(Reading time: 14 - 28 minutes)

11. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே.......

உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூடப் பிடிக்கிறதே.........              

ராமிடம் பேச ஆரம்பித்த முதல் நாளிலேயே ஹரி பொறாமையில் பொங்கி எழுவான் என்று ஸ்வேதா கண்ட கனவு கனவாகவே முடிய, இருந்தாலும் மனம் தளராமல், ஹரியை வெறுப்பேற்றுகிறேன் என்று தினமும் காரில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை  ராம் உடன் பேசியபடி வர, ஹரிக்கு சிறிது சிறிதாக கடுப்பாக ஆரம்பித்தது.  இரு நாட்கள் பொறுத்த ஹரி, மூன்றாவது நாள் தீபாவை காரை ஓட்ட சொல்லிவிட்டு தான் சென்று ஸ்வேதா அருகில் அமர்ந்தான்.

“இப்போ எதுக்காக நீங்க தீபாவ ஓட்ட சொல்றேள்.  இதுக்கு நாங்க அவ கார்லயே வந்திருப்போமே”, என்று கேட்க, இதுக்குத்தான் என்றபடியே அவள் கையிலிருந்த மொபைலை வாங்கி வைத்துக் கொண்டான்.

“அச்சோ என்ன பண்றேள், என் மொபைலைக் கொடுங்கோ.  நான் ராம்க்கு கால் பண்ணனும்”, ஹரியிடமிருந்து மொபைலை வாங்க முயன்றாள் ஸ்வேதா.

“நீ என்ன முயற்சி பண்ணினாலும் உனக்கு உன்னோட ஃபோன் கிடைக்கப் போறதில்லை.  உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத.  நாம பாக்கறதே, கார்த்தாலையும், சாயங்காலமும்தான். அப்போவும் நீ அவனோட உன் ஆபீஸ் கதை பேசிண்டு வந்தா என்ன அர்த்தம்”

“ஆமா அப்படியே நீங்க ரெண்டு பேரும் என்னோட பேசறா மாறிதான்.  நீங்களும், தீபாவும் பேச நான் உங்க வாயை பார்த்துண்டு வரணும்.  அது எதுக்கு, அதனாலதான் நான் ராமோட பேசிண்டு வரேன்”

“ச்சே.... என் செல்லக்குட்டிக்கு இதுதான் கோவமா.  தீபா இனிமே உன்னோட நான் பேசமாட்டேன்.  பாரு நான் பேசலைன்னு ஸ்வேதா எத்தனை கஷ்டப்படறா.  நீ என்ன பண்ற காதுல இயர் போன் மாட்டிண்டு பாட்டு கேட்டுண்டு கார் ஓட்டுவியாம்.  நானும் ஸ்வேதாவும் பேசிண்டு வருவோமாம்”,நூறாவது முறையாக இந்த லவ் பண்றவங்களுக்கு ஃபிரெண்ட் ஆகவே கூடாது என்று தீபா யோசிக்க,  நாம என்ன சொன்னா, அதை இவன் எப்படி புரிஞ்சுக்கறான் என்று நொந்தாள் ஸ்வேதா.

“அது எதுக்கு தேவையில்லாம ஹரி.  நான் வேணா என்னோட கார்ல வரேனே.  நீங்களும் ஃப்ரீயா பேசிட்டு வரலாம்”, அவர்கள் இருவரும் கடலை போட தன்னை டிரைவர் ஆக்கிய கொடுமையில் கடுப்பாக கேட்டாள் ஸ்வேதா.

“ஹாங்..... அது எப்படி, அப்பறம் யார் கார் ஓட்டறது.  கார் ஓட்டிண்டே கான்ஸன்டிரேட் பண்ணிப் பேசறது கஷ்டம்.  நான் வேற கண்ணும் கண்ணும் நோக்கியா...... ரேன்ஜ்ல ஸ்வேதாவை பார்த்துண்டே பேசுவேனா.  அதுக்கு டிரைவிங் தொந்தரவா இருக்கும் பாரு”, ஹரி சொல்ல ஸ்வேதாவிற்கு வெக்க வெக்கமாக வந்தது.  தன் திருமுகத்தை கார் கண்ணாடியின் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள்.

