(Reading time: 17 - 33 minutes)

13. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

 “யெஸ் மிஸ்டர் இஷான்…. எனி நியூஸ் அபௌட் தி காலேஜ் கேஸ்?...”

“சார்…” என்றபடி தன் சல்யூட்டை தெரிவித்துவிட்டு, கேள்விகேட்ட சோமநாதனுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தான் இஷான்…

“இன்வெஸ்ட்டிகேஷன் இஸ் கோயிங்க் ஆன் சார்… அன்னைக்கு அந்த காலேஜ் பிரின்சிபாலை பார்த்து பேசிட்டு வந்தேன் சார்… இன்னைக்கு ஜெய்யும் வரேன்னு சொல்லியிருக்குறார்…”

“ஓகே… ப்ரொசீட்…” என சோமநாதன் சொல்லிக்கொண்டிருக்கையில்,

“சார்…” என்றபடி வந்தான் ஜெய்…

“சொல்லுங்க மிஸ்டர் ஜெய்… இன்னைக்கு அந்த காலேஜ் கேஸ்ல எதாவது இம்ப்ரூவ்மென்ட் வரும் இல்லையா?...”

“ஷ்யூர் சார்… பட் ஐ நீட் யுவர் பெர்மிஷன் நௌ…”

“பர்மிஷன்?.. ஃபார் வாட் மிஸ்டர் ஜெய்?..”

“அந்த குமாரை ஹாஸ்பிட்டலில் இருந்து ஜெயிலுக்கு மாத்துற விஷயத்துல உங்க பர்மிஷன் வேணும் சார்…”

“வெல்… அவன் இன்னும் க்யூர் ஆகலை இல்லையா?...”

“யெஸ் சார்… பட் அவனை டிஸ்சார்ஜ் பண்ணுறதுல எந்த ப்ராப்ளமும் இல்லைன்னு அவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டர் கொடுத்த ரிப்போர்ட் இது…” என்றபடி அவரிடம் ஒரு பைலை நீட்டினான் ஜெய்…

அதை படித்த கமிஷனர் சோமநாதன், சற்று நேரம் யோசித்துவிட்டு,

“எல்லாம் ஓகே…  ஆனா அவனை இப்பவே ஜெயிலுக்கு மாத்த வேண்டிய அவசியம் என்ன ஜெய்?..”

“இல்ல சார்… குமாரை வச்சித்தான் அவனோட ஃப்ரெண்டை பிடிக்க முடியும்… அண்ட் ஹீ ஸ் ஆல்சோ அ டேஞ்சரஸ் பர்சன்…”

“ஒகே ஜெய்… நீங்க குமாரை பிரிசனுக்கு கொண்டு வாங்க… பட் அகைன் சொல்லுறேன்… அவனை நீங்க அடிச்சி துன்புறுத்தக்கூடாது… இதுக்குமேலயும் நீங்க அடிச்சா அவன் செத்துடுவான்… அது தேவை இல்லாத ப்ராப்ளமா க்ரியேட் ஆகிடும்… ம்ம்… ஐ திங்க் யூ கேன் அண்டர்ஸ்டாண்ட் ஜெய்…”

“யெஸ் சார்… ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்…”

“ஓகே ஜெய்… யூ மே கோ நௌ…” என சோமநாதன் சொன்னதும் தனது சல்யூட்டை தெரிவித்துவிட்டு அங்கிருந்து அகன்று வெளியே இஷானுக்காக காத்திருந்தான் ஜெய்…

“இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் பார்த்து எடுத்து வைங்க இஷான்… குட் லக்….” என அவனின் கைப்பிடித்து குலுக்க, அவனும் சரி என்றபடி நன்றி தெரிவித்துவிட்டு ஜெய்யை தேடி சென்றான்…

கமிஷனர் ஆஃபீஸ் வாசலில் நின்றுகொண்டு, அதன் எதிரே சாலையின் அந்த பக்கம் பார்த்துக்கொண்டிருந்தான் ஜெய்…

