(Reading time: 7 - 14 minutes)

01. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ஹாய் .. friends... என்னுடைய நாலாவது கதை இந்த பாயும் மழை நீயே... கொஞ்சம் நகைச்சுவை + காதல் கலந்த தொடரா குடுக்கலாம்னு ட்ரை பண்ணறேன்.. கொஞ்சம் பழைய ... மொக்கை ஜோக்ஸ் ஆ இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.. ப்ளீஸ்.. தொடர்ந்து இந்த கதையும் படிச்சு எனக்கு ஆதரவு குடுப்பீங்கன்னு நினைக்கிறன்.. நன்றி..

ம்மா .. .எனக்கு ட்ரைனிங் ஆர்டர் வந்திருக்கு” என்றபடி வந்தாள் சுபத்ரா... அவளின் சந்தோஷம் அவளின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் அதன் எதிரொலி அவள் அன்னையான ருக்மணியின் முகத்தில் தெரிந்ததா?

அவரின் முகத்தில் பெருமிதம் இருந்தாலும் , அதையும் தாண்டி ஒரு பயமும் ..கவலையும் தெரிந்தது.. அவர் தன் கணவர் கிருஷ்ணன் முகத்தை பார்க்க, அவரோ தன் மகளின் சந்தோஷத்தில் லயித்து இருந்தார். ஒரு பெருமூச்சுடன் மீண்டும் தன் மகள் சுபத்ராவிடம் கவனத்தை திருப்பினார்..

“சொல்லுடா.. சுபா.. “ என்றார்..

“அம்மா.. போன வாரம் நடந்த மெடிக்கல் டெஸ்ட் கிளியர் பண்ணிட்டேன்.. “

“எப்போடா .. கிளம்பனும்..”

“அடுத்த மாசம் ஒன்னாம் தேதி நான் அங்கே இருக்கணும்”

“அதுக்கு இன்னும் ஒரு வாரம் தானே டா இருக்கு “ கிருஷ்ணன் வினவ, ருக்மணியோ

“ஒன்னாம் தேதியா?” என்றவர், “ஏண்டா.. .அதுக்கு அடுத்த நாள் join பண்ணக் கூடாதா?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

“அம்மா.. நான் போறது சாதாரண வேலையா? அதுக்கு எல்லாம் நான் எந்த excuse ம் சொல்ல முடியாது.. “ என்றாள்..

அப்போதுதான் அவர் முகத்தை பார்க்க, அதில் தெரிந்த கவலையில் அவரின் மனம் உணர்ந்தாள்.. இல்லை என்றால் அவர் இப்படி கேட்க கூடியவரா ? என்று எண்ணியவள்..

“அம்மா... இப்போ எதுக்கு உங்களுக்கு கவலை... ? இது சின்ன வயசுலேர்ந்து என்னோட ஆசை  .. தெரியுமில்லியா? அப்போ எல்லாம் என்னை encourage பண்ணிட்டு .. நான் apply பண்ணதுலேர்ந்து சந்தோஷப்பட மாட்டேங்கறீங்களே? ப்ளீஸ் .. முழு மனசோட என்னை அனுப்பி வைக்க பாருங்க “

தன் மகள் மனம் வருந்தவும், தன்னை சரிபடுத்தியவர்

“அது எல்லாம் ஒன்னும் இல்லைடா.. கொஞ்சமே கொஞ்சம் பயம் தான்.. மற்றபடி என் பெண்ணை பார்த்து எனக்கு பெருமை தான்.. என் செல்லம் தான் நினச்சத சாதிச்சுட்டாளே . .முதலில் நான் போய் உனக்கு பிடிச்ச ரொம்ப பிடிச்ச ரவா உருண்டை பிடிக்கிறேன்.. “ என்று தன் ராஜ்ஜியமான சமையல் கட்டிற்கு சென்றார்..