அடுத்த இரண்டு நாட்கள் தீபா சாரதியாகி காரை ஓட்ட, ஹரி ஸ்வேதாவிடம் கடலையைத் தொடர்ந்தான்.  வெள்ளியன்று மாலை ஸ்வேதா ஹரியிடம் ராம் அவளை சனியன்று வெளியில் செல்ல அழைப்பதாகக் கூறினாள்.

“ராம் உனக்கு ரொம்ப நாளா பிரெண்ட்டா ஸ்வேதா?”

“எதுக்குக் கேக்கறேள்? ரொம்ப நாள்லாம் இல்லை.  இந்தப் ப்ராஜெக்ட் ஆரம்பிச்சதுலேர்ந்துதான் தெரியும்”

“நான் ஒண்ணு சொன்னா அதை கரெக்டா புரிஞ்சுப்பியா?”

ஹரி படு சீரியஸாகக் கேட்க, அச்சோ மொத்தமா போகவே வேண்டாம்ன்னு சொல்லப் போகிறானோ என்று  கவலையாக தலையசைத்தாள் ஸ்வேதா. 

தீபாவிற்கு ஸ்வேதாவின் இந்த நடவடிக்கையைப் பார்த்து செம்ம ஆச்சர்யம்.  நன்றாகத் தெரிந்தவர்கள் கூடவே ஸ்வேதா வெளியிடங்களுக்கு செல்ல மாட்டாள்.  அப்படி இருக்க ராமுடன் எப்படி என்ற யோசனையில் ஹரி என்ன கூறப் போகிறானென்று அவனைப் பார்த்தாள்.  சப்போஸ் ஹரி ஒத்துக்கொண்டாலும் தான் ஸ்வேதாவை தனியாக செல்ல விடக்கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்தாள்.

“உனக்கு ராமை கொஞ்ச நாளாத்தான் தெரியும்.  அதுவும் அவனோட இங்க வந்தப்பறம்தான் நேருல பழகற.  So நீ அவனோட தனியா வெளில போறது எந்த அளவு ஓகேன்னு தெரியலை.  நானோ, இல்லை தீபாவோ உன்னோட கூட வந்தா ஓகேவா.  கண்டிப்பா உங்க ரெண்டு பேர் மேலயும் சந்தேகம் அப்படின்னெல்லாம் தப்பா  நினைச்சுக்காத. உனக்கு பழகாத புது ஊர் அப்படிங்கறதாலதான் கேக்கறேன்”, ஸ்வேதா தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறாளே என்று தயங்கித் தயங்கி கேட்டான் ஹரி.  அவன் பேசப் பேச வாயடைத்துப் போய் உட்கார்ந்து விட்டாள் ஸ்வேதா.  இந்த ஹரி ஆனாலும் இத்தனை நல்லவனா இருக்கக் கூடாது என்று தீபாவிற்கு தோன்றியது. 

“அச்சோ ஹரி, நான் தப்பாலாம் நினைக்கலை.  கண்டிப்பா ரெண்டு பேருமே வாங்கோ.  ராம் கேட்ட உடனேயே நானும் நீங்க ரெண்டு பேரும் வருவேள்ன்னு சொல்லிட்டேன்”

“அது எப்படி நீ என்னைக் கேக்காம சொல்லுவ.  அந்த சோடா புட்டி கூடலாம் நான் வர முடியாது.  எனக்குத் தலைக்கு மேல வேலை இருக்கு.  HairCutting பார்லர்க்கு போகணும்”, தீபா முறைக்க, ஸ்வேதா அவளைத் தாஜா செய்ய ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.