(Reading time: 15 - 30 minutes)

05. ஊனமறு நல்லழகே - ப்ரியா

oonamaru-nalazhage

ரவு மணி இரண்டான போதும் மிதுர்வன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.. காலையில் அவன் வீட்டை விட்டு கிளம்பி சென்றதில் இருந்து அனைத்தையும் நூறாவது முறையாக மனதில் அசைப் போட்டு கொண்டிருந்தாள் ஸ்ரவந்தி.

மதுமதி அவளை மெல்ல அழைத்துக் கொண்டு வந்து வற்புறுத்தி சாப்பிட வைத்திருந்தார். வலி இல்லை என்று சொன்ன போதும் அவள் காலில் சுருக்கென்ற வலி எழும் போதெல்லாம் அவள் புருவும் சுளிப்பதை பார்த்தவர் மனம் வருந்தினார்.

'என்ன இந்த பொண்ணு வலிக்குதுன்னு வையை திறந்து கூட சொல்ல மாட்டேன்கிறாளே?! இவளை பத்தி நம்ம மிது சொன்னது ஓரளவு உண்மை தான் போல, இவளை அவன் கட்டாயம் கல்யாணம் பண்ணிட்டு வந்ததில் தப்பே இல்லை' என தனக்குள் பேசிக் கொண்டார்.

இரண்டு இட்லிகளை அவள் சாப்பிடும் வரை அமைதி காத்தவர் இன்னொன்றை அவள் தட்டில் வைக்க, தயக்கத்துடன் மறுப்பாக தலை அசைத்து மாடியில் தங்கள் அறையை பார்த்தாள்.

மிதுர்வன் இன்னும் சாப்பிடவில்லையே என்ற கவலை அவள் முகத்தில் தெரிய, அதை கவனித்த மதுமதி

"அவன் மூட் இப்போ நல்ல இருக்காது மா, கொஞ்ச நேரம் அவனை அவன் போக்கிலேயே விடலாம், சரி ஆகிடுவான்"

"ம்ம்ம்ம்" இன்னமும் அவள் முகத்தில் தயக்கமும் குழப்பமும்.

"என்னமா?" மதுமதி அன்பாய் வினவ,

"அந்த போட்டோ.. அதில் இருக்கிறவங்க அவருக்கு வேண்டியவங்களா அத்தை?! என்னால தான் அது ஒடஞ்சு.. ப்ச் பாவம் அவர் இப்போ டென்ஷன்ல இருக்கார்"

"அந்த பொண்ணு அவனோட"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

மதுமதி சொல்வதற்குள் மிதுர்வன் படிகளில் இறங்கி வரும் சத்தம் கேட்க, சட்டென எழுந்து விட்டாள் ஸ்ரவந்தி. அவன் மதுமதியை பார்த்து வேண்டாம் என கண்களால் சொல்லி விட்டு, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்.

அவன் வாசலுக்கு போக, சாப்பிடாமல் செல்கிறான் என ஸ்ரவந்தி அவனை அழைக்க பின்னே நொண்டி கொண்டே செல்ல, அவள் கொலுசின் சத்தம் கேட்டு திரும்பியவன்,

"டேக் கேர்" என சொல்லி தலையசைத்து விடை பெற்று கொண்டான். அவளும் ஒன்றும் சொல்லாமல் திரும்பி விட்டாள்.

அதன் பின் ஒரு பெண் மருத்துவரை வீட்டிற்கு வரவழைத்து அவர் வந்து அவள் காலை பார்த்து கட்டு போட்டு விட்டு மருந்துகளையும் தந்து சென்ற பின்னர் அவள் அறையை விட்டு வெளியே வர மதுமதி அனுமதிக்கவே இல்லை.

