(Reading time: 13 - 25 minutes)

06. ஹேய்..... சண்டக்காரா... - ஜோஷ்னி

Hey sandakkaara

               உயிர் தொட்ட வலியைக் கனவாக கட்டிவிட்டு,

               உன்னில் தொலைந்த என்னைத் தேடி

               உன் வருகைக்காக,

               உனக்காக...

               காத்திருப்பேன் நான்!!!!

" ரி எல்லா திங்க்ஸையும் ஒழுங்கா பேக் பண்ணியா? அப்பறம் அங்க போயிட்டு, 'மச்சான் இது இல்ல, அது இல்ல..அனுப்பி வை' னு புலம்ப கூடாது” என்று ஹரிக்கு கண்ணும் கருத்துமாக அட்வைஸ் வழங்கிக்கொண்டு இருந்தான் ரவி.

" கடுப்ப கிளப்பாம, பேசாம  ஓடிரு மச்சி!!! " என்று கடுகடுத்தான் ஹரி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

" வொய் திஸ் மச் ஆஃப் கடுப்பு மச்சி? மீ பாவம் க்ரீன் பேபில " என்ற ரவியின் மேல் எம்ப்டி டிராவல் பேக்- ஐ தூக்கி எறிந்தான் ஹரி.

" ஒழுங்கா எண்ட்ரன்ஸ் எழுதி என் கூட எம்‌பி‌ஏ ஜாயின் பண்ணுடானு எவ்ளோ கெஞ்சுனேன். ஒத்துகிட்டியா  நீ..... கொரங்கு!! கொரங்கு!! இப்ப சென்ட் ஆஃப் பண்ண மட்டும் முதல் ஆளா வந்துஉட்கார்ந்து டயலாக் விட்டுட்டு இருக்க "

" உன்ன துரத்தி விடுறதுல அவ்ளோ அக்கற மச்சி " என்று கூறி அடுத்த டிரொலியில் அடி வாங்கினான்.

“ போதும் நிறுத்துடா, ஒரு சின்ன பிள்ளைய எவ்ளோ அடிக்குறதுணு ஒரு வரைமுறை வேண்டாம். நானும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது போதும்.. வலிக்குது.. நிறுதிக்கலாம் ”

“ அதுதுது!! “

“ என்ன நொது?  தப்ப பூரா உன் பக்கம் வச்சுக்கிட்டு, என்னை அடிக்க வந்துட்டான். என்ன கொடுமை சார் இது!! “

" அடேய் " என்று சவுண்ட் விட்டு மீண்டும் அடிக்க ஆயுதம் தேடியவனிடம்,

“ மச்சான், நாலு வருஷம் படிக்குறதுக்குள்ளயே எனக்கு நாக்கு தள்ளிருச்சு. இதுல எக்ஸ்ட்ரா இரண்டு வருசம்னா, அப்பறம் நான் காலிடா. மனித உயிர்-னா உனக்கு அவ்ளோ இளக்காரமா போச்சா!  இதுவே லண்டன சுத்தி பாக்க கூப்டு இருந்தால், இந்நேரம்  குடுகுடுனு ஓடி வந்திருப்பேன். பட், நீ படிக்க கூப்பிடுற மச்சி... என்ன விட்ருருரு....... "

" போய் தொல " என்று கடுப்புடன் அந்த கான்வெர்சேஷன்க்கு முற்று புள்ளி வைக்க முயன்றான் ஹரி கிருஷ்ணன்.

ஆனால் ரவியோ விடாமல் “ நீ பீல் பண்ணாத மாப்ள, நீ படிச்சு முடிச்சு  இந்தியா வந்ததும்  நாம சேர்ந்தே பிஸ்சினேஸ் ஸ்டார்ட் பண்ணலாம் ” என்று கூற

" இப்பவே கிழியுதாம், ரெண்டு வருஷம் அப்புறம் உள்ளதை பேசுறான் " என்று பல்லை கடித்தான் ஹரி.

