(Reading time: 49 - 98 minutes)

30. காதல் பின்னது உலகு - மனோஹரி

Kadhal pinnathu ulagu

ன்னாச்சு ப்ரதிமா….இப்டி செய்துடியே நீ….விளையாட்டுக்குன்னு இந்த பக்கம் வந்தேன்…இல்லனா என்னடி ஆகி இருக்கும்….?” 

தங்கையை அந்த நிலையில் பார்த்த  அதிர்ச்சி, கோபம், இயலாமை, ஏனோ வந்த குற்ற உணர்வு…. (நாம எதுவும் கவனிக்காம விட்டுடமோ….).கூடவே  வந்த ஒதுக்கப்பட்ட உணர்வு….. (என்ட்டகூட சொல்லனும்னு தோணலையே…) பயம்….தவிப்பு….ஐயோ கடவுளே இப்டி ஆகிட்டே..நன்றி யேசப்பா…..காப்பாத்தி கொடுத்தீரே…. என எல்லாமுமாய் சேர்ந்த ஒரு உணர்வு ப்ரளயத்திற்குள் உட்பட்ட பவிஷ்யா…..முதலில்  காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை அடக்கிப் பேசியவள் இப்போது ஒவ்வொரு உணர்வுக்கும் இடம் கொடுக்க…..

வெடித்து சிதறலும் கெஞ்சல் கதறுலும்  ஒன்றாய் அனுபவித்தாள்…..

பவிஷ்யாவின் தங்கை ப்ரார்த்தனா இவளுக்கு 3 வருடங்கள் மட்டுமே இளையவள்…..ஆனாலும் பவிஷ்யாவைப் பொறுத்தவரை அவள் மீது ஒரு தாய்க்கு நிகரான பாசம் உண்டு….. முதல் குழந்தையான இவள் பெண் என்பதால் இரண்டாம் குழந்தை ஆணாய் பிறக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்த குடும்பத்தில் வந்து பெண்ணாய் பிறந்தவள்  ப்ரார்த்தனா….

அதனால் அவளை தூக்கி தூரப் போட்டுவிடவில்லை எனிலும்……அவளது பிறப்பின் ஏமாற்றம் அவளிடம் எப்போதும் எல்லா வகையிலும் காண்பிக்கபடும்….

நிச்சயமாய் பவியைப் போன்ற முக்கியதுவம் அவளுக்கு இந்த வீட்டில் என்றுமே இருந்தது இல்லை….குழந்தையாய் இருக்கும் போதே அம்மா அவளிடம் ஏன் அதிகமாய் எரிந்து விழுகிறார்….அப்பா ஏன் கண்டும் காணாமல் போகிறார் என பவியை எண்ண வைக்குமளவுக்கு இருக்கும் சூழல்…..

காரணம்தான் அவளுக்கு அப்போது புரியாது….. கண் முன் அடுத்தவர் மனஸ்தாபட்டாலே மனம் தவிக்கும் பவிக்கு…..அவளது பலமும் பலவீனமும் அது….இதில் கையருகில் குட்டியாய் சுற்றி வரும் குட்டித் தங்கை மீது இரங்காதா இவள் மனம்….

ஆக அம்மா அப்பா தராத முக்கியதுவத்தை இவளை அறியாதே அவளுக்கு கொடுக்க தொடங்கி இருந்தாள் பவி…..ஏழெட்டு வயதிலேயே தாயாக தமக்கைகளுக்கு தாரளமாய் வரும்…..

ப்ரார்த்தனாவை பொறுத்தவரை முதலிலிருந்தே ஒரு பயந்த குழந்தை நிலை…..சின்ன தவறுகளும் பெரிதாய் பின்விளைவை கொண்டு வரும் அவளுக்கு…..படிப்பிலும் ப்ரார்த்தனா பவி அளவு கிடையாது……கொஞ்சம் சுமார்தான்…..வீட்டில் அந்த கம்பரிசன் வேறு கிஞ்சித்தும் குறையாமல் வஞ்சமின்று கிடைக்கும்….

