(Reading time: 11 - 21 minutes)

08. வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

து ஒரு அழகிய கிராமம் .... ஈரோட்டில் இருந்து 40 கி .மீ தொலைவில் உள்ளது ... அமைதியான சூழ்நிலை வெள்ளந்தியான மக்கள் ... 

ஊரின் ஒரு கோடியில் சலசலத்து ஓடும் ஆறு .. மறுகோடி தழுவி செல்லும் உயர்ந்த மலையுமாய் கண்ணிற்கு குளிர்ச்சியாகவும் இருக்கும் ..

ஆற்றங்கரை ஒட்டி ஒரு கோவிலுமுண்டு ... மிகவும் புகழ்பெற்ற கோவில் ஆனால் கூட்டம் குறைவுதான் அந்த கோவிலினுள் நுழைந்தாலே அப்படி ஒரு அமைதி இருக்கும் தேவையற்ற விளம்பரமோ அல்லது கோவிலை சுற்றிய கடைகளோ இல்லாமல் கோவிலுக்கு வெளியே பூவிற்கும் ஒரு பாட்டி .... கற்பூரம் விபூதி விற்கும் ஒரு சிறிய கடை ...

அம்மனின் ஆசிபெற்றவர்கள் எங்கிருந்தாலும் தொடர்ந்து வருவதுண்டு ....

அந்த கோவில் இருந்த தெருவில் தான் இருந்தது அந்த வீடு பார்க்கும்போதே சந்தோசம் தருவதுபோல் ... வீட்டை பூக்களாலே அலங்கரித்ததுபோல் வீட்டின் முற்றத்தில் இருக்கும் மல்லிகை பந்தலும் ... அதனை சுற்றி இருக்கும் ரோஜா தோட்டமும் அதை தொடர்ந்த வேலியை ஒட்டி இருந்த செம்பருத்தி செடியும் ....அந்த இடத்திற்கு கூடுதல் ரம்யத்தை சேர்த்தன ...

அதை தொடர்ந்து போனால் ... பழுத்து தொங்கும் சிவந்த தக்காளி ...பளபளப்பாய் சிரிக்கும் சிவப்பட்டு மிளகாய் ... இலையுடன் ஒளிந்து விளையாடும் ஊதா நிற கத்திரி .... நிறைமாத மாதாய் பொலிவுடன் மின்னும் அவரை ...இப்படி பலவகை காய்கறிகளும் ... மாதுளை ,எலுமிச்சை , கொய்யா , சாத்துக்குடி போன்ற பலவகை பழங்களும் காய்கறிகளும் நம்மை வரவேர்த்து கொல்லைப்புறம் அழைத்து செல்ல அங்கே நன்கு செழித்து காய்த்த முருங்கையும் ... கும்மென்று மணக்கும் அடுக்கு மல்லியும் .... கீரை பாத்தியும் ..மணம்வீசும் புதினாவும் ,கொத்தமல்லியும் ... அதனூடே அமர பெஞ்சும் அதையொட்டிய கிணறும் .... பார்க்க பார்க்க திகட்டாத காட்சிகள் ...

உள்ளே டிர்ர்ர் ..டிர்ர்ர் என தையல் மெஷின் ஓடும் சத்தம் கேட்டது ... அதனூடே முன்னே படல் ( கேட் ) திறக்கும் சத்தமும் ... பிரபா ... பிரபா .. என்ற குரலும் கேட்க மெஷின் சத்தம் நின்றுபோனது .... வாங்க அக்கா என அழைத்துக்கொண்டே ..முன்னே உள்ள திண்ணைக்கு வந்தாள் அந்த இளம்பெண் ... அந்த வீட்டில் யாரும் இந்த எல்லைக்கு மேல் உள்ளே சென்றதில்லை செல்லவும் அனுமதித்ததில்லை .... அவளிடம் டியூஷன் படிக்கவரும் பிள்ளைகளும் வெளிப்புறம் உள்ள படிவழியாய் மாட்டிக்கும் பின் அவர்கள்  வீட்டிற்கும் செல்வர் ... தோட்ட வேலைக்கு வரும் பொன்னாம்மாவும் வீட்டின் பின் கட்டு தாண்டி உள்ளே சென்றதில்லை ..

