(Reading time: 18 - 36 minutes)

11. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

த்தனை நேரம் அப்படியே இருந்தாளோ தெரியாது… தாமதமாக தன்னுணர்வு பெற்றவள், அவனைப் பார்க்க, அவன் அங்கிருந்த ஒரு மரத்தில் கைகளை குத்திக்கொண்டு நிற்பது கண்ணில் பட்டது…

அவனது கோபத்தினை அந்நேரம் மாற்ற எண்ணியவள்,

அவனின் முன் வந்து, “இங்க வந்து இப்படி மரத்தை குத்திட்டு அப்படியே கோபப்பட்டு கத்திட்டா நான் பேசாம போயிடுவேன்னு பார்த்தீங்களா?... என்னை யாருன்னு நினைச்சீங்க?.. நான் சதி… இந்த ஜெய்யை விரும்புற சதி… அவருக்கு இருக்குற அதே கோபம் எனக்கும் வரும்… என்ன, சொல்லுறது காதுல ஏறுச்சா?...” எனக் கேட்க அவளை திரும்பி பார்த்து முறைத்தான் அவன்…

ஆனால் அதில் சற்று முன்பு இருந்த கோபம் இல்லை… கொஞ்சம் குறைந்திருந்தது…

“என்ன பார்க்குறீங்க?...”

“……….”

“ஹலோ என்ன பார்வை?... இந்த கோபத்தை எல்லாம் தட்சேஷ்வர்கிட்ட காட்டுங்க… நேத்து அவர் கோபமா பேசினப்போ இந்த கோபத்தை எல்லாம் எங்க மறைச்சு வச்சிருந்தீங்களாம்?...” எனக் கேட்க, அவன் முறைத்தான் அவளை…

“சும்மா முறைக்காதீங்க… அப்பா என்னை கூப்பிட்டு போய் ஒன்னுமே சொல்லலை… எங்கிட்ட எதுவும் கேட்கவும் இல்லை… ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன்… உங்க மாமாவை சமாதானப்படுத்த வேண்டியது உங்க கடமை… அவரை எப்படி சம்மதிக்க வைப்பீங்களோ எனக்கு தெரியாது… இப்போ கோபப்பட்ட மாதிரி கோபம் கூட பட்டுக்கோங்க… இல்ல மாமா உன் பொண்ணை குடுன்னு பாட்டு பாடின்னாலும் சரி… நீங்களாச்சு உங்க மாமனாராச்சு…” என்றவள் கைகளை விரித்து உதட்டை பிதுக்க, அவனுக்கு அவளின் பேச்சு சிரிப்பை தான் கொடுத்தது…

ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது அவன் நின்றிருக்க, அவள் அவனிடம்,

“என்ன பாடிடுவீங்கள்ள?... லிரிக்ஸ் தெரியுமில்ல?... இல்லன்னா நான் அனுப்பவா உங்களுக்கு?...” என கேட்டு மீண்டும் ஒரு முறைப்பை பரிசாக பெற்றுக்கொள்ள,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“இப்படி எல்லாம் எப்பவும் முறைச்சிட்டே இருக்கக்கூடாதுங்க… அது ஹெல்த்துக்கு நல்லதில்லை… அப்படியே முறைக்கணும்னு நினைச்சாலும் உங்ககிட்ட மாட்டின குற்றவாளிங்களைத்தான் முறைக்கணும்… அதை விட்டுட்டு லவ் பண்ணுற பொண்ணுகிட்ட எப்ப பாரு முறைச்சிட்டே இருக்குறது நல்லாவா இருக்கு?... ஹ்ம்ம்….” என அவள் முகத்தை சுளித்து கண்களை உருட்ட,

“காதல் கத்திரிக்கான்னு நீதான் சொல்லிட்டிருக்குற… நான் இல்லை…” என்றான் அவனும் அவளது பேச்சினை ரசித்துக்கொண்டே…