அதனால் அவள் ஒரு வகையில் அவள் அவளுக்குள் முடங்கிக் கொண்டவள்….எது கொடுக்கப் படுகிறதோ அதை எத்தனை பிடிக்கவில்லை எனினும் அப்படியே ஏற்றுக் கொள்பவள் போல் காண்பிக்க கற்றிருந்தாள்…. எதிர்த்து பேச வராது….

அக்கா பவிஷ்யாவை அவளுக்கு பிடிக்கும்…..ரொம்பவுமே பிடிக்கும்…..அவள் மீது தங்கைக்கு நம்பிக்கையும் உண்டுதான்ம்…. எதாவது தன்னால் தாங்க முடியாதது தன் மீது திணிக்கப் படும் போது அவளிடம் போய் உதவியும் கேட்பாள்தான்…. பவியும் தன்னால் முடிந்ததை செய்வாள் தான்….

அக்காவை தன் மாமாவிற்கு திருமணம் முடிக்கும் எண்ணம் பெற்றோருக்கு வந்திருக்கிறது என்பது பவிஷ்யா ரஷ்யாவிலிருந்த காலத்திலேயே ப்ரார்த்தனாவுக்கு அரசல் புரசலாய்  தெரியும்….

அதில் அவள் தவித்தும் போயிருந்தாள்….ஆனால் பவி படிப்பு முடியும் முன் மாமாவுக்கு வேறு இடம் அமைந்தால் அந்த இடத்தில் அவருக்கு மணம் முடித்துவிடுவது என்ற ஒரு எண்ணம் இருந்ததால் அந்த நம்பிக்கையில் இருந்தவள் இவள்….

ஆனால் அது இப்போது வந்து நிற்கும் நிலையில்தான் கதி கலங்கிப் போனாள் சின்னவள்…

அதிபனும் யவ்வனும் இவர்கள் வீடு சென்று பெண் பேசிவிட்டு வந்த மறுநாள்….. இவளது பெற்றோரும் வீடு வந்திருந்த மாமாவும்  பேசிக் கொண்டிருப்பது இவள் காதில் ஏதேச்சையாய் விழுந்து வைத்தது…..

“என்னது அவனுங்க பொண்ணு கேட்டு வந்தானுங்களா…? எவ்ளவு திமிர் இருந்தா இங்க படியேறி இருப்பானுங்க…..?” எகிறிக் கொண்டிருந்தார் இவளது மாமா….

இவளது அப்பா வீட்டிலுருக்கும் சமயங்களில் மாமாவின் குரல் பொதுவாய் எழும்பாது…. ஆனால் இப்போது அப்பா வீட்டிலிருக்கிறார் என இவளுக்குத் தெரியும் இருந்தும் இந்த எகிறல் என்றால்….??’

மெல்லமாய் வரவேற்பறையை எட்டிப் பார்த்தாள் ப்ரதி…

அப்பா அங்கிருந்த சோஃபாவில் ஒரு உம் முகத்துடன்....சற்றாய் முகம் தாழ்த்தி கண்கள் மட்டுமாய் உயர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தார்…..அப்டின்னா அவருக்கு பிடிக்காத எதோ நடக்குதுன்னு அர்த்தம்…

எதிரில் உட்கார்ந்திருந்த மாமா குரல் இப்போது சற்று இறங்கி…..”இதுக்குதான் வயசு பொண்ண கண்ட இடத்துக்கும் வேலைக்கெல்லாம் அனுப்ப வேண்டாம்னு சொன்னேன்….” சொல்ல சொல்ல குனிந்து கொண்டு போன மாமாவின் தலை இப்போது முனங்கியது….. “இந்த டாக்டர் படிப்பே வேண்டாம்னு சொன்னேன்…என் சம்பாத்தியத்துல அவ குடும்பம் நடத்துனா போதாதாங்கும்……”

மாடி படியேற துவங்கும் இடத்தில் நின்றிருந்த அம்மாவோ இப்போது அதட்டினார்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.