(Reading time: 25 - 50 minutes)

24. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

ம்மேலே ஒரு கண்ணு...

நீதான் என் முறைப்பொண்ணு...

உன்னோட இவன் ஒன்னு...

உன்னை பிரிஞ்சா வெறும் மண்ணு...

இருக்குறேன் உன்னால....

பறக்குறேன் தன்னால...

கிறங்குறேன்... நொறுங்குறேன்...

பாரு நான் உன் மாப்பிள...

சீரியஸா தேவா பாட்டுப் பாடிக் கொண்டு நின்றிருக்க... அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் சங்கவி...

அவள் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதை பார்த்த அவன்... என்ன என்று கண்களாலேயே கேட்டான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

"என்ன கூலா பாட்டுப் பாடிக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்க... அதுவும் இங்க.. அங்கப் பாரு சம்யூ தனியா நின்னுக்கிட்டு இருக்கா... அவளோட இருக்க வேண்டியது தானே..." என்று கவி கேட்டதும் அவளை முறைத்தான் அவன்...

இரண்டுப்பேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்களே... ரெண்டுப்பேரையும் எங்கேயாவது வெளியக் கூட்டிக்கிட்டு போகலாம் என்று தேவா அவர்களை ஷாப்பிங் அழைத்துக் கொண்டு வந்தான்....

அந்த துணிக் கடையில் நுழைந்ததும்... கவி ஒரு பக்கமும்... யுக்தா ஒரு பக்கமும் ஆடையை தேர்ந்தெடுக்க சென்றனர்... தேவா எங்கு போவது என்று தெரியாமல் முதலில் முழித்தான்... அவன் அவர்களை அழைத்து வந்ததே யுக்தாவின் மன மாற்றத்திற்காக தான்... அதனால் யுக்தாவோடு போய் ஆடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க...

"தேவா... நீ என் கூட ஸ்பெண்ட் பண்ணத்தான் ஷாப்பிங் வந்தியா...?? அங்கப் பாரு உன்னோட ஆள... அவளுக்கு அந்த மெட்டிரீயலே பிடிக்காது... இருந்தும் நம்மக் கூட நிக்காம அங்க நின்னுக்கிட்டு இருக்கா... போய் அவக்கூட நில்லு..." என்று அனுப்பி வைத்தாள்.

இவனும் கவி அருகே வந்து நின்று... "சங்கு இந்த ட்ரஸ் உனக்கு நல்லா இருக்கும் ட்ரை பண்ணிப் பாரேன்..." என்று அவன் எடுத்துக் கொடுத்ததையெல்லாம் அவள் நிராகரித்தாள்.. சரி இந்த டி.வி ல காமெடியா சொல்றது போல பொண்ணுங்க கூட வந்தா வெறும் பாடிகாட் மாதிரி அவங்க செலக்ட் பண்ற வரைக்கும் நிக்கனும் போல... என்று நினைத்தவன்... அதுவரைக்கும் நம்ம ஆளுக்கு பாட்டு மூலமா நம்ம காதலை தெரியப்படுத்துவோம் என்று நினைத்து தான் பாடிக்கொண்டிருந்தான்... அவளோ திரும்பவும் யுக்தாவோடு போய் நிற்க சொல்கிறாளே என்று கடுப்பானான்.

"உங்க ரெண்டுப்பேருக்கும் என்ன பார்த்தா எப்படி தெரியுது... அங்க நின்னா கவிக்கிட்ட போன்னு அவ சொல்றா... நீ அவக்கிட்ட போன்னு சொல்ற... ஹலோ மேடம் ஷாப்பிங் கூட்டிட்டு வந்தது நானு..." என்றான்..

"ஆமாம் ஆமாம் தெரியும்... பின்ன நாங்க எடுக்குற ட்ரஸ்க்கெல்லாம் நீ தானே காசு கொடுக்கப் போற... அதனால எங்களுக்கு கண்டிப்பா தெரியும்... இந்தா இத நான் அவளுக்கு செலக்ட் பண்ணேன்... இத அவக்கிட்ட கொடுத்துட்டு...  அவ எனக்கு செலக்ட் பண்ணி வச்சிருக்கறத வாங்கிட்டு வா..." என்றாள் சங்கவி.

"ரெண்டுப்பேரும் பேசிக்கலன்னாலும் இதுக்கெல்லாம் குறைச்சலில்ல..." என்றவன் அந்த ஆடையை வாங்கிக் கொண்டு யுக்தாவிடம் போக... கவியோ சிரித்துவிட்டு...

உம்மேலே ஒரு கண்ணு...

நான் தான் உன் முறைப்பொண்ணு...

உன்னோட இவ ஒன்னு...

உன்னை பிரிஞ்சா வெறும் மண்ணு...

என்று அவன் விட்ட பாடலை அவள் பாட... பின் அந்த பாடலின் அர்த்தம் அவள் மனசுக்குள் மறைத்து வைத்திருக்கும் காதலுக்கு ஏற்ற வார்த்தைகளாக இருக்க... இதை கேட்டால் அவன் என்ன நினைப்பான்... என்று பாடுவதை நிறுத்திய கவி... இவ்வளவு நேரம் அவன் இந்த பாட்டை பாடியது சாதாரணமாகவா.. இல்லை வேண்டுமென்றே பாடினானா...?? என்ற சிந்தனைக்கு போனாள்... சில நாட்களாகவே தன்னிடம் பேசும்போது அவன் பேச்சிலும் செய்கையிலும் மாற்றம் இருப்பதை போல் உணர்ந்தாள்... பின் அதெல்லாம் தன் கற்பனையாக இருக்கும் என்று தன் சந்தேகத்தை கைவிட்டாள்...

கவி கொடுத்த ஆடையை எடுத்துக் கொண்டு யுக்தாவிடம் சென்ற தேவா அவளிடம்... "யுக்தா நீ செலக்ட் பண்ற ட்ரஸ் சங்குக்குன்னு என்கிட்ட சொல்லியிருந்தா... அதை நானே செலக்ட் பண்ணியிருப்பேன்ல..." என்று கூறினான்.

"வழக்கமா எங்க பழக்கம் அதுதான்... நான் அவளுக்கு செலக்ட் பண்ணுவேன்.. அவ எனக்கு செலக்ட் பண்ணுவா... அதனால நீ இதுல குறுக்க வராத...  நீங்க தனியா ஷாப்பிங் வருவீங்கல்ல... அப்போ செலக்ட் பண்ணிக் கொடு... இப்போ நான் செலக்ட் பண்ணத அவக்கிட்ட கொடு..." என்று அவள் தேர்ந்தெடுத்த ஆடையை அவனிடம் கொடுத்தவள்... " இது தான் எனக்கு செலக்ட் பண்ண ட்ரஸ்ஸா... கொடு நான் ட்ரயல் பார்த்துட்டு வரேன்..." என்று அவனிடம் இருந்து அதை வாங்கிக் கொண்டு ட்ரயல் ரூம்க்கு போனாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.