(Reading time: 6 - 12 minutes)

01. உயிர் ஆதாரமே..!! - ப்ரியா

Uyirin aatharame

ந்தி மாலை..!!!

மாலை பொழுது என்றுமே எப்போதுமே ரம்யமானது தான்.. நடுநிலையானதும் கூட.. மனித மனம் சில நேரங்களில் அமைதியாய் தென்றலோடு இனைந்து ஆடும் கோடி போல எழிலாக இருக்குமே அது போல தான் மாலை கூட.

நாள் முழுவதும் கோபக்கனல்கள் வீசி சுட்டெரிக்கும் சூரியனும் மறைந்திருந்து தனிமையில் வாடும் நிலவும் சந்திக்கும் நேரம்.. கூடும் திரும்பும் பறவைகள்.. கொஞ்சி விளையாடும் காற்று.. இதை மனித மனதுடன் ஒப்பிடுதல் எப்படி நியமாகும்?! ஆகுமே..!! கோபமோ தாபமோ அணைத்து உணர்ச்சிகளையும் கட்டுக்குள் கொணர்ந்து தனிமை தீயினை அணைக்கும் வசந்தம் நெஞ்சுக்குள் பரவ கூடு திரும்பும் பறவையின் உற்சாகமும் தன்னிலை அடைந்து விட்ட நம் இயல்பும்.. இப்படி மாலை நேரங்கள் நம் மனதிற்குள் வரும் வேலைகள் எல்லாம் ரம்யமானது தான்..

ஆனாலும் இந்த மாலை நேரத்திற்கு இன்னுமொரு பக்கம் இருப்பதை ஒவ்வொருவரும் அறிவர் தானே.. நாணயத்தின் மறுப்பக்கமாய் இந்த மாலையின் இன்னொரு முகம் நம்மில் பலருக்கு சற்றே குழப்பமான ஒன்று.. சிலருக்கு அதிக பரிச்சயமான ஒன்று..

நாள் முழுவதும் இருந்த பிரகாசம் வடிந்து போய் இருள் கவ்வும்  வேளை இது.. சில நேரங்களில் காற்று வேகமாக வீசி மேகம் சூழ்ந்து பயம் கொள்ள செய்யும் வேளையும் இதுவே.. மனதின் எண்ண சுழற்சியில் சிக்குண்டு தெளிவில்லாமல் மேக மூட்டத்தை போல் இருக்கும் குழம்பிய மனதை தெளிவாக்க முடியாமல் இருக்கும் மாலை பொழுதுகளும் அனைவரும் மனத்திலும் வந்திருக்கும்..!!

சிலருக்கு அழகானதாக மாலை சிலருக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் தருகிறது...

இப்போது அவனுக்கு அது இன்னொரு முகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது.. குழப்பத்தை அதன் வெளிப்பாடான லேசான அச்சத்தை கொண்ட மாலை பொழுதாய் அவன் மனம் உள்ளது.. அதற்க்கு மாறான மாலையை இயற்க்கை அள்ளி வழங்க அதை ரசிக்க மனமின்றி அமர்ந்திருந்தான் அவன்..!!

ப்போதும் இருக்கும் ஆரவாரம் அவனிடம் சற்று மட்டுப்பட்டிருந்தது. இனிய மாலையின் இரவின் வரவேற்பை அவன் விரும்புவது இன்று நேற்று அல்ல..!! கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக..!!

ஆனால் இன்று...?! சில கேள்விகளின் விடைகள் அவன் கண்முன் இருந்தும் அவனால் நம்ப இயலவில்லை?? இப்படி எல்லாம் நடக்குமா? இதற்கும் நிதர்சனத்திற்கும் வெகு தூரம் தான்.. ஆனால் நடந்திருக்கிறதே..

நடந்து இருக்கிறதா?! நடந்தது என எப்படி நம்புவான்? ஒரு சில சாட்சிகள் அவன் கைகளிலே..!! நம்ப தான் வேண்டுமா?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

அவனும் கூட இது நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தது உண்டு தானே? ஆனால் நடக்கையில் ஏற்று கொள்ள முடிவதில்லை..!!

மனம் என்றும் விந்தை தான்.. இரவு பகலாய் விரும்பும் ஒன்று நாடும் ஒன்று கிடைக்க பெரும் போது ஏனோ அதை ஏற்க முடிவதில்லை.. நீண்ட நாட்களாய் பயிற்சி செய்த ஒரு தேர்வுக்காக நம் முழுமுயற்சியும் கொண்டு எழுதிவிட்டு முழு மதிப்பெண்ணையும் பெறுகையில் கூட ஏதோ ஒன்றை இழந்தது போல ஓரிரு முறை நாம் உணர்ந்தது உண்டு.. ஏன்? எதற்கு? காரணங்கள் கேட்டால் தெரியாது..

இல்லாமல் போனால் இந்த மனது வெறுமையை நாடும்.. ஒரு சில முறை எல்லாமும் இருந்தாலும் வெறிச்சோடி தோன்றும்.. மனதிற்கு என்ன தான் வேண்டுமென தெரியாது போகையில் அமைதியாய் அமர்ந்து இலக்கில்லாமல் வெறித்த நாட்கள் எத்தனை உண்டு?!

அப்படி தான் இருந்தது அவனுக்கு.. அவன் நடக்கவே வாய்ப்பில்லை என்று நினைத்த ஒன்று நடந்து விட்டது என்பதற்கான சான்று அவனிடம்.. இந்த நினைவு கூட அவங்க கொண்டது அல்லவே.. சில நாட்களுக்கு முன் கேள்விபட்ட ஒரு சில விஷயங்கள் அவனை சிந்திக்க தூண்ட அதன் விளைவே இது.. அப்போதும் அவன் நம்பி இருக்கவில்லை.. அவன் நண்பன் வந்து கூறும் வரையிலும் இதே நிலை..

நினைவுகளில் இருந்து வெளி வந்தவன்.. கைகளில் இருந்த அந்த டைரியையும் சில பெரிய காகிதங்களையும் பார்த்தான்..!!

அந்த காகிதத்தில் இருந்த அவனது ஓவியத்தை மட்டுமே பார்த்திருந்தான்.. இன்னமும் அந்த டைரியை படிக்கும் மனநிலைக்கு அவன் வரவில்லை..

இப்போது அமைதி தேவை..!! மனம் குழப்பத்தின் பிடியில் இருக்கையில் எதை செய்தால் குழம்பி போகும்.. அது தவறில் முடியும்.. இது அவன் சிந்தனை.. தெளிவாக சிந்தித்து எளிமையாக வாழ்ந்தே பழகியவன்.. ஆனால் இன்று அதற்கு முற்றிலும் மாறாக நடக்கும் சம்பவங்கள்..

அந்த டைரியை வருடியபடி யோசனையில் ஆழ்ந்திருந்தான்.. சில மணித்துளிகள் கடந்த பின் அந்த காகித சுருளை விரித்தான்.. ஒன்றிரண்டு அல்ல!! ஏகப்பட்ட ஓவியங்கள்.. அத்தனை ஓவியங்களையும் அடுக்கி அதை சுருட்டி பத்திரப் படுத்தப்பட்டிருந்தது. அதை திறக்கையில் ஓவியத்திற்கு உபயோகித்த வர்ணங்களின் வாசனையும் மீறி ஒரு சுகந்த நறுமணம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.