“அதான பார்த்தேன்… என்னடா இன்னும் ஒரு பதிலும் குதர்க்கமா வரலையேன்னு….” என்றபடி இப்போது அவனை முறைத்தாள் அவள்…

“சரி… ஜோக்ஸ் அபார்ட்… உங்களுக்கும் அப்பாக்கும் எதாவது பிரச்சினையா?... அப்படி எதுவும் இருந்தா பேசி சால்வ் பண்ணிடுங்க… ப்ளீஸ்…”

“அவருக்கும் எனக்கும் என்ன பிரச்சினை?... சும்மா உளறாத…”

“ஆமா இல்லன்னா மட்டும் இரண்டு பேரும் அப்படியே கலகலன்னு பேசி சிரிக்குறீங்க பாருங்க பார்க்கும்போதெல்லாம்?... எங்கிட்ட பொய் சொல்லாதீங்க…”

“நம்பலைன்னா விடு….” என அவன் திரும்பி கொள்ள,

“இப்ப தான சொன்னேன்…. லவ் பண்ணுற பொண்ணுகிட்ட இப்படியா விறைப்பா இருக்கக்கூடாதுன்னு…” என்றாள் அவனின் முன் சென்று நின்று கொண்டு…

“நானும் உனக்கு அதுக்கு பதில் அப்பவே சொல்லிட்டேன்னு நினைக்குறேன்…”

“வேண்டாம்… மறுபடியும் என்னை சட்டையைப் பிடிக்க வைக்காதீங்க… சொல்லிட்டேன்…”

“அது இந்த தடவை நடக்காது….”

“ஓஹோ… அப்படியா… அப்போ ட்ரை பண்ணட்டுமா?...”

கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவன், அவள் செய்தாலும் செய்திடுவாள் என்ற எண்ணத்தில்,

“உனக்கு மறுபடியும் சொல்லுறேன்… நீ நினைக்குறது நடக்காது… எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு போயிட்டே இரு… அதான் உனக்கு நல்லது…” என்றான் அவளை திசை திருப்ப…

அவனின் பதிலில் அவளுக்கும் கோபம் தலைக்கேறியது… அதைப்பார்த்தவனுக்கு இலை மேல் பனித்துளி நினைவு வர, கோபம் கூட தன்னவளுக்கு அழகு தான் என்றெண்ணி ரசித்துக்கொண்டான் வெளியே காட்டிக்கொள்ளாமலே…

“எது நல்லது?... உங்களை மறக்குறதா?... இல்ல உங்களை விட்டு ஒதுங்கி போறதா?..” என முகம் சிவக்க அவள் கேட்க,

“இரண்டும்தான்…” என்றான் அவன் பட்டென்று…

“இன்னைக்கு சொல்லுறதை நல்லா கேட்டுக்கோங்க… உங்களை மறக்க என்னால இந்த ஜென்மத்துல இல்ல எந்த ஜென்மத்துலயும் முடியாது… அப்படி ஒருவேளை உங்களை விட்டு ஒதுங்கி போகுற நிலை வந்தா உயிரோட என்னை நானே அக்னிக்கு சமர்ப்பணம் செஞ்சிடுவேன்…” என அவள் சொல்லி முடித்த போது,

“ச………………..தி…………………….” என கர்ஜித்தவனின் கை அவளது கன்னத்தில் பதியாமல் போனது நிச்சயம் ஆச்சரியம் தான்…

குமுறும் எரிமலையை கண்களில் சுமந்தபடி அவன் பார்க்க, அவளுக்கு நா வறண்டு போனது… சற்று முன்பு அவன் கொண்ட கோபமெல்லாம் இந்த ஒற்றை பார்வைக்கு முன்னால் தாக்குக்கூட பிடிக்க முடியாதென்று தோன்றிவிட, அவள் அப்படியே அதிர்ந்து சிலையென நின்றாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.