(Reading time: 11 - 21 minutes)

08. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

தீபாவளிக்கு பதினைந்து நாட்கள் இருக்க, சுபா அந்த வாரம் தங்கள் வீட்டிற்கு போனில் பேசும் போது, சுபாவின் அப்பா ,

“சுபா.. அப்பா, அம்மா ரெண்டு பேரும் தீபாவளிக்கு அங்கே வரோம் மா..” என்றார்..

“ஏன் பா ..? நீங்க வந்தாலும் நான் campus விட்டு வர முடியாதே.. “

“இல்லை டா.. நீதானே சொன்னே.. வீக்லி ஆப் மாதிரி மதியம் போயிட்டு வரலாம் நு.. அத கேட்டு அம்மா நாங்க அங்கே வந்து தங்கிட்டோம்னா நீ நேரா வந்து எங்களோட join பண்ணிக்கலாம் நு சொல்றா.. “

“ஏன் பா? எதுக்கு அலையறீங்க..? நீங்க அம்மாகிட்ட கொடுங்க “

அவள் அம்மாவிடம் “ என்னம்மா நீங்க.. ? பண்டிகை அதுவுமா வீட்டை பூட்டிட்டு வரக்கூடாதுன்னு சொல்லுவீங்க... ? “

“ஹேய்.. அது எனக்கு தெரியாதா.. ? அதுக்கு வேற ஏற்பாடு பண்ணிக்கறேன்.. உன்னை பார்த்து கிட்ட தட்ட ஆறு மாசம் ஆச்சுடா.. நீ இல்லாம நாங்க வீட்டிலே என்ன பண்டிகை கொண்டாட போறோம். அதான் உன்னை பார்த்த மாதிரியும் ஆச்சு.. பண்டிகைக்கு இருந்த மாதிரியும் இருக்கும்.. அதோட இந்த வருஷம் புதுசா ரெண்டு , மூணு ஸ்வீட்ஸ் ட்ரை பண்ணி பார்க்க போறேன். நீ சாப்பிடாட்டி எனக்கு கஷ்டமா இருக்கும்“

“ஐயோ ... ருக்கு மேடம்...  இந்த வருஷ உங்க speciman லிஸ்ட்லேர்ந்து நான் எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா விட மாட்டேங்கறீங்களே.. அதான் ரெண்டு அடிமைகளை அங்கே செட் பண்ணிட்டுதானே வந்திருக்கேன்.. “ என்னும் போதே வருணும், மகியும்

“ஹேய்.. சுறா .. எத்தனை நாள் பிளான் இது? அம்மா.. விடாதீங்க... எங்களை மட்டும் மாட்டி விட்டுட்டு.. அவ எஸ்கேப் ஆகலாம் நு பார்த்தாளா? “

“அடிங்க.. எல்லாரையும்.. அம்மா நீங்க செய்யற மாதிரி ஸ்வீட் நம்ம grand ஸ்வீட்ஸ்லே கூட கிடைக்காதுன்னு சொல்லிட்டு , இப்போ அவ கூட சேர்ந்து நீங்களும் கலாயிக்கரீங்களோ... இந்த வாட்டி.. உங்களுக்கு எதுவும் கிடையாது..”

“அச்சோ... நாங்க சும்மா அவள வெறுப்பேத்த சொன்னோம்... நீங்க யாரு.. நளமகாராணி.. அவ கிடக்கா.. நீங்க எல்லாம் செஞ்சு எங்க கிட்ட கொடுத்துட்டு , வெறுங்கையோட போய் பார்த்துட்டு வாங்க..”

சுபா கையில் இருந்து போன் வாங்கிய நிஷா “அம்மா நல்லா சொன்னீங்கம்மா... இவ லொள்ளு தாங்க முடியல.. நீங்க எல்லாம் செஞ்சு எடுத்துட்டு வாங்க.. .அவள விட்டுட்டு நாம சாப்பிடலாம்.

மீண்டும் போன் தன் கையில் வாங்கிய சுபா, “டேய். ஜால்ராஸ்.. இப்படி கட்சி மாறிட்டீங்களே.. நீங்களா friends ஆ ?”

“அத யாரு நீ சொல்ற..?”

“நீங்களே இவ்ளோ ஜிங்க்சக் போடும்போது நான் போட மாட்டேனா...?

அம்மா ..அம்மா.. நீ எங்க அம்மா...

உன்னை விட்ட எனக்கு யாரு அம்மா..

கடையில் ஸ்வீட்ஸ் எல்லாம் வாங்கி நானும் சாப்பிட்டேனே..

உன்னோட ஸ்வீட்ஸ் போலே எதுவும் இல்லை..

நீயே நீயே. என் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவும் நீயே..

நீயே நீயே grand ஸ்வீட்ஸ் மில்க் ஸ்வீட்சும் நீயே..

என் அடையார் ஆனந்த பவன் தட்டையும் நீயே...

என்று போனில் பாட்டு பாட.. அவள் friends

“அம்மா தாயே.. எங்கள என்ன வேணும்னாலும் சொல்லு.. ஆனால் பாட்டு பாடி கொல்லாதே.. “ என்று கதற,

“உடம்பு பூரா கொலேஸ்ட்ரால் டி உனக்கு... அங்கே வித விதமா சாப்பிடமால் நாக்கு செத்து இருக்கும்போதே இப்படி வாயடிக்கறியே.... நல்ல சாப்பாடு மட்டும் போட்டா உன்னை கையிலேயே பிடிக்க முடியாது.. “ என்று அவள் அம்மா நக்கலடிக்க, பேசி முடித்தனர்.

சுபா நிஷா ஒருவரை ஒருவர் அடித்தபடி இருவரும் செல்ல, அவர்களை தொடர்வதே தங்கள் வேலையாய் வைத்து இருந்த அர்ஜுன், ராகுல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

பின் அர்ஜுனும் தன் வீட்டிற்கு பேசிவிட்டு ராகுலிடம் “நமக்கு வில்லனுங்க வராணுங்கடா “ என

“யாருடா அது.. ? எந்த நாட்டு வில்லன் ? “

“ஹ்ம்ம்.. நம்ம ரெண்டு பேரு காதலுக்கும் வில்லன்...”

“ஹேய்.. என்னடா.. இப்படி சொல்ற ?..  எதாவது முறை மாப்பிள்ளை இருக்கங்களா ரெண்டு பேருக்கும்? அத பத்தி நான் கவலைபட மாட்டேன்.. எனக்கு நிஷா ஓகே சொல்லிட்டன்னா ...மத்த எல்லாரையும் சமாளிச்சுடுவேன்..”

“நிஷாவ கூட சம்மதிக்க வச்சிரலம்டா.. ஆனால் இவங்கள சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்டா மச்சான்..”

“நீ வேற ஏண்டா ஏகத்துக்கு பில்ட் up கொடுத்துட்டு இருக்க ? ஏற்கனவே நாம எக்கச்சக்கமா மாட்டிகிட்டு இருக்கோம்.. அவங்கள follow பண்றது, நமக்கு தமிழ் தெரியும் என்பது இதெல்லாம் அவங்க கிட்ட சொல்லாம இருக்கோம்...  இது வேற புது பிரச்சினையா ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.