது கண்டிப்பாக ஒரு ஆபத்தான முடிவுதான்…..ஆனால் அதை மித்ரன் அனுமதிக்கிறான்…… அது ஏன்?

முன்பு போல் கோபத்தில் பிடிவாதம் பிடிப்பாள்……உன் சேஃப்டிக்கு என எதாவது சொன்னால் எடுத்தெறிந்து எகிறுவாள் என இன்னும் நினைக்கிறானோ அவன்? என்பதாய் அவள் மனதின் ஓரத்தில் ஒரு உறுத்தல்…..

அப்டினா நான் பிடிவாதம் பிடிப்பேன்ற ஒரே காரணத்துக்காக என்னை எப்டியும் போன்னு விட்றுவானா…? என்றாய் மனதில் ஒரு தாங்கல்….

சே எப்டியும் போன்னு நினைக்கிறவனா கூடவே ஆஃபீஸ் வருவான்…..? அப்டினா என் பிடிவாததுக்காக தன் லைஃபையும் சேர்த்து ரிஸ்க் எடுக்கான்னு ஆகுதே…. இது எப்டி சரி? இப்படியாய் ஒரு தவிப்பு..

அதே நேரம் இப்ப நான் அவன் சொன்னபடி போகலைனா அவன் மட்டும் தனியா போய் பயோசில நிப்பானோ…? என்றும் ஒரு கேள்வி….

ஆனாலும் மித்ரனின் உடல்நிலை மற்றும் வர்ஷனின் ஆபத்தான நிலை……இந்த இதில் இவள் இன்னுமாய் மித்ரனை குழப்ப விரும்பவில்லை….

அவன் திட்டப்படியே அவன் நடந்து கொள்ளட்டும்…..அவன் விரும்பும் ஒத்துழப்பை மட்டும் இவள் கொடுக்கட்டும்….பின்பு சூழ்நிலை சுமுகமானதும் இதை பேசி சரி செய்து கொள்ள வேண்டும்…. என்று நினைத்திருந்தாள்….

இபொழுதெல்லாம் அவனது பாதுகாப்பு ஏற்பாடு என்பது அக்கறையின் வெளிப்பாடாய் தான் அவளுக்கு படுகிறது…. அதை அவனிடம் தெளிவாய் சொல்லி விட வேண்டும்  எனவும் முடிவு செய்திருந்தாள்….

ஆனால் இப்பொழுது அவனது இந்த செகண்ட் மனோகரி ஏற்பாடை பார்க்கும் போது தான், அவன் அப்படி ஒன்றும் அவள் பாதுகாப்பு ஏற்பாடை கைவிடவில்லை என புரிகிறது அவளுக்கு….

அந்த அவனது அக்கறை மனதுக்குள் சுக விம்மலாய்….

 எதிர்பாராத அவள் செயலில் அவன் “ஹேய்…” என ஏதோ ஆரம்பிக்க…

“தேங்க்ஸ் பா…” என்ற இவளது வார்த்தையில் பேச்சை நிறுத்திக் கொண்டான்….

இப்பொழுது அவன் கண்களைப் பார்த்தவள் “கோபபடுவேன்னு யோசிச்சீங்களோ…?” என்பதை தனக்கு கோபம் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக கேட்டாள்.

ஒரு மென்மை அவன் முகத்தில் பரவியிருக்க மறுப்பாய் சின்னதாய் தலை அசைத்தான்… “இல்ல கோபம் போய்ட்டுன்னு முன்னமே புரிஞ்சுது…”

மனோவிடம் ஒரு புன்னகை உதயம்…..அடுத்தும் இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்களை ஏனோ தவிர்க்கத் தோன்றி சற்றாய் பார்வை தாழ்த்தியவள், மெல்ல அவனிடமிருந்து விலக முற்பட…..

“அப்ப கோபமில்லன்னு காமிக்க மட்டும்தான் இதெல்லாமா…” என்றபடி அவளை விலக விடாமல் பிடித்தான் அவன்…

“ப்ச்….என்ன நீங்க வர்க் ப்ளேஸ்ல வச்சு…..” எனும் போதே அவளுக்கு அந்த வார்த்தைகளின் அபத்தம் புரிய…..பின்ன இத முதல்ல ஆரம்பிச்சது அவ தானே….எதுவும் சொல்லாமல் அப்படியே நின்று கொண்டாள். ஆனால் பார்வையால் அவனை சந்திக்கவும் இல்லை…

 “இது எங்கப்பா கிடச்சுது….?” பேச்சை எதிரில் நின்று கொண்டிருந்த மனோகரி போன்ற அந்த உருவத்தை பற்றி திருப்பினாள் இப்போது.

“அது நெட்ல அப்டி ஒரு ஆஃபர் பார்த்தேன்….நாம கேட்கிறமாதிரி உருவத்துல இப்டி செய்து கொடுபாங்கன்னு……கரெக்டா சொல்லனும்னா அது ஒரு  சாஃப்ட் டாய் அவ்ளவுதான்…. கொஞ்சம் ப்ரோகிராம்ட் ரோபோன்னும் சொல்லிகலாம்…..சில ஆக்டிவிடீஸ் செய்யும்…. அதை ஃபோன் கால் பிக் அப் செய்ய வைக்கலாம்…” என விளக்கியபடி மித்ரன் இவளை பிடித்திருந்த பிடியை விட்டு தன் மொபைலை எடுத்து  அந்த அறை எண்ணை அழைக்க….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.