(Reading time: 16 - 32 minutes)

26. காதல் பின்னது உலகு - மனோஹரி

Kadhal pinnathu ulagu

த்தனையாய் மகன் ஒத்துக் கொண்ட பின்பு அன்று மரகதம் பவியைப் பார்க்க போகாமல் இருப்பது எப்படியாம்…? ஆக அன்று லன்ச் பவிக்கு அபை நினைத்தது போல் இவன் வீட்டில் இருந்துதான் சென்றது…….கொண்டு போனது சாட்சாத் மரகதமே தான்….

ஆனால் மகனைத்தான் கூட வர மறுத்துவிட்டார்….

“உள்ளூர்ல இருந்துட்டு போய் போய் பார்த்துகிட்டு இருந்தா, விஷயம் எப்ப எப்டி யார் வாய்ல விழும்னு சொல்ல முடியாது…. கொஞ்சம் கையையும் காலையும் வச்சுகிட்டு சும்மா இரு…..இது உன் விளையாட்டு மாதிரி விஷயம் இல்ல….இதுல தப்பா போனா அதுல சரி செய்துகலாம்னு நினைக்கதுக்கு….அப்பாவ சீக்கிரமா பவி வீட்ல போய் பேச சொல்றேன்…..அதுவரைக்கும் வம்பு தும்புக்கு போகாம  இரு….” என மொத்தமாய் அவனை கட்டி வேறு போட்டார்…

பவிக்கோ அன்று மரகதம் அவளை தேடி வரவுமே விஷயம் முழுவதுமாய் புரிந்துவிட்டது…. அதுவும் அபயனும் கூட வரவில்லை என்றதும் விளக்கம் எதுவுமே தேவைப் படவில்லை அவளுக்கு….. அவன் வீட்டிற்கு விஷயம் தெரிந்து முழு சம்மதமுமே கிடைத்துவிட்டதென புரிகிறதுதானே…

ஆக மரகதத்தின் இயல்பான பார்வையை பார்க்கவே தடுமாறினாள் பெண்….

ஓபி முடித்துவிட்டு ஸ்டாஃப்கான ரூமிற்கு இவள் சென்றபோது ஒரு நர்ஸ் வந்து “உங்கள மேல சாரோட ரூமுக்கு வர சொல்றாங்க…” என அதிபன் ரூமுக்கு செல்ல சொன்னபோது இவள் எதிர்பார்த்தது அபயனைத்தான்….. ஆனால் அங்கு மரகதத்தைப் பார்க்கவும் ஒரு கணம் பக்கென்றாலும் அடுத்து அனைத்தும் அதாய் விளங்க……இப்பொழுது ஒருவித பொங்கும் பூரிப்பும் கூடவே தன் வருங்கால மாமியாரை இப்போது எப்படி அழைக்க என்ற தவிப்புமாய் இவள்…..

அவர் “வாம்மா பவி….” என இயல்பாய் ஆரம்பித்துவிட்டார்…

இவள் என்ன சொல்ல வேண்டும்…?

மெல்ல மொட்டையாய் “வாங்க…” என இவளும் சொல்லி வைக்க….அவருக்கு இவள் தடுமாற்றம் புரியாமல் இல்லை…

“வினி மாதிரிதான்மா நீயும் எனக்கு…சும்மா அவள மாதிரியே கூப்டு…” என இவள் யூகத்தை நச்சென கன்ஃபார்ம் செய்து கொடுத்தாலும் அடுத்து இவளை இன்னுமாய் வெட்க சங்கடத்தில் தள்ள விரும்பாமல் மரகதம் வினியைப் பற்றியும்…பவி வீட்டைப் பற்றியும் என அவைகளையே பேசி விட்டு கிளம்பிவிட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அதோடு வருகின்ற அறுவடை திருநாளுக்கு பவி வீட்டை விருந்துக்கு அழைக்க வருவதாக ஒரு கூடுதல் தகவல் கொடுத்துவிட்டுப் போனார்.

னுவை அன்று ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டில் கொண்டு வந்து விட்டு கிளம்பிய அதிபன், அவசர தேவை எதற்காகவும் தன்னை அழைக்க சொல்லி தன் மொபைல் நம்பரை அனுவுக்கு கொடுத்துவிட்டு அவளது எண்ணையும் வாங்கி வந்திருந்தான்….