சுபத்ரா .. தன் தந்தைய கேள்வியை பார்க்க அவரோ “ விடுடா குட்டிம்மா... அம்மா கொஞ்ச நேரத்தில் சரி ஆயிடுவா.. நீ உனக்கு வந்த ட்ரைனிங் ஆர்டர் பத்தி சொல்லு .. அப்புறம் உனக்கு வேணுங்கற திங்க்ஸ் எல்லாம் இருக்கா? நாம போய் இன்னிக்கே purchase பண்ணலாமா ?” என்று கேட்க, அவளும் தன் அன்னையிடம் இருந்து கவனத்தை திருப்பி தனக்கு தேவையானதை தன் தந்தையிடம் கேட்டாள்..

ருக்மணி தன் மகளுக்கு பிடித்த ரவா லட்டு பிடித்து மூவருக்குமாக எடுத்து வர, ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்.

கிருஷ்ணன் சொன்னபடி அன்று மாலை மூவருமாக கடைக்கு சென்று தேவையானதை வாங்கினார்கள்..

சுபத்ரா ... கிருஷ்ணன் ருக்மணி தம்பதியரின் ஒரே மகள்.. தன் பெற்றோருக்கு கண்ணின் மணி போன்றவள்.. கிருஷ்ணன் கஸ்டம்ஸ் பிரிவில் உயர் பதவி வகிப்பவர். ருக்மணியோ ஒரு வீட்டு பறவை.. சுபத்ரா தற்போதுதான் B.SC. விஸ்காம் கடைசி வருஷ பரீட்சை முடித்து இருக்கிறாள்.

அவளின் அழகை விவரிக்கும் பொறுப்பை நாம் ஹீரோவிடம் கொடுத்திருப்பதால், இவர்களின் அறிமுகம் மட்டுமே தற்போது போதும்.

அந்த வாரத்தில் ஒருநாள் தன் friends அனைவருக்கும் treat கொடுத்தாள் சுபத்ரா.. சிறு வயதிலிருந்து ஆண், பெண் இருப்பாலர் படிக்கும் பள்ளியில் படித்ததால், அவளுக்கு ஆண் பெண் இரு இனத்திலும் friends அதிகம்.. அதிலும் மகிமா, வருண் , சுபத்ரா மூவரும் பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒரே வகுப்பில் படிப்பவர்கள்.. மற்றவர்களை விட சுபத்ரவிற்கு அதிக நெருக்கம்..

எல்லோரும் அவளை ஆச்சரியாமாக பார்த்தார்கள்.. அவள் friend மகி என்கிற மகிமா,

“ஹே.. சுபா.. எப்படி இத சாதிச்ச.. ? காலேஜ் படிக்கும் போது நீ சொல்லிக்கிட்டு இருந்த சரி.. நீ விஸ்காம் படிச்ச ஆர்வத்தை பார்த்து இதை மறந்துருவன்னு நினைச்சேன்.. ஆனால் சரியா கடைசி செமஸ்டர் முடிச்சவுடனே சொன்ன மாதிரியே செஞ்சுட்ட.. ? எப்படி உங்க அம்மா , அப்பா ஒத்துகிட்டாங்க... “

“எது படிச்சாலும்.. முழு ஈடுபாட்டோடு படிக்கணும்.. விஸ்காம் எனக்கு பிடிச்ச சப்ஜெக்ட் ... அப்புறம் அத எப்படி அரைகுறையா படிப்பேன்.. என் அப்பா, அம்மா எப்பவுமே என் ஆசைக்கு குறுக்கே நிற்க மாட்டாங்க.. மத்தபடி எதுவும் எனக்கு பிரச்சினை இல்லை.. “ என்றவள் மற்றவர்களின் கேள்விக்கும் பதில் சொல்லியபடி இருந்தாள்..

வருண் .. “ஹே... கைமா... (மகிமா.. கைமாவாக மாறியது ) சுராவை (சுபத்ரா .) போட்டு படுத்தாதே.. நீதான் கரப்பான் பூச்சிக்கு பயப்படுவன்னா, எல்லோரும் அப்படி இருப்பாங்களா என்ன..?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.