(Reading time: 11 - 21 minutes)

14. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

'போன் பிடிச்சிருந்ததா, உங்களுக்கு?' என்று விசாரித்தார் சுந்தரம்

குறும்பாக சிரித்தபடி,ராதாவைப் பார்த்துவிட்டு, ரஞ்சனாவைப் பார்த்துக் கொண்டே கேட்டார்,

ரஞ்சனா கேட்டாள் ' இல்லை,நீங்க எனக்கு, மரியாதையெல்லாம் கொடுக்கவேண்டாம்னு அப்பவே சொன்னேனே,' என்றாள்

'ஓ, அப்பவே தேங்க்ஸ் வேற சொல்லிட்டீங்களா, அதனாலே உங்க தேங்க்ஸ் வேஸ்ட் பன்னவேண்டாமே என்று மரியாதை கொடுத்துடலாமே என்று என்ன ராதா, நான் சொல்லறது சரி தானே,' என்று அவளை பார்த்து குறும்பாக சிரித்தார், அவர் சிரித்த, சிரிப்பு ராதாவிற்கு ரொம்ப பிடித்திருந்தது, உடெம்பெல்லாம் சிலிர்த்தது, அவள் முகம் சிவப்பதைப் பார்த்து என்ன என்று புருவத்தை உயர்த்திக் கேட்டார்? அவளால் பதில் சொல்ல முடியவில்லை, தலை குனிந்துக் கொண்டாள்,

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனாவும், ரம்யாவும் கண்ணால் பேசிக்கொண்டார்கள்.

அதையும் பார்த்தார் சுந்தரம், திரும்பி அவளை வம்பிழுத்தார், ‘இன்னும் நீங்க சொல்லலை போன் எப்படியிருந்தது?’ என்று வம்பிழுத்தார்

‘இதென்னப்பா ஒரு போனை கொடுத்துட்டு, எப்படியிருக்கு, எப்படியிருக்குன்னு ஓர் ஆயிரம் முறை கேட்டுட்டீங்க, அம்மாஆ... ‘என்றாள்

‘இதென்ன உங்களுக்கு கணக்கு சரியா வராதா? யார் உங்களுக்கு என்ஜினீயரிங் அட்மிஷன் கொடுத்தாங்க?’ என்று கேட்டார் குறும்பாக, தன் சிரிப்பை மறைத்துக் கொண்டு,

அவளும், 'எங்களுக்கு கணக்கெல்லாம் நல்லாத்தான் வரும், ஆனா, நீங்க சொல்லற அந்தக் கணக்குத்தான் புரியல' என்றாள்

அதான் சொன்னேன், உங்களுக்கு புரியலைன்னுதான் நானும் சொன்னேன்,'என்றார்

'ஓ, இப்ப புரிந்தது, நீங்க ஒரு முப்பத்தைந்தாயிரம் போனை கொடுத்து, எப்படியிருந்தது என்று ஓராயிரம் முறை கேட்டீங்கன்னு சொன்னேனே, அந்தக் கணக்குத்தானே?’ என்றாள்

அவர் வியந்தார், இவளுக்கு எப்படி விலை தெரிந்தது? என்று, ராதா, தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள், கண்ணால் கேட்டாள், அவள் சொல்வது சரியா? என்று அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை, ரம்யாவிற்கும் ஷாக், ‘இவ்வளவு விலையா?’ ரம்யா கேட்டாள், ‘ஹே, இந்த போன் இவ்வளவு விலையா? உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டாள்? இதென்ன வம்பு, வாங்க முடியாதுன்னா, விலை கூடவா தெரிஞ்சுக்கக் கூடாது?’என்று அவள் கேட்டாள்

அதைக் கேட்ட சுந்தரம் வியந்தார், இந்தப் பெண் புத்திசாலி, நல்லா படிக்கவைக்க வேண்டும், நல்ல வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்'என்று தீர்மானம் செய்துக் கொண்டார்.

‘ஆமாம் அதென்ன நீங்களேதன் பேசுவீங்களோ, உங்க அக்கா ரம்யா பேசமாட்டாங்களா?’ என்று கேட்டார் சுந்தரம்

‘அவள் பேசாமடந்தை’ என்றாள்

‘என்ன பேசாமடந்தையா? ‘என்றார் சுந்தரம்

'ஏய், என்னை ஏண்டி அப்படி சொன்னே?’ என்றாள் ரம்யா

'அப்ப, அவர் கேக்குற கேள்விக்கு நீ பதில் சொல்லு,' என்றாள் ரஞ்சனா

'ஐயோ, ஆரம்பிச்சிட்டீங்களா? ரெண்டு பெரும் சண்டை போட கொஞ்சம் நிறுத்தறீங்களா உங்க சண்டையை' என்று ராதா கோபிக்க,

சுந்தரம் ராதாவைப் பார்த்து 'ஏம்மா, அவங்களை கோபிக்கிற, அவங்களோட பேசறச்சே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இந்த வீட்டுக்கே இப்பத்தான் களை வந்திருக்கு, அவங்களை, அவங்க போக்குக்கு விடு, நாளைக்கே கல்யாணமானா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடம் ஆகிடுவாங்க, அது வரையில் என்ஜாய் பண்ணட்டும், ஒன்றும் சொல்லாதே,' என்று மெதுவாக அவளிடம் சொன்னார்.

‘நீ பேச மாட்டியா ரம்யா? ‘என்று கேட்டார் சுந்தரம்

‘நான்...நான் பேசுவேன், ஆனால் அவளை மாதிரி பேசமாட்டேன்,’ என்றாள் ரம்யா

‘ஏய், இப்ப நீ ஏன், என்னைப் பற்றி பேசற, உன்னைப் பற்றி மட்டும் பேசுவதுதானே,’ என்றாள் ரஞ்சனா

‘அப்ப நீ பேசினதுக்கு இது சரியாயிடுத்து, அதனால் இப்ப வாயை மூடு,’ என்று சொன்னாள் ரம்யா

ரஞ்சனா போன் ரிங் வந்தது, போன் ராதா பக்கத்திலிருந்ததால் அவள் பார்க்கும் போது, "சீனு காலிங்" என்று வந்தது, அதைப் அவள் பார்த்தாள், அது சுந்தரத்தின் கண்களுக்கும் பட்டது, ரஞ்சனாவைப் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தார் சுந்தரம்,

இவர்கள் பார்த்து விட்டார்களென்று ரஞ்ஜனாவிற்கும் தெரிந்து விட்டது, முகமெல்லாம் செக்கச் சிவந்தது, ரம்யா மெதுவாக, ‘கன்றோல் பண்ணு முகம் சிவந்திருக்கு' என்று சொன்னாள்

அவள் போனை எடுத்துக் கொண்டு 'சாரி' என்று சொல்லிவிட்டு போய்விட்டாள், பாதி சாப்பட்டிலிருந்து, தன் ரூமுக்கு போனாள்

சீனுவுக்கு கால் செய்தாள், ‘என்ன விஷயம் சீனு?’

‘ இல்ல இங்கே இருந்த வரையில் மேல் மாடியில் மீட் பண்ணுவோம் அது இப்போ கஷ்டமாக இருக்கு,அதான் உன்னோட கோஞ்சம் பேசலாம்னு போன் பண்ணேன்,’ என்றான்

‘நல்லா பண்ணே...போச்சு, எல்லாம் போச்சு... ‘

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.