(Reading time: 14 - 27 minutes)

06. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

னியார் மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவ பிரிவு! ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தான் தமிழ். சொந்த வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் இங்கு வரும் சிறுவர் சிறுமியரை பார்த்ததுமேஅவை யாவும் மறந்துவிடும் அவனுக்கு! அன்றும் அப்படித்தான்..! கவலைகள் அனைத்தையும் மறந்துவிட்டு காஃபி குடித்துக் கொண்டு இருந்தான். ஆனால் விதி அவனை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுமா?இதோ செல்ஃபோனில் வந்து கொண்டிருந்தது அடுத்த பிரச்சனை. செல்போன் திரையில் “அம்மா” என்று பெயரை பார்த்ததுமே ஒரு நொடி முகம் கனிந்தான் தமிழ். உடனே நேற்று யாழினியின் பிறந்தநாளுக்கு அவர் வர மறுத்தது நினைவு வரவும் முகத்தில் கடுமை பரவிட ஃபோனை எடுத்தான்.

“கண்ணா”

“ம்ம்”

“அம்மா பேசுறேன்பா”

“தெரியுது சொல்லுங்க”

“உன்னை பார்க்கனும் போல இருக்கு கண்ணா”

“ நேற்று உங்களை யாழினியோட பெர்த்டேக்கு கூப்பிட்டேனே, அப்போ என்னை பார்க்கனும்னு தோனல தானே மா?”

“..”

“என்னால இப்போ வரமுடியாது..நிறைய வேலை இருக்கு”

“ நாங்க உன் ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கும் கோவிலில் தான் கண்ணா இருக்கோம்” என்று இறைஞ்சலுடன் பதில் அளித்தார் மனோன்மணி .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“ ஓ.. அப்பாவும் வந்துருக்காரா?”

“ம்ம்ம் இருக்கார் கண்ணா..நீ ஒரு அஞ்சு நிமிஷம் வந்துட்டு போயேன்” என்று அவர் கூறும்போதே பக்கத்தில் இருந்து கர்ஜித்தார் சுதாகர்.

“ உன் மகன் என்ன பெரிய துரையா? கண்டவங்கிட்டயும் நீ எதுக்கு கெஞ்சிட்டு இருக்க மனோ..? என் பொண்டாட்டி யாருக்கிட்டயும் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை.. வா போகலாம்” என்று அவர் கூற மனோவும் அவரை சமாதானப்படுத்த முயல, ஹாஸ்பிட்டல் எதிரில் இருந்த அந்த கோவிலை ஓட்டமும் நடையுமாய் சென்றடைந்தான் தமிழ். அங்கே இருந்த தனது தந்தையின் கார் அருகே கைக்கட்டி நின்று கொண்டிருந்தான் அவன்.

கணவனை சமாதானப்படுத்த முடியாமல் தவித்தப்படி அவரைப் பின் தொடர்ந்த மனோ தமிழைப் பார்த்து அகமலர்ந்தார்.

“ கண்ணா”

“ அம்மா… எப்படி இருக்கீங்க?”

“ நான் நல்லா இருக்கேன் கண்ணா..என் மேல ரொம்பவும் கோபமாடா?”

“ இல்லன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா நீங்க என் அம்மாவாச்சே.. எப்படி கோபத்தை பிடிச்சு வைக்க முடியும்?”

“ ரொம்ப புத்திசாலிதான் உன் பையன்.இப்படி வியாக்கானம் பேசுறவன்,எதுக்கு டீ மாமனார் வீட்டுலேயே இருக்கனும்?”

“ ஹா ஹா இதுக்காகத்தான்..! யாழினியின் அப்பாவை என் மாமனார்ன்னு சொல்ல ஆரம்பிச்ச அப்பா கூடிய சீக்கிரம், யாழினியை தன்னோட மருமகள்ன்னு சொல்லட்டும்.. அடுத்த நிமஷம் வீட்டுக்கு வந்துடுறேன்னு சொல்லுங்கம்மா”

“ ஒரு காலத்துல பேசவே கூலி கேட்பான் உன் பையன்.. ஆனா இப்போ எதிர்ல பேசுறவங்களோட வாயடைக்க பார்க்கிறான்.. எல்லாம் டீச்சரோட ட்ரேன்னிங்”என்று நக்கலாய் சுதாகர் கூறவும் தமிழுக்கு கட்டுகடங்காமல் கோபம் வந்தது. அவர் விழியோடு விழியால் தாக்கிடும் படி, அனல் கக்கும் பார்வையுடன் அவரெதிரில் நின்றான் தமிழ்.

“ என்ன பிரச்சனை அப்பா உங்களுக்கு ?”

“..”

“ நான் நீங்க வளர்த்த பையன்பா”

“..”

“ இத்தனை வருஷமாய் வளர்த்த மகனை, நேற்று வந்த பொண்ணு மொத்தமாய் மாற்றிட்டான்னு சொல்ல வாய் கூசலையாப்பா?”

“..”

“மொத,ஃபோன்ல என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்காப்பா? என் பொண்டாட்டி யாருக்கிட்டயும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லன்னு சொன்னிங்களே! என் அம்மாவுக்கு நான் யாரோவா? என் அம்மாக்கூட சண்டை போட எனக்கு உரிமை இல்லையா? உங்க பொண்டாட்டி மேல உங்களுக்கு அளவு கடந்த பாசம்.. பெத்த பையனாவே இருந்தாலும் நான் அவங்க மனசு நோகுற மாதிரி பேச கூடாதுன்னு நினைக்கிறிங்களே! அதே மாதிரி என் பொண்டாட்டிக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கனும்ன்னு நான் நினைக்க கூடாதாப்பா?நான் உங்க மகன்..நீங்க அம்மாவை எப்படி எல்லாம் பார்த்துக்குறிங்கன்னு பார்த்துப் பார்த்து வளர்ந்தவன்.. உங்க குணம் எனக்கு இருக்குறது தப்பா சொல்லுங்க ?”

“..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.