(Reading time: 6 - 11 minutes)

04. நிர்பயா - சகி

Nirbhaya

வளது கண்கள் அமைதியாக மூடி இருந்தன.உதகையில் உதித்த கதிரவன் தனது மென்மையான கிரணங்களைஅவள் மீது தெளித்தான்.குளிர்ந்த அந்த வேப்பமரத்தின் கீழ் அவளுக்காகவே சற்று மேடாக கட்டப்பட்டிருந்தது அந்த மேடை!!அவளது இரு கரங்களின் கட்டை விரலும்,ஆள் காட்டி விரலும் இணைந்திருக்க,எஞ்சிய விரல்கள் நிமிர்ந்திருந்தது.அமைதியான தியானம்!!!மிக அமைதியான தியானம்!!இயல்பாக நிர்பயாவிற்கு தியானிக்கும் வழக்கமில்லை.ஆனால்,தியானிக்க கற்றுக் கொண்டாள்.தன்னை உறுதியாக்க,எதையும் எதிர்க்கும் சக்தியை பெற அவள் தவத்தை கையாண்டாள்.ஒரு மனிதன் தன்னிலை பெற மன கட்டுப்பாடு என்பது அவசியம்.மனம் அதன் போக்கினில் அலையும் என்றால்,வாழ்வில் மகிழ்ச்சியானது கிட்டாது!!!துன்பங்கள் ஒருவனை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல!!அவை,ஒருவனின் கடமையை நிறைவேற்றும் பொருட்டு வைக்கப்படும் பரீட்சை ஆகும்.எனில்,ஒருவருக்கு ஒருவர் துன்பநிலை மாறுவதற்கான காரணம் என்ன??இது ஒரு பெரிய கேள்வி எல்லாம் இல்லை.வாழ்வினில் அதிக துன்பங்களை தாங்கும் இதயமானது,எதையும் செய்யும் வலிமையை பெறுகிறது.காரணம்,இறைவனால் அதற்கு வழங்கப்பட்ட ஆணை சீரியதாகவும்,கீர்த்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.துன்பங்களை சகிக்காத மனம் தன்னில்,நம்பிக்கை மற்றும் உறுதி இரண்டுமே இராது.அதனால்,சில சமயங்களில் அம்மனங்களுக்கு இறைவன் எந்த ஒரு புகழையும் வழங்க போவதில்லை.அதனால்,அவை மதிக்கவும் பட போவதில்லை.

காலை நேர கதிரவன் இதமான கிரணங்களை குளிருக்கு அடக்கமாய் அவள் மீது தெளித்தான்.அவள் அசையவில்லை.சில்லென்ற தென்றல் காற்று அவள் கேசத்தை கலைத்து சென்றது.அவள் நகரவில்லை.இயற்கையின் எந்த உந்துதலையும் அவள் பொருட்படுத்தவில்லை.சிறிது நேரம் கடக்க,அவள் மனம் உரைத்தது,"இது போதும்!"என்று!!மெல்ல தன் இமைகளை பிரித்தாள்.

மனதின் சங்கல்பங்கள் யாவும்,தீர்ந்து போய்,மனம் வெற்று தாளானது.

இனி அதில் எழுதுவற்கு தடை ஒன்றும் இருக்காது.

புதுவித பயணம் இன்னும்,சில காலங்களில்,மிக விரைவாக அவளை நோக்கி!!!!

அந்த அதி நவீன தானியங்கி உடற்பயிற்சி இயந்திரத்தில் நின்றப்படி ஓடிக் கொண்டிருந்தான் ஜோசப்!!அவனது உடலெல்லாம் வியர்வை!!அவனோ,அதை பொருட்படுத்தவில்லை.அவனது செவிகளில் ஹெட்செட் மூலம் பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

அவன் இதழ்கள் சிறிதும் மலரவில்லை.எதற்காக இவன் எப்போதும் உர்ரென்று இருக்கிறான்??இருக்கலாம்..அவன் வாழ்விலும் நிர்பயாவை போல ஏதும் கசப்பான சம்பவம் நிகழ்ந்திருக்கலாம்..

வெகு நேரமாக உடற்பயிற்சி செய்த களைப்பு மேலோங்க,இயந்திரத்தை நிறுத்தினான்.காதில் இருந்து ஹெட்செட்டை கழற்றியப்படி வந்து அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தான்.

நன்றாக மூச்சிரைத்தது அவனுக்கு!!

கண்களை மூடினான்.ஏதேதோ நினைவுகள்!!

அவனது இடக்கரம் தன்னால் அவனது கழுத்தை அடைந்து அதில் தொங்கிக் கொண்டிருந்த அதைப் பிடித்தது!!அது..ருத்ராட்சம்!!

இது என்ன??அவன் மதசார்பற்றவனாக இருந்தாலும்??இது எவ்வாறு சாத்தியம்??புரியவில்லை அல்லவா??புரிய வைக்கிறேன்!!!சற்று பொறுத்திருங்கள்...

"அண்ணா!"-அநுஜனின் குரல் கேட்டதும் கண்களை திறந்தான் அவன்.

"காலேஜ்க்கு கிளம்புறேன்ணா!"

"ஜாக்கிரதையா போயிட்டு வா!"-எட்வர்ட் நகர,

"எட்?"என்று ஜோசப்பின் குரல் அவனை தடுத்தது.

"என்னண்ணா?"

"டைம் இருக்கா?ஒரு பத்து நிமிஷம் ஒதுக்க முடியுமா?"

"சொல்லுங்கண்ணா!"

"இப்படி உட்காரு!"-தனது எதிர் இருக்கையை காண்பித்தான்.

"காலேஜ்ல இருந்து நியூஸ் வந்தது!என்ன பிரச்சனை?"

"................"

"யார் அந்தப் பொண்ணு?"

"................."

"சொல்லு!"

"என் கூட படிக்கிற பொண்ணு தான்!பெயர் அதீதி!அவளை ஒரு பையன் லவ் பண்ண சொல்லி.டார்சர் பண்ணான்.அவ எல்லார் கூடவும் ஜோவியலா பேசுவா!ஆனா,அவ என் கூட பேசுறது அவனுக்கு பிடிக்கலை!எங்க இரண்டுப் பேரையும் சம்பந்தப்படுத்தி,போர்டுல தப்பு தப்பா எழுதி வைத்துட்டான்!அதான் கோபம் வந்து நான்!"

"அடிச்சிட்டியா?"

"................."

"என்கிட்ட ஏன் சொல்லலை?"

"..............."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.