அவள் பார்க்க பளிச்சென்று இருந்தாள் முகத்தில் பொலிவு .. அளவான நகை ... கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிறும் அவளுக்கு அழகு சேர்த்து தழைய தழைய பின்னிய கூந்தலும் ... அதில் நிறைந்த மல்லிகையும் .. அவளை பார்க்கும்போது மனதில் ஒரு சந்தோசம் வந்தது ..

சொல்லுங்க அக்கா உங்க பிளவுஸ் தானே காலைலயே ரெடி பண்ணிட்டேன் இந்தாங்க ...

வாங்கி பார்த்தவள் என்ன பிரபா நெறைய பூ வேலைப்பாடெல்லாம் செஞ்சிருக்க இதுக்கு எவ்ளோ ரூபா நான் எப்பவும் போலத்தான் காசு கொண்டாந்தேன் ...

விடுங்கக்கா இது உங்க பொண்ணுக்கு தைக்கிற முதல் ப்லோஸ் அது மட்டும் இல்லாம டவுன் காலேஜ் பொறப்புள்ள நல்லா போட்டுட்டு போகட்டுமே இதுக்கு தனியா காசு வேண்டாங்க்கா ... 

நீ ரொம்ப நல்லவ ... உன் மனசுக்கு எந்த குறையும் வராது .. நீ நல்லா இருப்பமா ..

என்னக்கா இதுக்குப்போய் சரி வாங்க உங்கப்பொண்ணுக்கு அவரை காய் பிடிக்கும்னு அன்னைக்கி சொன்னீங்கள்ள நல்லா காய்ச்சி இருக்கு  வாங்க கொஞ்சம் பறிச்சு  தரேன் அவளுக்கு செஞ்சி கொடுங்க ..

சரிம்மா என்றால் வாயெல்லாம் பல்லாக ..

வீட்டின் பக்கவாட்டு பக்கம் சென்றவர்கள் அவரை செடி வந்தவுடன் அதன் அருகே சென்று அத்துடன் சிறிதுநேரம் செல்லம் கொஞ்சியவள் .. அவங்க வீட்டு பொண்ணுக்கு உங்க காய் ரொம்ப பிடிக்குமாம் கொஞ்சம் பறிச்சுக்கவா என கேட்டு காய் பறித்து கொடுத்தால் ...

என்ன பிரபா செடி கிட்ட பேசற பலநேரம் நீ விளையாட்டு பொண்ணுமா  ... 

அக்கா செடி கோடிகளுக்கு உணர்வு உண்டு நாம பேசுறது அவங்களுக்கு புரியும்க்கா ..

என்னவோ போ அதுனாலதான் உன் தோட்டத்தில் மட்டும் காய் இப்படி ருசியாவும் நிறையவும் காய்க்குதோ என்னமோ ...

இதற்க்கு பதிலாய் ஒரு சிரிப்பை மட்டுமே தந்தவள் ... அக்கா வாங்க ஒரு நிமிஷம் என்றவள் ... பின்னே சென்று .. சில முருங்கை காய் பறித்து கொடுத்தால் ..

நாளைக்கு வேணும்னு வைக்காதீங்க இன்னைக்கே சாம்பார் பொரியல் பண்ணுங்க ... சரியாய் என்க ..

சரி சரி .. எப்படியும் நான் பெத்த மகராசி உன்கிட்ட வந்து ஒப்பிக்கத்தான் போற அப்புறம் என்ன என சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள் ..

செடிகளை கடந்து வந்த பிரபா மொச்சை பார்த்தவுடன் அதை பறித்து சுத்தம் செய்து சுண்டலும் காபியும் செய்தவள் .. நேரம் பார்த்துவிட்டு அன்று டியூஷன் பசங்களுக்கு படிப்பதற்கு தேவையானவற்றை ரெடி செய்துகொண்டிருந்தாள் ..

வேளையில் மூழ்கியவள் வெளியே என்ன நடக்கிறது என்பதை கவனிக்காமல் இருக்க பூனைபோல் மெல்ல அடியெடுத்து உள்ளே வந்தான் அவன் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.