மீண்டும் அடி வாங்க ஆயத்தமானாவனை ஆபத்பாந்தவராக காப்பாற்றினார் மகேஸ்வரி.

“ ரெண்டு பேரும் அப்பறம் விளையாடுங்க. இப்ப இது எல்லாம் போதுமானு பாத்து சொல்லுப்பா ” என்று கூறி ஹரி பேக்கில் இரண்டு மூன்று பெரிய சைஸ் ஜிப் லாக் கவரை வைத்துவிட்டு, இருவரிடமும் ஆளுக்கு ஒரு பௌலில் எடுத்துவந்த ஜாமூனை கொடுத்தார்.

“திஸ் இஸ் டூ மச் மா, எப்ப பாரு என்னை  கோவப்பட விடாம எதாதும் குடுத்து கரெக்ட் பண்ணிடுறது. ஸ்வீட் மம்மி.. என்ன இது? " என்று  கவரை பார்த்தவன் கண்ணில் மிக்ஸிங்க் பொடி மற்றும் இன்ன பிற ஹோம் மேட் உணவு பொருட்கள் இருக்க

“ என்னது மறுபடியும் முதல இருந்தா? ” என்று தலையில் கை  வைத்தான் ஹரி.

“ ஸ்கூல் ஹாஸ்டல்ல சேம் போடி. ஒரு வழியா விடுதலைனு நினைச்சால், இப்போ திரும்பவுமா? வாழ்க்கை  ஒரு வட்டம்டா!!!! “

“ அடப்பாவி!!! அம்மா உங்க மிக்ஸிங்க் பொடியாலதான் நான்  ரெண்டு வருஷம் ஓட்டணும்னு எல்லாம் ரெடி பண்ணிருங்கணு போன வாரம் தான் டா சொன்ன.. ”

“ சொன்னேன்???? “

“ சொன்னடா “

““ ஓ.. அது ஏதோ மறந்து சொல்லிருப்பேன் மா ”

“ நன்றிகெட்ட மகனே!!! அப்போ என்னோட சமையல, ஆஹா ஓஹோனு புகழ்ந்து பாராட்டி சொன்னதுலாம் பொய்யா!!!! அங்க போய் காஞ்சுபோன ரொட்டிய திண்ணு என்ஜாய் பண்ணு ” என்று எல்லா கவரையும் எடுத்து செல்ல எத்தனித்தவரை கழுத்தோடு கட்டிக்கொண்டு, “ சும்மா சொன்னேன் மகி மா இதுக்கு போய் கோவிசுக்கலாமா.. உங்கள ரொம்பபபபபப மிஸ் பண்ணுவேன் " என்று குரல் இறங்கியவனை என்ன கூறி சமாளிப்பது என்று தடுமாறியவர்,  “ அதுலாம் பாத்துக்கலாம் நீ ஃபர்ஸ்ட் பாக்கிங் முடி நான் போய் உங்க மாமாவ பாத்துட்டு வரேன் ” என்று கையில் இருந்த கவரை அவன் கையில் திணித்து விட்டு சென்றுவிட்டார்.

கண்ணன் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்து இருந்த நிலையில்,  ஹரி  அவன் எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் பாஸ்ஸாகி மேல் படிப்பிற்காக இதோ லண்டன் கிளம்பி கொண்டு இருக்கிறான். அவனை துரத்திவிட, சாரி சாரி அனுப்பிவிட தான் குடும்பத்தில் அனைவரும் அட்டெண்டன்ஸ் போட்டு உள்ளனர். மகதி மற்றும் அனு டிவெல்த் அண்ட் டென்த் என்பதால் அவர்களுக்கு எளிதாக லீவ் கிடைக்கவில்லை. அதனால் அவர்களை கவனித்துக்கொள்ள என பார்வதியும் விஜயலக்ஷ்மியும் இருந்துவிட சங்கரனும் செந்திலும் ஹரியை வழி அனுப்ப கோவை வந்துள்ளனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.