பகலில் கொஞ்சம் தூங்கியவளை தொந்தரவு செய்யாமல் அவள் விழித்ததும் அவளுக்கு மதிய உணவை அவள் அறைக்கே கொடுத்து அனுப்பி விட்டார். அதன் பின்பு அவரும் சரளாவும் மாலை அவளுடன் கொஞ்ச நேரம் செலவழித்து விட்டு இரவு உணவை தயார் செய்ய கீழே சென்று விட மீண்டும் கிடைத்த தனிமையில் யோசித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரவந்தி.

அதன் பின் இரவு உணவும் மதுமதியின் வற்புறுத்தலில் தான் நடந்தது.

வாசலில் கார் சத்தம் கேட்டு நினைவுகளில் இருந்து வெளி வந்தாள் ஸ்ரவந்தி.ஜன்னலின் வலி கீழே பார்த்தாள். மிதுர்வன் தான் வந்து கொண்டிருந்தான்.

அவசரமாக ஆனாலும் நொண்டி கொண்டே படி இறங்கி வந்தவள் தெரியாமல் காலை ஊன்றி விட வலியில் முகம் சுருங்க நின்றவளை ஓடி வந்து தாங்கி கொண்டான்.

"என்னடா? எதுக்கு இவ்ளோ அவசரம்" அவன் குரலில் அன்பும் களைப்பும்.

"இல்ல உங்களுக்கு சாப்பாடு"

"ஹ்ம்ம் நான் போட்டு சாப்பிட்டுக்க மாட்டேனா? நீ என்ன என் அடிமையா?"

"அதுக்கு இல்ல இவ்வளவு நேரம் கழிச்சு வந்துருக்கீங்க.. பசியோட இருப்பீங்க அதான்.."

அவள் தன்னிடம் திணறல் பேசுவதை கவனித்தவன் மேன்மையை புன்னகைத்தான்.

"ஹ்ம்ம் ஆமாம் பசி தான்.. ஆனால் உனக்கும் கால் வலி இருக்குல்ல என்னை கவனிக்கறதுக்கு முன்னாடி நீ உன்னை கவனிச்சுக்கோ அப்போ தான் தெம்பா என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக்க முடியும் சரியா?"

"ம்ம்ம்.. சாப்பிட வாங்க"

"இரண்டே நிமிஷம் டா குளிச்சிட்டு ஓடி வந்துடறேன் நீ அது வரைக்கும் எதும் பண்ணாம இப்படியே உட்கார்ந்திட்டு இரு போதும் நான் வந்து பாத்துக்கறேன்" என கூறி விட்டு மாடி ஏற போனவன் திரும்பி,

"நீ சாப்பிட்டாயா?" என்று கேட்க,

அவனையே பார்த்து கொண்டிருந்தவள்,

"அது அத்தை தான் சாப்பிட சொல்லி அதனால சாப்பிட்டேன்" என தயங்கி சொல்லவும்.

"வெரி குட் கேர்ள், நீ சாப்பிடலைன்னு சொல்லி இருந்த இப்போ ஏதாவது ஒடஞ்சுருக்கும்" என சொல்லி சிரித்து விட்டு அறைக்கு சென்று விட்டான்.

சப்பாத்திகள் ஆறி போயிருக்க, அவனுக்காக அவசரமாக தோசை வார்த்து சப்பாத்தி குருமாவை சுட வைத்து மிளகாய் பொடியும் நெய்யும் கலந்து வைத்தாள். கீழே வந்தவன் கையில் ஒரு பெட்டி இருக்க, அவசரமாய் பரிமாறியவளை செல்லமாக முறைத்து கொண்டே

"நான் தான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல, கேட்கவே மாட்டியா நீ?"

என கேட்டு கொண்டே அவளை அமர வைத்து தானும் அமர்ந்து அவள் காலை பற்றி மடியில் வைத்து கொண்டான். அவள் பதறி கால்களை எடுக்க, மீண்டும் எடுத்து வைத்து இறுக்கமாய் பிடித்து கொண்டே காயத்திற்கு போடப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து ஆராய்ந்தான். கொஞ்சம் ஆழமாக தான் இருந்தது ஆனால் தையல் போடுமளவுக்கு இருக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.