(Reading time: 11 - 22 minutes)

06. வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

விக்ரமுடனான அந்த 4 நாட்களும் சிட்டாய் பறந்து போனது ரஞ்சிக்கு .... அவளின் தாய் போன்ற அரவணைப்பு 

கவனிப்பு அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது ... மனம் முழுவதும் காதலாய் அவன் சந்தோஷ வானில் பறந்து கொண்டிருந்தான் ..

அவர்களுடைய பேக்டரி இல் தொழிலாளர் பிரச்சனை என்று போன் வந்ததும் கண்ணம்மா மாமா போவேனாம் அங்கே பிரச்சனை சரி செய்வேனாம் ... அம்மா கிட்ட நம்ம பத்தி சொல்வேனாம் ... அப்புறம்  டும் டும் டும் தானாம் ...

அவன் சொல்ல இவள் செவ்வானமாய் சிவந்து போனால் ...

நீ படிக்கணும்னு எனக்கு தெரியும் ஆனா உன்னை விட்டு என்னால் இருக்கவும் முடியாது சோ கல்யாணம் செய்துவிட்டு நீ படிப்பாயாம் ..

சாத்தியமா நான் உன்னை தொந்தரவு செய்யாமல் படிக்கவிடுவேனாம் ... அவன் சொன்ன விதத்தில் ஆயிரம் கற்பனை இவளுள் ..

அவன் சென்று மூன்று நாட்கள் ஆனது இவள் பாதமோ தரையில் இல்லாமல் பறந்தது மனமோ ஒரு நிலையில் இல்லாமல் இருந்தது ...நிலை கொள்ளாமல் தவித்தாள் .. அவன் எப்படியும் அவன் அம்மாவை சம்மதிக்க வைத்து விடுவான் தன் வீட்டில் எவ்வாறு கூறுவது என பல பல எண்ணங்கள் அவளுள் ..

நாட்கள் இப்படியாய் நகர ..கடிகாரம்கூட மெதுவாய் நகர்வதை போல் உணர்ந்தாள் ..

அன்று காலை முதலே ஒரு வித படபடப்புடன் இருந்தவள் அவன் வீட்டிலிருந்து போன் என்ற உடன் துள்ளி குதித்து கால் அன்ஸ்வெர் பண்ணினாள் 

அந்த பக்கம் ஒரு கம்பீரமான பெண்குரல் ப்ரபஞ்சனி தானே பேசுவது என்றது ... பள்ளிக்காலங்களில் வருகை பதிவேடு தவிர இவள் பெயரை யாரும் இப்படி அழுத்தம் திருத்தமாய் அழைத்தது இல்லை ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்...

எச்சில் விழுங்கி கொண்டே ஆமா  என்க .... ( அந்த குரலின் கம்பீரம் தானாகவே பணிவை வரவழைத்தது ..)

நான் உன்னை பார்க்கவேண்டும் நீ இங்கே வர முடியுமா இல்லை உனக்கு சவுகர்ய படும் இடம் சொல்லு நான் வருகிறேன்..

இல்லை நானே வருகிறேன் ..... போன் வைத்தவள் அவசர அவசரமாக புடவை உடுத்தி கிளம்பினாள்...

மனம் முழுக்க ஒரே சந்தோசம் விக்ரம் அம்மாவிடம் பேசிவிட்டான் .... அவர்கள் அம்மா இவளை பார்ப்பதற்காக அலைகிறார்கள் போனவுடன் எல்லாமே விக்ரம் பார்த்துகொள்ளவன் ... இவளால் வீட்டிலும் அவனே பேசிவிடுவான் .. இனி என்ன கல்யாணம் தான் .... இனி எல்லாம் சுகமே என சந்தோஷமாய் சென்றால் ..

திருமண மலர்கள் தருவாயா 

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே 

தினம் ஒரு கனியே தருவாயா 

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே 

மலர்வாய் மலர்வாய் கொடியே 

கனிவாய் கனிவாய் மரமே 

நதியும் கரையும் அருகே 

நானும் அவனும் அருகே 

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை 

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை 

திருமண மலர்கள் தருவாயா 

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே 

தினம் ஒரு கனியே தருவாயா 

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே 

தாலி கொள்ளும் பெண்கள் 

தாயை நீங்கும்போது 

கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு 

மாடி கொண்ட ஊஞ்சல் 

மடிமேல் கொஞ்சும் பூனை 

சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு 

அந்த நிலை இங்கே இல்லை 

அனுப்பி வைக்க வழியே இல்லை 

அழுவதற்கு வாய்ப்பே இல்லை 

அதுதான் தொல்லை 

போனவுடன் கடிதம் போடு 

புதினாவும் கீரையும் சேரு 

புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை 

ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.