(Reading time: 9 - 17 minutes)

06. ஊனமறு நல்லழகே - ப்ரியா

oonamaru-nalazhage

"டாக்டரா?! நீயா?!" புன்னைகையும் வியப்புமாக கேட்டான் மிதுர்வன்.

"ம்ம்ம் ஆமாம்.. சின்ன வயசில இருந்தே என் கனவு.. ப்ளீஸ் என்னை படிக்க அனுப்பறீங்களா?! "

"கண்டிப்பா அனுப்பறேன்டா.. ஆனா இது விளையாட்டு காரியம் இல்லையே அதுனால யோசிச்சு பண்ணலாம்"

"ம்ம்ம்ம்" அவள் முகத்தில் இருந்த ஆர்வம் வடிந்து விட்டது போல தோன்றியது மிதுர்வனுக்கு.

"ஹே.. என்ன இது சரி ஒரு நிமிஷம் இரு நான் அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு நான் படிக்குற காலேஜ்லயே உனக்கும் சீட் இருக்கான்னு கேட்க சொல்றேன்.. அட்மிசன் எல்லாம் முடியுற டைம்மா அதுனால தான் யோசிக்கணும்ன்னு சொன்னேன்.. ஆனா பிரின்சிபால் அப்பாவோட பிரென்ட் சோ அவர் பேசி பார்த்த முடியும்ன்னு நினைக்கிறேன்" என்று அவளுக்கு சொன்னபடியே தன் கைபேசியை எடுத்தான்.

அவன் பேசி முடிக்கும் வரையில் இமைக்காமல் ஆர்வத்துடன் அவனையே அவள் பாத்திருந்த காட்சி அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. சிறு குழந்தை போன்ற அவள் ஆர்வமும் படிக்க வேண்டும் என்ற வெறியும் அவனுக்கு புரியாமல் இல்லை.

கைபேசியை அனைத்தவன் அவளை பார்த்து தலையை இடவலமாக ஆட்டி கைகளை விரிக்க,

"என்னங்க? என்ன ஆச்சு? சீட் இல்லையா? சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களா? அப்போ நான் படிக்க முடியாதா?" என அவள் கேள்விகளை அடுக்க, அவளை பார்த்து சிரித்தவன்

"பொண்டாட்டி முதல் முதல்ல ஆசை பட்டு கேட்டதை நடத்திக் கொடுக்கலன்னா வரலாறு என்னை தப்ப பேசாதா? கூல் டவுன் டா கண்ணா, நாளைக்கே போய் ஜாயின் பண்ணிக்கலாம்.. உன் செர்டிபிகேட்ஸ் மட்டும் இருந்தா போதும்"

அத்தனை மகிழ்ச்சியையும் குத்தகைக்கு எடுத்திருந்தது அவள் முகம். சட்டென நினைவு வந்து,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"பீஸ்??!!" என்று அவள் இழுக்க,ஒரு முறைப்பில் அவளை அடக்கினான் மிதுர்வன்.

நிறைந்த மனதுடன் வீடு  திரும்பினாள் ஸ்ரவந்தி.

காலை உணவை முடித்துக் கொண்டு அமர்ந்திருந்த கனகாம்பாளிடம் தயங்கி தயங்கி வந்தாள் ருத்ரா.

"பாட்டி?!"

"என்னம்மா?"

"எனக்கு.. எனக்கு இந்த காலேஜ் பிடிக்கல பாட்டி"

"என்னது காலேஜ் பிடிக்கலையா என்னடா ஏதாவது பிரச்சினையா? யாராவது கேலி பண்றாங்களா? பசங்க யாராவது ஏதாவது சொன்னாங்களா?"

"ம்ம்ம் ஹ்ம்ம்" தலை குனிந்து இல்லை என்று சொன்னவள்,

"நான் சென்னை போறேன், கொஞ்ச நாள் மிதுர் அண்ணா கூட தங்கி அங்கேயே படிப்பை கன்டினியூ பண்ணலாம்ன்னு நினைக்கிறேன்"

ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனார் கனகாம்பாள். அவருக்கும் புரியாமல் இல்லை. பாசமாய் வளர்த்த தங்கையை நந்தன் கை நீட்டி அறைந்ததில் இருந்து ருத்ரா இப்படி தான் இருக்கிறாள். அவள் கேட்பதிலும் தவறில்லையே. பாவம் இந்த சின்ன வயதில் அவளும் தான் எவ்வளவு தங்குவாள்?

ஒரு முடிவுக்கு வந்தவர் நந்தகுமாரனுக்கு தெரியும் முன்னே அவளை அனுப்பி விட நினைத்தார்.

"சரி டா ராஜாத்தி, நீ போய்ட்டு வா"

"நிஜமாவா பாட்டி? நீங்க தனியா இருப்பீங்களே?"

"நான் எங்கம்மா தனியா இருக்கேன் சுந்தரம் இருக்கார் உங்க அண்ணன் இருக்கான்.. நீ கிளம்பு"

"ம்ம்ம்.. அப்போ மிதுர் அண்ணாக்கு ஒரு போன் பண்ணி சொல்லிடறேன்"

"ஹ்ம்ம் ஆனா நந்தாக்கு தெரிய வேண்டாம்மா"

"ம்ம்ம்ம்"

அவ்வளவு தான் அவள் பேசினாள். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் சென்னை செல்வதற்கான எல்லா ஏற்படையும் செய்து விட்டு அவள் மிதுர்வனை அழைக்க அவன் பதில் அளிக்கவில்லை. என்ன செய்வது என்று குழப்பதோடு அமர்ந்திருந்தவள். ஸ்ரவந்தியின் நினைவு வர அவளை அழைக்க எண்ணி கைபேசியை எடுத்தாள். ஆனால் சரியாக அதே நேரம் ஸ்ரவந்தியே அழைத்தாள்.

"ஹலோ அண்ணி"

"ஹலோ"

"நானே உங்களை கூப்பிடணும்ன்னு நினைச்சேன் நீங்க கூப்பிட்டீங்க"

"ம்ம்ம்ம்"

"என்ன விஷயம் அண்ணி?"

"நீங்க என்ன விஷயமா பேசணும்ன்னு நினைச்சீங்க?"

"ஐயோ அண்ணி இன்னும் என்னை நீங்க வாங்கன்னு கூப்பிடறதை நிறுத்தலையா நீங்க?"

"ஹ்ம்ம் சரி சொல்லு ருத்ரா"

"ஸ்வீட் அண்ணி.. நான் சென்னை வரலாம்ன்னு இருக்கேன் அதை சொல்ல தான் அண்ணாக்கு கால் பண்ணலாம்ன்னு பார்த்த அண்ணா போன் எடுக்கலை"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.