(Reading time: 26 - 52 minutes)

08. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி

Nizhalaai unnai thodarum

வினிதாவின் மூளை எப்படி அந்த அறையை விட்டு வெளியேறுவது என யோசிக்கும் போதே அவளின் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது.

வினிதா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து சுற்றியும் முற்றியும் பார்த்தாள். அவளின் அறை இருளில் ழூழ்கி இருந்தது. தான் கண்டது கனவா என்று யோசித்தாள்? தூக்கம் கண்ணை சொருக அது வெறும் கனவு தான் என நினைத்து மீண்டும் உறங்க முயற்சித்தாள் வினிதா. ஆனால்,  அவளால் உறங்க முடியவில்லை.

எதனால் அவளின் கன்னம் இப்படி திடீரென எரிகிறது என்று தெரியாமல், எழுந்து நிலைகண்ணாடியில் அவளின் முகத்தை பார்ததாள்.. ஒன்றும் புரியவில்லை! ரொம்ப எரியுதே என யோசித்த படியே தூங்கியும் போனாள். 

மறுநாள் காலையில் சித்ரா அவளின் முகத்தை பார்க்கும் வரை அந்த பேய் சொன்னதும் விழுந்த அறையும் வெறும் கனவு என நம்பினாள்.

நிலைக் கண்ணாடியில் தெரிந்த அவளின் முகத்தை பார்த்தாள்... கன்னம் பழுத்து சிவந்து இருந்தது..

அந்த பேய் அவளை அழைத்து போவதாக சொன்னது நினைவுக்கு வந்தது.. ஆனால் ஏன், எதனால்..? பதில் தெரியவில்லை அவளுக்கு.. மீண்டும் மீண்டும் யோசிக்கயில் அவளுக்கு தலை வலித்தது.!

அவளின் கன்னம் இன்னும் எரிந்து கொண்டுதான் இருந்தது... தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவளுக்கு அவளில் மேஜை மேல் இருந்த பொம்மை கண்ணில் பட்ட, அதை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.

இலக்கு இல்லாமல் அந்த அறையை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தவளின் பார்வையில் அமுதா அவளின் அறையை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. அமுதாவும் அவளையே தான் பார்த்து கொண்டு வந்தாள்.

அவள் அருகே வந்தவள் “என்னடி என்னை இந்த பார்வை பார்க்குற"?

"நீங்களும் என்னையே தான் பார்த்திங்க, நான் ஏதும் சொன்னேன்னா?"

"நல்ல வாய் கிழிய பேசு, ஆனா உருப்படியா ஒரு பதிலும் சொல்லாத"

"அப்படி என்ன கேட்டிங்க, நான் பதில் சொல்லாமல் இருந்தேன்"

கையில் இருந்த கிண்ணத்தை மேஜை மேல் வைத்து, “உனக்கு தென்றல் ஹஸ்பண்ட் பேரு ஆதின்னு எப்படி தெரியும்”

“ஹி ஹி ஹி… சும்மா ஒரு கெஸ் தான்க்கா”

அமுதாவின் கோவமான முகத்தை பார்த்து “இல்ல, அது வந்து… நிறைய கதை புத்தகத்தில் ஹீரோ பேர் ஆதின்னு படித்து இருக்கேன்… அதான் இந்த கதையிலும் ஹீரோ ஆதியா இருக்குமோன்னு” என்று சொல்லி அமுதாவின் பார்த்து கண் அடித்தாள் வினிதா.

“நீயும் உன் கெஸ்ஸும்... ஆனா சரியாய் தான் சொன்ன...”

“சரி கையில் என்ன எடுத்துட்டு வந்திங்க, அதை அங்க வைச்சுட்டு என்னிடம் என்ன கதை வேண்டி இருக்கு ஹான்?”

“உனக்கு தான் எடுத்து வந்தேன்.. மஞ்சள் பத்து... இதை உன் கன்னத்தில் பூசனும்.. பார் கன்னத்தில் எப்படி ரத்தம் கட்டி இருக்கு...”

கிண்ணத்தில் இருந்த மஞ்சள் பத்தை வினிதாவின் கன்னத்தில் பூசியவளின் பார்வை, “இது என்ன புது பழக்கம் பொம்மை எல்லம் கைல வெச்சு இருக்க? ஆனா கொஞ்சம் பழசாக இருக்கு”

“ஹா ஹா ஹா”

“நீ ஏன்டி இப்படி பேய் மாதிரி சிரிக்குற”

“ஹி ஹி ஹி... சும்மா சிரிச்சேன்… இந்த பொம்மை நாங்க இங்க குடி வந்ததிலிருந்து இருக்கு... இது யாரின் பொம்மைன்னு தெரியாது.. யாரோ இதை இங்கேயே விட்டுட்டாங்க போல”

அமுதா சிறிது நேரம் யோசித்துவிட்டு, “கடைசியாக இருந்தவர்களின் குடும்பத்தில் சின்ன குழந்தைகள் இல்லையே... கொஞ்சம் பெரிய பிள்ளைங்கள் தான் இருந்தாங்க...”

“அது என்ன சின்ன பொண்ணுங்க மட்டும் பொம்மை வைச்சிக்கலாம், விளையாடலாம்ன்னு ரூல்ஸ் போட்டு வைத்து இருக்கீங்க...  ஏன் அந்த வீட்டில் இருந்த பெரியவங்க யாரவது இதை வைத்து இருக்கலாமே.. சரி இந்த பொம்மை என்னிடம் இருக்கே, அப்போ நான் மட்டும் என்ன சின்ன குழந்தையா?” அமுதாவிடம் சண்டைக்கு நின்றாள் வினிதா.

“அம்மாடி எனக்கு வீட்டில் நிறைய வேலை இருக்கு... உன்னிடம் இப்படி வெட்டி கதை பேச நேரம் இல்லை..”

“க்கும் பதில் சொல்ல தெரியலன்னா இப்படி எதாவது சொல்லி எஸ்கேப் ஆகுங்க... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடாதிங்க…” என்று அலுத்து கொண்டவள், கொஞ்சம் இடைவெளி விட்டு, “அக்கா நாளைக்கு நான் ஊருக்கு போறேன்.. வீட்டில் சின்னாத விசேஷம்...” என்றாள்.

“இந்த கன்னத்தை வைச்சுக்கிட்டா போக போற”

“அதுக்குன்னு வேற கன்னத்தை கடன் வாங்கிட்டா போக முடியும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.