சற்று நேரத்திற்கு முன் அவள் தன்னை பார்க்க தவிக்கிறாள் என்று தெரிந்தும், பார்வையை அந்த பக்கம் செலுத்தாது இருக்க அவன் பட்ட பாடு அவனே அறிவான்…

தவித்திருப்பாள் என்ற எண்ணம் மனதில் வந்து போகாமல் இல்லை… வேண்டுமென்றேதான் பார்வையை அந்த பக்கம் திருப்பவில்லை அவன்…

அவளை அலைக்கழித்துவிட்டோம் என்ற ஆதங்கம் அவன் மனதில் வந்து வந்து போக, இஷானின் குரலில் அதில் இருந்து வெளிவந்தான்…

“என்னடா இங்க நின்னு என்ன பண்ணிட்டிருக்குற?...”

“நத்திங்டா…”

“ஒன்னும் இல்லாததுக்கா இங்க நின்னு ஆப்போஸிட் சைட் அப்படி வெறிச்சு பார்த்துட்டு இருக்குற?.. ஹ்ம்ம்… ஹூம்… சம்திங்க் இருக்குற மாதிரியே தெரியுதே…”

“உனக்கு அப்படி தெரிஞ்சா நின்னு ஆராய்ச்சி பண்ணிட்டு வா… நான் காலேஜூக்குப் போய் பிரின்சிபாலை பார்க்குறேன்…” என வேகமாக ஜெய் தன் காரில் ஏற,

“டேய்… டேய்… மச்சான்… நில்லுடா… நானும் வரேன்…” என அவனின் பின்னே ஓடினான் இஷான்…

“யூ டோண்ட் நீட் டூ கம் இஷான்… நீ உன் ஆராய்ச்சியை கண்டிண்யூ பண்ணிட்டு பொறுமையாவே வா…” என அவனிடம் சொல்லியவன்,

“வண்டியை எடுங்க ரமேஷ்….” என டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவரிடம் சொல்ல,

இஷான் வேகமாக வந்து, காரில் ஏறிக்கொண்டு, ஜெய்யை முறைத்தான்…

அவன் அதை கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை…

அடுத்த சில நிமிடங்களில் இருவரும் அந்த காலேஜில் பிரின்சிபால் அறையில் இருந்தனர்…

“சார்… இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம்… இதை ரொம்ப கவனமா தான் ஹேண்டில் பண்ணனும்… அது நான் சொல்லி உங்களுக்கு தெரியணும்னு எதுவுமில்லை…” என தன் கவலையோடு கூடிய பயத்தை வெளிப்படுத்தினார் பிரின்சிபால்…

“புரியுது சார்… ஸ்டூடண்ட்ஸ் எத்தனை பேர் இதனால பாதிக்கப்பட்டிருப்பாங்கன்னு இப்போதைக்கு சொல்ல முடியலை சார்…”

“புரியுது இஷான்… நீங்க சொல்லுறதும்… ஆனாலும் ஸ்டூடண்ட்ஸ்கிட்ட விசாரிச்சா இதை அவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தான் யோசிக்குறேன்…” என தயங்கியவராய் அவர் சொன்னதும்,

“உங்க காலேஜ் ரெப்பை நான் பார்க்கலாமா சார்?... அவங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்…” என்றான் ஜெய்….

“கண்டிப்பா ஜெய்… நான் அரேஞ்ச் பண்ணுறேன்… நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… நான் இப்போ வந்துடுறேன்…” என அவர் சென்றதும்,

“எதுக்குடா ரெப்பை பார்க்கணும்னு சொல்லுற?...” என இஷான் கேட்க,

“எல்லாம் காரணமாத்தான்… கொஞ்சம் வெயிட் பண்ணு…. உனக்கே புரியும்….” என்றான் ஜெய்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.