(Reading time: 8 - 15 minutes)

03. நிர்பயா - சகி

Nirbhaya

லுவலகத்தில் ஏதோ கோப்புகளை சரிப்பார்த்து கொண்டிருந்தாள் நிர்பயா.கோப்புகளில் உள்ள விவரங்கள் யாவும் சரியாக இருக்க,அதில்,பச்சை நிற பேனாவால் கையொப்பமிட்டாள்.

சாளரத்தின் வழியே பேய் மழை பொழிந்தப்படி இருப்பது நன்றாக தெரிந்தது.

எழுந்து வந்து திரைச்சீலையை விலக்கி மழையின் துளிகளை உற்றுப் பார்த்தாள்.தன்னிச்சையாக அந்த செவ்விதழ்களின் ஓரம் குறுநகை பூத்தது.மறக்க முடியுமா தன் கடந்த காலத்தை???

ஒரு காலத்தில் மழைப்பொழியும் சமயம் பள்ளி விடுமுறையை வேண்டி தொலைக்காட்சியின் முன் அமர்ந்து,என்றுமே இல்லாத திருநாளாய் செய்திகளை மட்டுமே தவமாய் பார்த்த காலத்தை!!!எவ்வளவு வசந்தம் நிறைந்த காலமது!!!கடந்தக்காலத்தின் காயங்களுக்கு மாமருந்து ஒன்று என்றால்..அது,குழந்தைப் பருவத்தின் இனிமைகளே!!!

பெருமூச்சை விடுத்தவள்,மேசை அருகே சென்று தொலைப்பேசியை எடுத்தாள்.

"சொல்லுங்க மேடம்!"என்றது எதிர்முனை.

"நாளைக்கு ஸ்கூல்,காலேஜ்கெல்லாம் லீவ் டிக்லேர் பண்ணிடுங்க!"

"ஓ.கே.மேடம்!"-இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

அடுத்த பத்து நிமிடங்களுக்கு எல்லாம்...

முக்கிய செய்தி: உதகையில் கனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்ற செய்தி தொலைக்காட்சியில் ஔிப்பரப்பாகியது.

மணி இரவு என்று காட்டியது.

இன்னும் சிறிது தாமதித்தால் பார்வதியின் இறுப்பு கொள்ளாது!உடனடியாக கிளம்ப வேண்டும்.தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டவள்,தனது மேசையினை சீராக்கிவிட்டு கிளம்பினாள்.

"என்ன இந்தப் பொண்ணை இன்னும் காணலை??"-வாசலில் நின்றப்படி பரிதவிப்போடு பார்த்தார் பார்வதி.

"வந்துடுவாம்மா!ஏன் பயப்படுற?"

"இல்லைங்க..மழை வேற பெய்யுது!இந்த மழைக்கு நேரங்காலமே தெரியாது!அவ வீட்டுக்கு வந்ததும் வரலாம்ல!"-பொதுவாக பாட்டிக்கு உள்ள அக்கறையில் வருண பகவானையே சபித்தார் பார்வதி.

"ஏங்க..நீங்களாவது போய் பாருங்க!"-சிறிது யோசித்த வைத்தியநாதன் மனைவியின் கலவரமான முகத்தை பார்த்ததும்,கார் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

ங்கே...

நிர்பயாவின் கார் மழையில் நின்று போயிருந்தது.

அவளது ஓட்டுநர் பழுது பார்ப்பவரை அழைத்து வர சென்றுவிட,இனி கேட்க ஆளில்லை என்ற துணிச்சலில் மழையில் நன்றாக ஆட்டம் போட்டாள் அவள்.ஒரு மாவட்ட ஆட்சியர் என்ற நிலை மறந்து,அவள் போட்ட ஆட்டம்!அவளது கடந்தக்காலத்தை தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் ஒன்று!!!!ஒரு கட்டத்தில் மழையும் நின்று போக,காரில் சாய்ந்தப்படி நின்றவளின் செவிகளில் விழுந்தது ஒலிப்பான் (ஹாரன்) ஒலி!!

திரும்பி பார்த்தாள்.காரில் இருந்து இறங்கினார் பல்லவி.

அவர் முகத்தில் அவ்வளவு ஆனந்தம்!!அவரை பார்த்தவள்,எதை பற்றியும் கவலைக் கொள்ளாமல் திரும்பி கொண்டாள்.

நிர்பயாவிற்கு சங்கரனின் மேல் உள்ள கோபத்தில் சம அளவு பல்லவியின் மீதும் இருந்தது.காரணம்,பிறகு கூறுகிறேன்.ஆனால்,அதையும் மீறி அவரது அன்பிற்கு அடிப்பணியாதவள் இல்லை நம் கதாநாயகி.

இரண்டடி முன் வைத்தவரை தடுத்தது,

"அண்ணி!"என்ற ஏளனக்குரல்!!

நிர்பயாவின் செவிகளில் அக்குரல் விழுந்த சமயத்திலும்,அவள் திரும்பாமல் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள்.

"என்ன அண்ணி?எதுக்கு இறங்கிட்டீங்க?"

"இல்லை..."

"பொண்ணை பார்த்த உடனே அண்ணனை மறந்துட்டீங்களா?"

"..............."

"இந்த விஷயம் அண்ணணுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்னு தெரியும்ல?"

"லட்சுமி உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன்!ஒரு 5 நிமிஷம் அவ கூட பேசிட்டு வந்துடுறேன்!அவர்கிட்ட சொல்லிடாதே!"-பல்லவியின் வேண்டுதல்கள் நிர்பயாவின் செவிகளை அடைந்தன.

"சரி பேசிட்டு வாங்க!என்ன இருந்தாலும் என் மருமகளாச்சே!"-என்ற ஏளனமும் அவளை அடைந்தது.

பல்லவி மனம் முழுக்க பூரிப்போடு அவள் முன் வந்து நின்றார்.

"அம்மூ!எப்படிடா இருக்க?உன்னை பார்த்து எவ்வளவு நாளாச்சு!எனக்கு தெரியும் நீ அம்மா மேலே கோபமா இருக்கன்னு!என் நிலைமையை புரிந்துக்கோடா!நான் பண்ண பாவத்துக்கெல்லாம் என்னை மன்னிச்சிடும்மா!"-அவள் மௌனமாக அவரையே பார்த்தாள்.

"பேச மாட்டியா?நீ என்னை மன்னிக்கவே மாட்டியா?"-அவள் பேசிக் கொண்டிருக்க,லட்சுமி அவளருகே வந்தார்.

"ஏ..என்னடி?அவங்க இவ்வளவு பேசுறாங்க!கல்லு மாதிரி நிற்கிற?"-மீண்டும் மௌனம்.

"பதில் பேச மாட்ட?"-நிர்பயா தன் செவிகளில் இருந்து ஹெட்செட்டை கழற்றினாள்.இருவரும் திகைத்து போயினர்.கண்களில் ஏளனத்துடன் ஓரடி அவள் முன் வைக்க,லட்சுமி பின்னால் நகர்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.