அவனுக்கு அனுவை அப்படி அடுத்த வீட்டில் விட மனமே இல்லை…. இங்கு இவன் வீட்டில் இருந்தால் எப்படியும் இத்தனை பேர் இருப்பார்களே பார்த்துக் கொள்வதற்கு என்றிருக்கிறது…..இப்போது என்றால்?

அனுவால் நடக்க முடியாது…கனி ஆன்டிக்கு பார்வை கம்மி…. அனுவோட கசின் வேறு இன்று கிளம்பியாக வேண்டுமாம்….

ஆக முதலில் அழைத்தால் அனு எப்படி எடுத்துக் கொள்வாளோ என சற்று யோசனையாக இருந்தாலும்…. அவளிடம் பேசி அங்கு எல்லாம் சுமுகமாக இருக்கிறது என உறுதியாய் தெரியாமல் இவனால் படுக்கையில் படுக்க கூட முடியாது என தோன்றிவிட அவளுக்கு அழைத்தான்…

வெறும் இயல்பான விசாரிப்புகள் தான்…. “எல்லாம் கம்ஃபர்டபிளா இருக்கா….?...எதாவது வேணுமா…?.... மெடிசின் சாப்டியா….?பெயின் இல்லதான….? ஆன்டி படுத்துட்டாங்களா…? இப்படியாய் ஆரம்பித்த விஷயம்..

அடுத்து தினம் தோறும் காலை மதியம் இரவு என்று மூன்று தடவை என்றாகி….. “தூத்துகுடி போறேன்…. உனக்கு பெயிண்ட்ஸ் வாங்கி ஈவ்னிங்குள்ள அனுப்பி வைக்கேன்…. இன்னைக்கு மோகனோட எங்கேஜ்மென்ட்னு சொன்னேன்ல….அவனுக்கு என்ன கிஃப்ட் வாங்னா சரியா இருக்கும்….? ஃபங்க்ஷன் அட்டென்ட் செய்துட்டு  லேட்டாதான் வருவேன்……நீ விழிச்சுறுந்தா உனக்கு கால் பண்றேன்….” என்ற நிலைக்கு வந்திருந்தது…..

அனுவுக்கு க்ளாஸ் பெயிண்டிங்கில் இஷ்டம் உண்டு என தெரிந்து அவள் பெட்டில் இருக்கும் நேரம் போர் அடிக்க கூடாதென அவளை வரைய சொல்லிக் கொண்டு இருந்தான் அதிபன்.

அனுவுக்கோ யாருடனும் பழக இருந்த பயம் அதிபன் விஷயத்தில் இல்லை என்பதாலும், கனி மொழியே இவர்கள் பேசுவதை வெகு இயல்பாக எடுத்துக் கொண்டதாலும்….அதிபன் மேல் வந்திருந்த ஒரு நட்பு உணர்வாலும் அதிபனிடம் இயல்பாகவே பேச முடிந்தது……

பெரிய இழப்பில், ஒரு வகையில் ஆழ்ந்த வெறுமைக்குள் விழுந்து கிடந்த அவளுக்கு இந்த உறவு, உள்ளுக்குள் காயம் இருந்தாலும்….காயம் மீது முதலில் படர்ந்து மூடும் முதல் நிலை கரும் பொக்கு தோல் போல், காயம் பட்ட மனதிற்கு வலியற்ற மூடல் உணர்வு தந்தது.

அதிபன் தினமும் அனு வீட்டிற்கெல்லாம் போக மாட்டான்….அது கொண்டல்புர சூழ்நிலையில் இயலாத காரியம்…

ஆனால் அவளை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிப் போகவேண்டிய நாளில் மட்டும் வருவான். மீண்டும் கொண்டு வந்துவிடும் போது சற்று நேரம் அங்கு இருந்து அவள் வரைந்த பெயிண்டிங்ஸ் பார்ப்பவன்….கனி ஆன்டியையும் கூட்டி வந்து தங்கள் அருகில் வைத்துக் கொண்டு இருவரிடமாக பேசிக் கொண்டிருப்பான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.