(Reading time: 5 - 9 minutes)

03. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

ழை ..!

கொதிக்கும் மனதை குளிர்விக்கவும்

குளிர்ந்த மனதை சிலிர்க்க வைக்கவும்

சிலிர்த்த மனதினை மகிழ்விக்கவும்

இயற்கை பாடிடும் தாலாட்டு மழை!

தன் விழிகளை மூடியது யாரென்று தெரிந்து கொள்ளும் முன்னரே மழைத்துளியின் ஸ்பரிசத்தில் தன்னை தொலைத்து புன்னகைத்தாள் அர்ப்பணா. அவளின் வதனம் புன்னகையில் மலர்வதை உணர்ந்து கண்ணாமூச்சி ஆட வந்த அந்த ஜீவனுக்கு செல்ல கோபம் வந்துவிட்டது.

“ச்ச லூசு..நீ பயப்படுவன்னு நினைச்சேன்.. நீ என்னடான்னா சிரிக்கிறியே” என்று குறை கூறும் தொனியில் பேசினாள் நிரூபணா. ஆம், அந்த இரவில், அர்ப்பணா வீட்டில் இருந்த பாதுகாப்புகளைத் தாண்டி, அவளின் வீட்டின் சுவற்றையும் தாண்டி அங்கு வந்திருந்தாள் நிரூபணா.

“பயம்மா? எனக்கா? ஹா ஹா” என்று பெரிய ஜோக்கை கேட்டவள் போல சிரித்த அர்ப்பணா நிரூபணாவின் கண்களுக்கு புதிதாகத்தான் தெரிந்தாள். இயற்கையாவே அர்ப்பணா அழகானவள் தான். இப்போதோ, அவளின் தன்னம்பிக்கை அவளை இன்னமும் பேரழகாய் காட்டியது.

“என்ன மேடம் என்னை சைட் அடிக்கிறியா?” என்றாள் அர்ப்பணா.

“ நீ திடீர்னு இவ்வளவு அழகாய் ஆகிட்டியா? இல்ல என் கண்ணுல ஏதாச்சும் ஃபோட்டோஷாப் மேஜிக் இருக்கா?”

“ இவ்வளோ கியுட்டா ஏன்மா பேசுற ? நீ பையனாக இருந்திருந்தால் உன்னை கல்யாணம் பண்ணிருக்கலாம்.. இப்படி பொண்ணா பொறந்துட்டு ஏன் டீ?” என்ற அர்ப்பணா மீண்டும் நிரூவை அதிசயிக்க வைத்தாள்.

“ நீ சத்தியமா பழைய அர்ப்பணாவே இல்லை டீ.. எவ்வளோ மாறிட்ட நீ?”

“ ஹ்ம்ம் நானும் அதேதான் யோசிக்கிறேன்.. மூனு வருஷத்துல நான் தான் ரொம்ப மாறிட்டேன் போல..நீ இன்னும் அதே குண்டு பூசனிக்காய்த்தான்” என்றாள் அர்ப்பணா.

“ ஹேய், என்னை கலாய்க்கிறதை கூட தாங்கிக்குவேன்.. ஆனா இப்படி மழையில நனைய வெச்சு வேடிக்கை பார்க்குற பார்த்தியா? அதைத்தான் தாங்க முடியல அபி”

“ அதெல்லாம் நீ ஒன்னும் கரைஞ்சிட மாட்ட.. இருந்தாலும் பரவாயில்ல.. வா உள்ள போகலாம்” என்றபடி அர்ப்பணா முன்னே நடக்க, சில நொடிகள் அவளைப் பார்த்தபடி நின்றவள் அதன்பின் பின்னே தொடர்ந்தாள்.

“சரி நீ பேரிஸ்ல இருந்து நேத்தே வந்துட்டியே ? ஏன் என்னை உடனே பார்க்க வரல ?”

“ ஹேய் நான் நேத்தே வந்துட்டேன்னு எப்படித் தெரியும்?”

“ நீதான் தூங்கும்போது குறட்டை விட்டால் கூட பேஸ்புக்ல போடுவியே”

“ கேடி, சைலண்டா எங்களை வாட்ச் பண்ணுறியா நீ?”

“ நான் பார்க்காமல் வேற யாரு பார்ப்பாங்க ? அதுவும் இல்லாமல் நடிப்பு முடிஞ்சு வீட்டுல கொஞ்சம் வெட்டியாதானே இருக்கேன்.. அப்போ எல்லாம் என் சீக்ரட் ஐடி வெச்சு உங்களை கவனிப்பேன்”. அவளின் கைகளை ஒரு கையால் பிடித்துகொண்டு மறு கையால் அவளின் கன்னத்தை வருடினாள் நிரூபணா.

