(Reading time: 15 - 30 minutes)

04. இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா - நீலா

iruvar kannukkum ore nila

வாழ்க்கை எல்லாருக்கும் எப்போதும் ஒரே விதமாய் இனிமையாய்... இல்லை துன்பமாய் கழிவதில்லை!

ஒரே மாதிரியான ஸ்கேடியூள் இருந்தா ரொம்ப போர் அடிச்சிடும்! யாருக்கு எப்படியோ.. ஆனா எனக்கு நிச்சயமாய் போர்தான்!

இப்போ பாருங்க ஒரு காதல் ஜோடி... ரெண்டு பேர் வீட்டுலையும் பெரும் ஆதரவு... இவங்க காதலுக்கு! அந்த ஜோடியை போல ஆர்வமாய் ரெண்டு பேரையும் இணைச்சு வெக்கறாங்க அவங்க குடும்பம்! எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத சலனமில்லாத வாழ்க்கை... தினமும் ஒரே மாதிரி இருக்க காதல் மனைவி... ஒரே மாதிரி அன்பு பொழியிற கணவன்... நாலு நல்ல பண்பான பிள்ளைங்க.... தங்கமான மாமனார் அன்பான மாமியார் பாசமுள்ள நாத்தனார் மதிப்பிற்குறிய மச்சினர்...அப்படி இருந்தா... தே ஹப்பிலி லிவ்ட் ஏவர் ஆஃப்டர்'னு எண்ட் கார்ட் போட்டுடலாம். ஆனா இப்படி ஒரு ஸ்கிரிப்ட் கதைல வந்தா கூட நம்ம மனுச மனசால அத ஏதுக்க முடியல...என்னடா கதை இதுனு காரி துப்பினா கூட ஆச்சரயப்படறத்துக்கில்ல... ஒவர் எக்சாச்சுரேட்டுனு சொல்லுவோம்... இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு சிலவே சில பேருக்கு தோணும்... ஆனா அது நிஜத்துக்கு நிதர்சனமான உண்மையானு பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டம்தான்.

இனிமையா போனா ச்ச்...இனிமையா இருக்குனு .. தோணும். துன்பத்துல இருந்தா... என்னடா வாழ்க்கை இது துன்பமாவே இருக்கு வருத்தப்படும். வாழ்க்கையில இன்பம் துன்பம் சரி பாதினு சொல்றத நான் நம்பவே மாட்டேன். எல்லாமே நாம பார்க்கற பார்வைல தான் இருக்கு. மேலே சொன்ன கதைல எல்லாரும் ஹாப்பினு நீங்க நினைச்சா... நான் அது எவ்வளவு பெரிய துன்பம்னு சொல்லுவேன். ஏன்னா இவ்வளவு நல்லவங்க இருந்தா அந்த பயணம் ரொம்ப திகட்டிடும். அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுதானே! அதே மாதிரி தான் நான் இன்பமா பார்க்கறது மற்றவங்களுக்கு துன்பமா தெரியும் அண்ட் வைசி வர்சா! எதுவுமே நாம பார்க்கற கண்ணோட்டத்தில தான் இருக்கு. மனுஷ மனசு ஏதாவது ஒரு த்ரில்லை எப்பவுமே எதிர்பார்த்துடே இருக்கும். புதுசா எதாவது கேட்டுட்டே இருக்கும். அப்படி ஒரு த்ரில்லை எதிர்ப்பார்த்து தான் நான் இப்போ புறப்படுறேன். மேலே சொன்னது போல ஹாப்பியான வாழ்க்கையை தொலச்சிட்டு ஏதோ வேண்டாத துன்பத்தை தேடி போறேனு நினைக்கலாம். ஆனா என்னோட துன்பம் பல நூறு பேருக்கு இன்பம் தரப்போதுனா... அந்த துன்பம் கூட எனக்கு மகிழ்ச்சியை தான் கொடுக்கும். சந்தோஷத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இருக்கும் சின்ன வேறுபாடு இதுதான். திரும்பி வருவேனா தெரியல... ஆனா வந்தா நிச்சயமாய் வெற்றி தான். அடுத்த எண்ண பதிவுகளோடு விரைவில் சந்திக்கறேன்!

மனதோடு மதிவதனி...

கிட்டத்தட்ட ஆயிரமாவது முறையாக இதை படித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்!

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பறந்துக்கொண்டிருந்தார்கள் கார்த்திக்கும் அவன் தம்பி சந்தோஷும்!

மஞ்சரி டில்லியில் இருந்து வந்தவுடன் ஒட்டு மொத்த குடும்பமும் ஆதி தலைமையில் கிளம்பி மதுரை சென்றிருகையில் கார்த்திக் மற்றும் சந்தோஷ் மட்டுமே பின் தங்கினர். சில முக்கிய அலுவல்களை முடித்துவிட்டு வருவதாக கூறினாலும் அனைத்தும்  நீலாவை பற்றியே இருந்தது.

கார்த்திக் என்றுமே இல்லாத அளவு மிகவும் அமைதியாக இருந்தான். இல்லை... அமைதியாக இருப்பதாக காட்டிக்கொண்டான். ஆனால் வெளியே எவ்வளவு அமைதியோ... அதைவிட பத்து மடங்கு அளவு கோபம் உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தது! 

சந்தோஷும் மிகவும் அமைதியாகவே பயணம் செய்து வந்தான். அவனுக்கு தெரியும் தன் அண்ணனை பற்றி! அவனது தற்போதைய மனநிலை பற்றி!!! அவனது கோபத்தின் அளவை பற்றி!!! 

இப்போ எதுக்கு இவன் இவ்வளவு கோபமா இருக்கான் ??? யாரு மேல கோவம் ?? அதுவும் புரியலையே!! என்ன தான் பிரச்சனை இவனுக்கு?? முன்னாடியாவது கோவம் வந்தா திட்டி தீர்த்துடுவான்... இல்ல எப்படியாவது வெளியில காட்டிடுவான். இப்போ.. இந்த பத்து வருஷமா தான் அவன் திட்டறது எல்லாம் குறைஞ்சியிருக்கு... ஆனா கோபம் வந்தா உடனே அமைதி மோடுக்கு மாறிடுவான். அதனால நல்ல பிள்ளையா மாறிட்டதா எல்லாரும் நினைக்கறாங்க... ஆனா எனக்கு என் அருமை அண்ணனை பத்தி நல்லாவே தெரியுமே! அவன் பொறுமை பறந்தா சிக்க போறது நான் தானே!! எல்லோரும் என்னை கார்த்திக் அண்ணாகிட்ட கோர்த்துவிட்டு போயிட்டாங்க! கடவுளே என்னை எப்படியாவது காப்பாத்தேன்!!!' என்று முனகியபடி வர அவனை காப்பாற்றுவது போல விமானம் மதுரையில் தரையிரங்கியது.

அவர்கள் வெளியில் வரும் போது தான் யாரோ கார்த்திக்கை அழைப்பது போல தோன்ற சந்தோஷ் தான் முதலில் திரும்பினான். அதற்குள் திரும்பிய கார்த்திக்கும் தன் நடையை தளர்த்தி வேகத்தை குறைத்தான். ஆனால், அவனுள் இருந்த தனல் இன்னும் கொழுந்து விட்டு எறியத்தொடங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.