(Reading time: 8 - 16 minutes)

07. என் காதல் பொன்னூஞ்சல் நீ - ப்ரியா

En kathal ponnunjal nee

கையில் வைத்திருந்த மொபைலை மீண்டும் பார்த்தாள் அனன்யா.

"வேதாந்தா அவர் பேரு?"

"ம்ம்ம்ம்"

"அவரை உனக்கு எப்படி தெரியும்? அவர் ஏன் உனக்கு மொபைல் வாங்கி தரணும்? என்னடீ நடக்குது?"

"அவர் என் ஆபீஸ்ல தான் வேலை செய்றாரு.. மத்தது உனக்கு அப்புறம் சொல்றேன் ஆதிரா ப்ளீஸ்"

"ம்ம்ம்ம்.. என்னவோ போ, நானே பரத்தை கூட்டிட்டு போய் உனக்கு ஒரு நல்ல போன் வாங்கணும்ன்னு நினைச்சேன்"

"ம்ம்ம் "

"இப்போ அவன் கிட்ட சொல்லிடலாம்.."

"ஆதி.. இதை பரத் கிட்ட சொல்ல வேண்டாம்!!"

"என்னது??!!!!"

வியப்பின் உச்சியில் இருந்தாள் ஆதிரா. இது வரையில் அனன்யா எப்போதுமே இப்படி சொன்னது இல்லை. எதற்காகவும்!! அன்று இவள் மயங்கி விழுந்த பொது அவன் உதவிய போதே சந்தேகம் வந்து கேட்டாள் தான். மற்றொரு நாள் அவள் வண்டி காணாமல் போனதையும் மீண்டும் எப்படி வந்தது என்பதையும் அவள் ஆதிராவிடம் சொல்லி இருக்கவில்லை.

விதார்த் விஷயத்தில் அவள் வருந்திக் கொண்டிருக்கும் போது இவை எல்லாம் பெரிதாக பாரத்திற்கோ ஆதிரவிற்கோ தோன்றவில்லை..

பரத்திடம் தான் சொல்ல வேண்டாமென்று மறைக்கும் சில விஷயங்களையும் அனன்யா சொல்லிவிடுவாள்!! அப்படி ஒரு பிணைப்பு அவர்களுக்குள். அப்படி இருக்கையில்??!! நம்புவது வெகு கடினமாக தான் இருந்தது ஆதிராவிற்கு..

"நிஜமா தான் சொல்றியா அனு?"

"ம்ம்ம் ஆமாம்.. நான் உனக்கு தெளிவா அப்புறம் சொல்றேன்"

"அப்போ பரத் வந்து இந்த போன் ஏதுன்னு கேட்டா?"

"நீ வாங்கிட்டு வந்தேன்னு சொல்லு"

"என்னது?!"

"ப்ளீஸ்..."

"ம்ம்ம்ம் சரி ஆனா அவன் என்னை திட்டுவானே?"

"ப்ளீஸ் டி"

"ம்ம்ம் சரி உள்ள வா போலாம்"

"இல்லை நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் நீ போயேன்.."

"அனு.. உள்ள வா" அவள் குரலில் பிடிவாதம்.

"ப்ளீஸ் ஆதி மனசு என்னவோ போல இருக்கு இந்த பூவெல்லாம் பார்த்துட்டு இங்க நின்னா நல்லா இருக்குமான்னு தோணுது"  அவள் குரலில் இறைஞ்சுதல். அதற்கு மேல் ஆதிராவால் அங்கு நிற்க இயலவில்லை. அவளையே அவள் வருத்தி கொண்டும் குழப்பிக் கொண்டும் இருப்பது புரிந்தது.

உள்ளே போனவள் மீண்டும்  எட்டி பார்த்து,

"ஒரு காபி?"

"ம்ம்ம்ம்ம்"

"ஓகே 10 மினிட்ஸ்"

"ம்ம்ம்ம்"

ஆதிரா உள்ளே போனதும் மீண்டும் அந்த போனை பார்த்தாள். அவள் கைகள் அவளையும் அறியாமல் ஆசையாய் அந்த அலைபேசியை தடவியது. அவள் அதை வாங்க விருப்பம் கொண்டு அதை மாற்றி கொண்ட நாட்கள் கண்முன் நிழலாடின.

"லோ?!"

"ஹலோ.."

"தேவ், ஈவினிங் ஆபீஸ் முடிஞ்சு வர்றீங்களா?"

"ஆபீஸ்ல வேலை இருக்கு நயா, நேத்து தானே மீட் பண்ணினோம்?"

"அது இல்ல"

"சீக்கிரம் சொல்லுடா.. பிரேக் டைம் முடிஞ்சுது"

"நேத்தே சொன்னேன்ல போன் வாங்க போகணும்னு.. நீங்களும் வரேன்னு சொன்னீங்க.. ஆனா இன்னைக்கு காலைல இருந்து எதுமே பேசல நீங்க.. அதான்"

"ஓ ஆமாம்ல மறந்துட்டேன்.. ஓகே வரேன்.. ஆறு மணிக்கு.. நீ நேரா மொபைல் ஷோரூமுக்கு வா"

"ம்ம்ம் சரி வெச்சுடறேன்"

"ஹ்ம்ம் சரி டா"

போனை அணைத்து விட்டு அவசரமாய் அலுவல்களை முடித்து விட்டு பரத்திடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள். முதன்முறையாக அவள் சம்பளத்தில் அவளுக்கென்று வாங்க போகும் ஒரு பொருள். எல்லாரிடமும் கேட்டு அவளுக்கும் பிடித்ததை தேர்வு செய்து இன்று வாங்கவும் போகிறாள். ஏதோ ஒரு சந்தோஷம்.. அதுவும் இல்லாமல் விதாரத்துடன் வெளியே செல்கிறாள்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.