(Reading time: 4 - 7 minutes)

06. உயிர் ஆதாரமே..!! - ப்ரியா

Uyirin aatharame

திர்ந்து விழிக்கும் மித்ரனை காணாமல் தன்னிடம் சண்டையிட்டு கொண்டிருந்தவளிடம் தான் வைஷ்ணவின் முழு கவனமும் இருந்தது.

"ஹே செல்லம்மா அப்படி எதுவும் இல்லடி, கொஞ்சம் அப்செட் அவ்வளவு தான்"

"ஹ்ம்ம்ம் போ, அவ மேல என்ன தான் கோபம் இருந்தாலும் எனக்கு அப்புறம் உன்மேலே உண்மையான அன்பு அவ தான வெச்சுருக்கா? அந்த வகைல நாங்க ரெண்டு பெரும் கூட்டாளிங்க தான சோ நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்"

போனால் போகிறது என்பது போல் அவள் கூறும் தோனியில் சிரித்துக் கொண்டே மித்ரன் பக்கம் திரும்பியவன் அவன் முகத்திலும் புன்னகை அரும்புவதை பார்த்து  "பார்த்தியா?" என்பது போல சைகை செய்தான். ஆமாம் என தலையாட்டி கொண்டே குளியலறைக்குள் புகுந்தான் மித்ரன்.

அவன் சென்றதும் ஸ்பீக்கரில் அதுவரை இருந்த போனை ஆப் செய்தவன், காதில் வைத்து பேசினான்.

"ஹேய் குரங்கே போதும்டீ காலைலயே அமர்க்களம் பண்ணாதே.. நித்திலா ஓட அம்மாவை பார்க்க போகலையா?"

"அதானே பார்த்தேன் என்னடா என்னை சமாதானம் செய்றான், இன்னும் அந்த மேடம் பத்தி கேட்கவே இல்லையேன்னு?"

"என்ன தான் இருந்தாலும் நீ தானடி எனக்கு முக்கியம்.. இன்னும் என்னன்னே தெரியாத ஒரு உறவுல தான நானும் நித்திலாவும் இருக்கோம்"

"நிறுத்து நிறுத்து அவ தான் உன்னை உருகி உருகி லவ் பண்றாளே அப்புறம் எப்புடி நீ இப்படி சொல்லலாம்?"

"பார்த்தியா? எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி கலாய்க்கிற? ஒரு குற்ற உணர்ச்சில தான் அவங்க அம்மாவை பார்த்துக்க உன்னை வர சொன்னேன் அபி"

"அடடா சரி சரி.. சும்மா உன்னை கிண்டல் பண்ண பார்த்தேன் உடனே சீரியஸ் ஆகாத, நேத்து தானே அவங்க வீட்டுக்கு போனேன் சோ நாளைக்கு பொய் செக் பண்ணா போதும் டா"

"அவங்க எப்படி இருக்காங்க அபி?"

"ரொம்ப தெறித்து வர்ராங்க முதல்ல இருந்ததுக்கு.. பெருசா ஏதுமில்லை டா"

"அப்பாடா.. நிம்மதியா இருக்கு ஆனாலும் அவங்க முழுசா குணம் ஆனா தான் எனக்கு பூரண நிம்மதி"

"ஹ்ம்ம்ம் அம்மாவை பத்தி கேட்டுட்ட பொண்ணு பத்தி தெரிய வேண்டாமா?"

"ஆளை விடு சாமி.."

"ஹ்ம்ம் அந்த பயம் இருக்கணும்"

"சரி வெச்சுடவா?"

"வைனு"

"என்னடா?"

"நித்திலா நமக்குள்ள வர்றதால நம்ம பிரிஞ்சுட மாட்டோம்ல?! நம்ம பிரெண்ட்ஷிப்பை அவ தப்பா..."

"ஹேய் ஹேய் நிறுத்து.. நித்திலான்னு இல்லை வேற எந்த பொண்ணா இருந்தாலும் நம்ம பிரெண்ட்ஷிப்பை புரிஞ்சுக்கிட்டா மட்டும் தான் நான் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லுவேன்"

"ஹம்ம்ம்ம்ம் சரி டா, வெச்சுடறேன்"

"லூசு மாதிரி கண்டதையும் யோசிக்காம சமத்தா இரு"

"போடா மாங்கா எல்லாம் எங்களுக்கு தெரியும்", என்று அவள் போனை வைக்க, போனை வைத்து விட்டு திரும்பியவன் அறையில் வந்த காபி மணத்தில் லயித்து போனான்.

"மித்ரன் நீயே ஆர்டர் பண்ணிட்டியா?"

"ஹ்ம்ம் நான் ஆர்டர் பண்ணி ரூம் பாய் வந்து குடுத்தது கூட தெரியாம நீ போன்ல பேசிட்டு இருந்த?"

"ஓ சாரி"

"ச்ச ச்ச ஒன்னும் பிரச்சனை இல்லை, நீ பிரெஷ் ஆகிட்டு வந்து காபி எடுத்துக்கோ.. நானும் கிளம்பறேன் அம்மா காத்துட்டு இருப்பாங்க"

"சியூர் இரண்டு நிமிஷம்" என்று கூறி விட்டு சென்றவன் குளித்து விட்டே வர, காபியுடன் விடை பெற்று கொண்டான் மித்ரன்.

"பை மித்ரன், தேங்க்ஸ் என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு"

"இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம், எப்படியும் இது நடந்திருக்கும் என்ன கொஞ்சம் சீக்கிரம் நடந்திருக்கு அவ்வளவு தான்"

ஒரு அர்த்த பார்வை மித்ரனிடம்!!

"அப்புறம் இன்னொரு விஷயம் வைஷ்ணவ், நீங்க எப்படி அபி கிட்ட உங்க பிரெண்ட்ஷிப் பத்தி பேசுனீங்களோ, இதே மாதிரி தான் நித்திலாவும் ஒரு தடவை என்கிட்டே சொல்லி இருக்கா"

"நிஜமாவா?" வியப்புடன் அவன் நோக்க,

"நிஜம் தான்.. நானும் அவ கிட்ட அவ கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் தனி ஆகிடுவானோன்னு கேட்டிருக்கேன், அவளும் நீங்க சொன்னதையே தான் சொன்ன!!!"

"......."

"உங்களுக்குள்ள ஏதோ ஒரு பிணைப்பு இருக்கு அதை என்னால உணர முடியுது, நான் வரேன் பை"

"பை மித்ரன்"

அவன் சென்ற பின்பும் அவன் சொன்ன வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் அசை போட்டுக் கொண்டிருந்தான் வைஷ்ணவ்.

'உங்களுக்குள்ள ஏதோ ஒரு பிணைப்பு இருக்கு'

உயிர் தேடல் தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1037}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.