(Reading time: 15 - 30 minutes)

07. ஹேய்..... சண்டக்காரா... - ஜோஷ்னி

Hey sandakkara 

             

    எனக்காக நீ செய்யும் சிறு சிறு காரியங்களிலும்..

    என்னைத் தொலைக்கிறேன் நான்..

    காதலாய் அல்ல,

    கண்ணுக்குள் வைத்து என்னைத் தாங்கும்

    என் தந்தையின் சாயலை உன்னில் கண்டு..

காலை தென்றல் இதமாய் வீச, வெண்பனி மேகம் கண்டு, புவி சூழ வருவோமா வேண்டாமா என ஆதவன் யோசித்திருக்க... இந்த இயற்கையின் பரிபாரணங்களை ரசித்து கொண்டிருந்த ஷண்மதியின் சிந்தனையைக் கலைத்தது திடீரென்று ஒலித்த அந்த மொபைல் அழைப்பு.

“ ஹலோ, குட் ஐ ஸ்பீக் டு மிஸ்டர் டுபாக்கூர்? “

“ ஹலோ யார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்? “

“ அடப்பாவிங்களா!!! லாஸ்ட் டைம் கால் பண்ணும்போதாவது ‘எங்கேயோ கேட்ட குரல்’னு சொன்னீங்க, இப்ப அதுவும் போச்சா! காண்டாக்ட்ட டெலீட் பண்ணி, என்னையும் மேமரில இருந்து டெலீட் பண்ணிடீங்க போலவே! கருத்தெல்லம் ‘கண்ணா.. கண்ணா..“ தானா? அப்போ நாங்க எல்லாம் என்னவாம்? “

திடீரென்று வந்த அழைப்பு என்பதால் டிஸ்ப்ளேயைப் பார்க்காமல் கால் அட்டென்ட் செய்தவளுக்கு, இந்த அழைப்பு யாரிடமிருந்து என்று யோசிக்க அவசியமின்றி அந்த கேலி குரலே, அதன் சொந்தக்காரியைக் காட்டிக்கொடுத்தது.

“ ஹேய் மகி, சாரிடா. டிஸ்ப்ளேய பார்க்காம எடுத்துட்டேன் “

“ ஓகே.. ஓகே.. மறந்தோம் மன்னித்தோம் “ தியாகியாய் பதிலுரைத்தாள் மகதி.

“ அது சரி, அது யாரு..மிஸ்டர் டுபாக்கூர்? “

“ தெரியாத போலவே கேட்க வேண்டியது, வேற யாரு எல்லாம் உங்க பதி தான் “

“ ஆஹான். அவருக்கு ஏன்டி இந்த பேர் வச்ச? நல்ல இல்ல, மாத்திருடா “ என்று சிரித்தவளிடம்,

“ அதெல்லாம் மாத்த முடியாது. முன்னலாம் ‘அம்மு அம்மு’னு வீக்லி கால் பண்ற ஆளு. இப்ப மந்த்லி கால் அக்கிடாங்க. நீங்க மட்டும் என்னவாம், எப்பவாதும் தான் பேசுறீங்க. மகி பாவம்ல..... ஸோ, அத்தான் நம்பர் ஒன் டுபாக்கூர், நீங்க நம்பர் டூ டுபாக்கூர் “

“ அடிப்பாவி, உனக்கு வொர்க் இருக்கும்னு தானே அவரும் நானும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு அப்பப்போ கால் பண்றோம். அதுக்கு இப்படி எல்லாம் ஓட்றீயே.. இது நியாயமா? தர்மமா? உனக்கே அடுக்குமா? “

“ ஐயோடா, இந்த கப்ஸாலாம் வேற எங்கயாவது போய் சொல்லுங்க. மே பி அவங்க நம்பலாம். எங்கட்ட வேண்டாம். கொடுத்த பட்டம் கொடுத்ததே! “

“ இரு இரு, என்கிட்ட ஒரு நாள் மாட்டாமலா போக போற.. கே‌டி!!! “

“ அது இருக்கட்டும், எங்க என் அத்தனையே கண்ணுல காட்ட மாட்டேங்குறீங்க? “

“ எந்த அத்தானைக் கண் தேடுது மகி? “

“ ஹான்.. உங்க அவரைத்தான் “

“ ஒஹோ....அவர் ஜாக்கிங் போய்ருக்கார்டா. நீ என்ன இவ்ளோ எர்லியா கால் பண்ணிருக்க? “  

“ சும்மா தான்கா. இப்ப தான் ரெகார்ட் முடிச்சேன். அதான் ஃப்ரீயா இருந்தேன்னு கால் பண்ணேன் “

“ ஹாஹா.. நான் என்னமோ நீ வேற டைம்-ஸொனுக்கு ஷிப்ட்டாயிட்டியோனு நினைச்சேன் “ பெர்ஃபெக்ட் நக்கல்ஸ் ஷண்மதியிடம்.

“ அடடா, ஏன்கா... ஏன்??!!! “

“ ஹீ..ஹீ.. சும்மாமாமா... ஒழுங்கா படிக்குறீயா? “

“ எஸ்,எஸ்.. நல்லா படிக்கிறேன். இன்னும் டூ மன்த்ஸ் தானே, முடிச்சுட்டு குடுகுடுனு அங்க ஓடி வந்துடுவேன் “

“ வா வா.. உனக்காக தான் வெயிட்டிங். உன்னை வச்சு நிறைய பிளான் இருக்கு. பட் உனக்கு தான் இங்க போர் அடிக்க சான்ஸ் இருக்கே!! ”

“ வொய் அக்கா? அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே. அப்புறம் எப்டி போரிங்க்? நோ சான்ஸ். ஃபுல் என்ஜாய்மண்ட் தான் “  

“ எல்லாரும் இருக்கோம் தான். பட் உன் சண்டக்காரன் இல்லயே பேபி “

ஹரி சென்ற இத்தனை நாட்களில், அவன் நினைவை சொல்லும் ஏதேனும் ஒன்று தினம் தினம் அவள் நினைவில் உழல்வதுண்டு. இன்றும் கூட இந்த சோலனாசியம் ஃபேமிலி அவள் உயிரை வாங்கி விட்டது. ஏனோ டென்தில் அவனிடம் கெஞ்சி கூத்தாடி வரைய கொடுத்த ரெகார்ட்-வொர்க் நியாபகம் வந்தது. அவனிடம் பேசமுடியாமல் தவித்த மனதிற்கு எங்கு போய் முட்டிக்கொள்வது என்று தெரியாமல், எப்போதும் இவர்கள் சண்டைக்கு முடிவுகட்டும் கண்ணனிடம் வந்து சரணடைந்தது. அவனிடம் இவர்கள் பிரச்சனையை சொல்ல மனம் வரவில்லை. யோசித்தவளுக்கு எதை பிரச்சனை என்று சொல்ல என்பதே புரியவில்லை.  இருப்பினும் அவனிடம் பேசினால் பரவாயில்லை என்று தோன்ற, அவனை அழைத்தாள். அவன் இல்லை என்றாலும், ஷணுவிடம் பேசுவது அவளுக்கு மகிழ்ச்சியளித்தது.

நினைவுகளில் நின்றிருந்தவளை ஷணுவின் “ மேடம் இருக்கீங்களா லைன்ல? “ என்ற குரல் கலைக்க, “ அவன் கிடக்குறான் கருவாயன். அவன் இல்லனா எனக்கென்ன! “ என்று சட்டென்று பதில் உரைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.