“ ஆண்ட்டி அங்கிள்,இப்படி ஒரே நேரத்துல உன்னை தனியா விட்டுட்டு போவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை அபி. அவங்களை கடைசியா ஒரு தடவை பார்க்கனும்னு நினைச்சேன்.. ஆனால், லீவ் தரவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. நீ எவ்வளவு கஷ்டப்பட்டுருப்ப? அதுவும் அந்த வினய் ஒரு பக்கம் ..”

“ ஹேய் போதும் போதும்.. பேரிஸ்லயும் சன் டீவி சீரியல்ஸ் போறாங்களா என்ன ? ஏன் இவ்வளோ செண்டிமண்ட் ? எது நடந்ததோ அது நடந்து முடிஞ்ச கதை. ஒரு வகையில் என் மாற்றத்திற்காகவும் இதெல்லாம் நடந்து இருக்கலாம்ல ?” இதழ் விரிய சிரித்தபடி சொன்னாள் அர்ப்பணா..மறுத்துவிட்டதுஅவளின் மனம். வாய்விட்டு கதறி அழ வேண்டும், பிறரின் நிழலில் அன்பினை தேடிட வேண்டும் என்ற எண்ணங்களை அவள் கடந்திருந்தாள்.

இது அவளின் வாழ்க்கை ! அவளின் சாம்ப்ராஞ்சியம்.. இப்போது அவளை அதட்டவோ, வற்புறுத்தவோ அங்கு யாருமே இல்லை. தனக்கு பிடித்ததை மட்டுமே அவள் விரும்பி செய்தாள். அப்படியே மனம் வாடிப்போனால், அவளின் புலம்பலை கேட்கத்தான் வேலவன் இருக்கிறானே..

“ நீ சந்தோஷமா இருக்கியா அர்ப்பணா?”

“ என்னடி மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிவைச்ச பிறகு அம்மா கேட்குற மாதிரி சொல்லுறியே”

“ ஹா ஹா … ஆமா இந்த வேலையை பார்க்கவே மாட்டேன்னு மூக்கு உரிஞ்சினவ,..தானே நீ?”

“அதென்னவோ உண்மைதான் நிரூ.. பட் இப்போ அப்படி இல்லைடா. எனக்கு சினிமா, நடிப்பு, சில நேரம் கிசு கிசு எல்லாமே புடிச்சிருக்கு”

“பொய் சொல்லுறன்னு தெரியுது அபி”

“எல்லாமே நம்ம பார்வையில் தான் இருக்கு நிரூ.. நம்மல சுத்தி ஆயிரம் நெகட்டிவிட்டி இருக்கலாம். எப்பவும் அதை எப்படி பாசிடிவா மாத்தனும்னு பார்க்கனும்.. மாத்த திறன் இல்லதவன் தான் எதுக்கெடுத்தாலும் குறை சொல்லுவான்.. நான் அப்படி எல்லாம் இல்லம்மா”

“அய்யோ…!”

“என்னாச்சு நிரூ ?”

“ உன் அட்வைஸ் தாங்கல.. பசிக்கிது.. மொக்கை போடுறத விட்டுட்டு எதாச்சும் சாப்பிட போடு” என்று பாவமாய் கேட்டாள் நிரூபணா .. அவளது பவ்யமான நடிப்பில் வாய்விட்டு சிரித்தாள் அர்ப்பணா..நீண்ட நாட்களுக்கு பிறகு அவள் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்கிறது. அதுவும் அவளின் உற்ற தோழியினால்! நிரூபணா எப்போதுமே அர்ப்பணாவுக்கு சாதகமாய் பேசுவது இல்லை. பிறர் கண்களுக்கு அவள் அபியின் மீது பொறாமை கொண்டுள்ளது போலத் தான். ஆனால் அபியால் அவளை புரிந்து கொள்ள முடிந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து சந்தித்த தோழிகளுக்கு பேசிக்கொள்ள ஆயிரம் கதைகள் இருந்தன. அவ்வப்போது பலத்த மௌன குடிகொண்ட தருணங்களும் வந்து போயின. நீண்ட நாட்களுக்குப் பின் தோழியை சந்தித்த மகிழ்ச்சியில் நிரூ உறங்குவதற்கு முன்பதாகவே உறங்கி போயிருந்தாள் அர்ப்பணா.

ஆனால் நிரூபணாவினால்தான் உறங்கவே இயலவில்லை. மூன்று வருடங்களின் அர்ப்பணாவின் வாழ்வில் வீசிய புயல் கண்முன் தோன்றிச் சென்றது.

ஹாய் ப்ரண்ட்ஸ்.. உடல்நிலை சரியா இல்லை.. COMPROMISE பண்ணி எழுத முடியல. மன்னிச்சிருங்க. அடுத்த அப்டேட் சரியாக கொடுக்குறேன். நன்றி.

-வீணை இசைந்திடும்-

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.