(Reading time: 36 - 72 minutes)

26. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

ன்று தேவா உட்பட எல்லோரும் வீட்டில் இருக்க, அந்த தருணத்தை சாதகமாக்கி தான் நியூயார்க்கிற்கு போக விரும்புவதாக சம்யுக்தா அனைவரிடமும் கூறினாள். அதைக் கேட்டு மாதவன், கவியை தவிர மற்ற மூவரும் அதிர்ந்தனர்.

"யுக்தா... அம்மாவும் அப்பாவும் இங்கேயே நிரந்தரமா வந்துட ஏற்பாடு செஞ்சிட்டிருக்கோம்டா.. அதுக்குள்ள நீ காணும்ன உடனே நாங்க இங்க வர வேண்டியதா போச்சு.. இப்போ நாங்க திரும்ப நியூயார்க் போய் என்னென்ன ஃபார்மாலிட்டிஸ் இருக்கோ எல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் இங்க வந்துட்றோம்... நீ பிருத்வி வீட்டுக்கு போலன்னாக் கூட பரவாயில்ல... நாம இங்க இந்த வீட்டிலேயே இருக்கலாம்..." என்று சுஜாதா கூறினாள். எங்கே பிருத்வியிடம் ஒரு நிரந்தர பிரிவை எதிர்பார்த்து நியூயார்க்கிற்கே திரும்ப போகப் போவதாக யுக்தா சொல்கிறாளோ என்று சுஜாதாவிற்கு பயம்... அதற்கு அவள் இந்த வீட்டிலேயே கூட இருந்துவிடலாம என்று சுஜாதாவிற்கு தோன்றியது..

அதற்கு யுக்தா பதில் சொல்வதற்கு முன் மாதவன் பதில் சொன்னார்.

"சுஜா நான் சொல்லியிருக்கேன் இல்ல... யுக்தாவை நாம எதுக்கும் கட்டாயப்படுத்தக் கூடாது... அவளுக்கு நியூயார்க்ல இருக்கனும்னு தோனுச்சுன்னா அவ அங்க வரட்டும்... நாம இருக்கறதே நம்ம பசங்க சந்தோஷத்துக்கு தான்.. புரியுதா..??" என்று மாதவன் சொன்னதற்கு...

"இல்லங்க நான் என்ன சொல்றேன்னா.." என்று சுஜாதா ஏதோ சொல்ல வர... அவள் பேச்சை இடைமறித்த கவியோ..

"சித்தி... சம்யூ நியூயார்க்லயே நிரந்தரமா இருக்கனும்னு நினைக்கல... அவளால அப்படி இருக்கவும் முடியாது... கொஞ்ச நாள் அங்க இருக்க நினைக்கிறா... அவ்வளவு தான்... நீங்க அங்கப் போய் முதல்ல ப்ளான் பண்ணதுபோல இந்தியாக்கு திரும்பி வர்றதுக்கான ஃபார்மாலிட்டீஸை கவனிங்க... அதுவரைக்கும் அவளும் அங்கேயே இருக்கட்டும்... கொஞ்சம் அவளுக்கு அது மனமாற்றமா இருக்கும் சித்தி..." என்றதற்கு சுஜாதா பதில் சொல்லாமல் இருக்கவும்...

"அதான் நான் சொல்றேன் இல்ல சித்தி... அவளை நியூயார்க்கிலேயே இருக்க நான் விட்றுவேனா... அதனால தைரியமா அவளை கூட்டிட்டுப் போங்க..." என்று கவி நம்பிக்கையோடு சொன்னதால்... மனதில் உறுத்தல் இருந்தாலும் சரி என்று தலையாட்டினாள் சுஜாதா... சாவித்திரியும் அதற்கு ஒத்துக் கொண்டாள்.

ஆனால் தேவாவிற்கு தான் எதுவும் புரியவில்லை... யுக்தாவிடம் பேசி அவள் முடிவை மாற்றுவதற்காக தான் தேவா சங்கவியை பேசச் சொன்னான்... ஆனால் இப்போது சங்கவியும் யுக்தாவின் முடிவை ஏற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் முழித்தான்... அவளோடு தனிமை கிடைத்த நேரம் அதைப் பற்றி அவளிடம் பேசினான்.

"ஏன் சங்கு... உன்கிட்ட நான் என்ன சொன்னேன்... யுக்தாக்கிட்ட பேசி அவ நியூயார்க் போகப் போற முடிவை மாத்துன்னு சொன்னா... நீ அவக்கிட்ட பேசினியா..?? இல்லையா..??"

"பேசினேன் தேவா... அவ இப்போ தெளிவாகவும் இருக்கா... கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கான்னு தான் சொல்லனும்... அதனால அவ கொஞ்ச நாள் நியூயார்க் போய் இருக்கறது தான் நல்லதுன்னு தோனுது... அதான் நானும் ஒத்துக்கிட்டேன்..."

"சங்கு... பிருத்வி, யுக்தாக்கு இருக்கும் பிரச்சனை சரியாகனும்னா, ரெண்டுப்பேரும் கொஞ்சம் பேசினாலே சரியாயிடும் தெரியுமா..??"

"சரியாயிடும் தான் தேவா.. ஆனா ரெண்டுப்பேரும் பேசனுமே... பிருத்விக்கு தன் மேல காதல் இல்லைன்னு குழப்பத்துல சம்யூ இருக்கா.. பிருத்வி பேசும் போதே கோபமா பேசறாரு... அப்போ எல்லாம் எப்படி சரியாகும்..?? இருக்க இருக்க எல்லாம் மோசமா தான் ஆகும்.."

"....."

"சம்யூ என்கிட்ட சொன்னதையெல்லாம் வச்சுப் பார்க்கும் போது.. பிருத்விக்கு சம்யூ மேல காதல் இருக்குன்னு தெரியுது... ஆனா அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கு... அது சப்னாவா இருக்கலாம்... இல்ல வேற ஏதாவதும் இருக்கலாம்... அது தான் அவர் கோபத்துக்கு காரணம்... போனதடவை சம்யூ நியூயார்க் போக இருந்ததையே பிருத்வியால ஏத்துக்க முடியல... இப்போ சம்யூ நியூயார்க் போகறதை விரும்புவாரா..?? கண்டிப்பா தடுப்பாரு... இல்லன்னாலும் நியூயார்க் போயாவது சம்யூவை கூட்டிட்டு வந்துடுவாரு..."

"ஆனா சங்கு... இங்க இருந்தே இவங்க பிரச்சனையை சரி பண்ண முடியாம... நியூயார்க் போகனுமா..?? அந்த டைம்ல சப்னா திரும்பவும் பிருத்வியை நெருங்க முயற்சி பண்ணா என்ன செய்யறது..."

"எனக்கென்னமோ பிருத்வி திரும்ப சப்னாவோட சேரனும்னு முடிவெடுக்கமாட்டாருன்னு தான் தோனுது... பிருத்வி சம்யூவை தான் காதலிக்கிறாரு.. அதை அவரே சொல்லனும்னு சம்யூ எதிர்பார்க்கிறா... அதான் அவ நியூயார்க் போனா... கண்டிப்பா பிருத்வி சம்யூவை மிஸ் பண்ணுவாரு... கண்டிப்பா சம்யூவை தேடிப் போவாரு... இதுக்கு நடுவுல அந்த சப்னா ஏதாச்சும் செய்ய நினைச்சா... நாம எதுக்கு இருக்கோம்... அவளை ஒரு வழி பண்ணிடலாம் தேவா..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.