(Reading time: 9 - 18 minutes)

04. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

சுபாவும் நிஷாவும் அவர்கள் டோர்மிட்டரி செல்லும் வழியெங்கும் ... நிஷாவிற்கு சுபா லட்சார்ச்சனை செய்த படி வந்தாள்.

“ஏன்.. சுபா கேப்டன் கேட்டதுக்கு தானே நான் பதில் சொன்னேன்..? “

“கிழிச்ச .. அவர் உன்னை பத்தி தானே கேட்டார்.. நான் அலாரம் வச்சு எழுந்தேன்னு சொல்றத விட்டுட்டு.. என்னை ஏன் மாட்டி விட்டுட்ட.. ?”

“அது பொய் சொல்ல வரல தங்கம் ..”

“யாருக்கு.. ? உனக்கு பொய் சொல்ல வரல ? இந்த அம்மா அப்படியே ஒன்னும் தெரியாத கிரீன் sand .. அதா நாங்க நம்பனும்... அந்த ஒட்டக சிவிங்கி எனக்கு punishment சொன்னத கேட்டு mind வாய்ஸ் லே “அப்படி போடு..” ன்னு குத்தாட்டம் போட்டவ தானே நீ?”

“ஏய் .. அது எப்படி உனக்கு தெரியும் .. ?”

“ஹலோ...நாங்கல்லாம் யாரு..? ”

“ஹி.. ஹி.. நான் அப்படீல்லாம் இல்லபா.. என்னாலே மாட்டிகிட்டியோன்னு தான் நினைச்சேன்..”

இந்த டயலாக் எல்லாம் இங்கே வேணாம்.. இப்போ நீ செஞ்ச வேலைக்கு உனக்கு punishment கொடுக்கணுமே.. ஹ்ம்ம்.. “ என்று யோசித்தவள் .. “இந்த பார் நாளைக்கு நீ அலாரம் வைப்பியோ .. இல்ல என்ன செய்வியோ தெரியாது .. நீதான் என்னை எழுப்பி விடற.. ? அப்படி இல்லியோ ... மவளே உன் டூத் பேஸ்ட் க்கு பதிலா .. மிளகாய் பேஸ்ட் போட்டு விட்டுடுவேன் பார்த்துக்கோ ..”

“அம்மா.. தாயே.. அப்படி எல்லாம் செஞ்சுடாதே....எனக்கு இருக்கிறதே ஒரு வாய் தான்.. அதா வச்சி தான் பிழைப்பு நடத்தனும்.. அதுலே ஆப்பு வச்சுடாதே..

“அது.. அந்த பயம் இருக்கட்டும்.. சுபான்னா யாருன்னு நினைச்ச..? terror பார்த்துக்கோ..”

“அது எல்லாம் சரி .. ஒட்டக சிவிங்கி ன்னு சொன்னியே யாரது.. ?

“வேற யாரு.. ? நம்ம தளபதி தம்பி தான்.. “

“தளபதி தம்பியா .. ?”

“தளபதி படத்துலே நம்ம தலைவருக்கு தம்பி யாரு ?’

“அரவிந்த் சுவாமி..”

“அந்த படத்துலே அவர் பேரு என்ன ?”

“அர்ஜுன்.. ஏய்.. நம்ம கேப்டன் சார் யா சொன்ன ?”

“அந்த மோரதான் சொல்றேன்..”

“அதுக்கு அவர் பேர டைரக்ட் ஆ சொல்ல வேண்டியது தானே..”

“எதுக்கு .. இல்ல எதுக்கு ன்னு கேட்கறேன்.. நான் பாட்டுக்கு தளபதி கலெக்டர் ரேஞ்சுக்கு பேர் சொல்ல.. அவர் பாட்டுக்கு தனி ஒருவன் வில்லன் ரேஞ்சுலே இறங்கி .. எந்த இடத்திலேயாவது மைக் செட் பண்ணி நான் பேசினத கேட்டுட்டு.. இன்னிக்கு  நீ தூங்கவே கூடாதுன்னு ஆர்டர் போட்டா என்ன செய்வேன்.. ? “

“அடி பாவி.. இப்படி எல்லாம் நடக்குமா .. ? நான் பாட்டுக்கு நீ கேட்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருக்கேனே... ஹலோ  சார்.. நீங்க எங்கிருந்தாவது இதை கேட்டாலும்.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. எல்லாமே ..இந்த ராட்சசி வேலை தான்.. “ என்று சுற்றி ..சுற்றி பார்த்து பேசினாள்.

இதை கேட்ட.. சுபத்ரா.. விழுந்து விழுந்து சிரித்தாள். பிறகு

“ஹேய்.. பயபப்படாத.. சும்மா சொன்னேன்.. நீ இனிமேல் நிஷா இல்லை.. .கூஸ் தான்..”

“உன்னை .. இனிமே நீயும் சுபத்ரா இல்லை... பத்ரகாளி... “

“thank யு .. thank யு .. ரொம்ப நாளா சுரா வே கேட்டு போரடிச்சு போய்டுச்சு... இந்த பத்ரகாளி கூட நல்ல இருக்கு.. கூஸ்..”

சுபத்ரா எப்போது மிகவும் கலகலப்பானவள்.. அவளை சுற்றிலும் குறைந்த பட்சம் பத்து பேராவது இருப்பார்கள். அதிலும் வருண், மகி இருவரும் முதலில் இவள் வீட்டிற்கு வந்து விட்டு தான் அவர்கள் வீட்டிற்கு செல்வார்கள்.

அப்படி இருந்து விட்டு இங்கே இருக்க மிகவும் கஷ்டபட்டாள். அவள் மிகவும் விரும்பி வந்த வேலை தான். அவளால் எந்த வேலையும் செய்ய முடியும்.. ஆனால் தன்னுடைய சுபாவமான கலகலப்பை விட்டு கொடுக்க முடியாது

முதல் நாளே திணறினாள்.. அன்று அர்ஜுன் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, எல்லோரையும் சொல்ல சொல்லவும்.. மிகவும் மகிழ்ந்தாள்.. அதனால் அன்று இரவே அவள் குரூப் அனைவரிடமும் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டு தன் இயல்புக்கு திரும்பினாள்.

பல மாநிலத்தவரும் ஒன்றாக இருக்கும் இடத்தில், தம் ஊர்காரர்களை கண்டால் நெருக்கம் உண்டாகும். அதனால் அவளுக்கு நிஷாவிடம் எளிதாக ஒட்டிக் கொண்டாள்.

அந்த நெருக்கத்தில் தான் அலாரம் வைத்து மாட்டியது எல்லாமே. நிஷாவும் அவளை தவறாக எண்ணாது அவளின் லூட்டியில் கலந்து கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.