(Reading time: 32 - 63 minutes)

20. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

Puthir podum nenjam

 

அன்பான தோழமைகளே... தாமதத்திற்கு வருந்துகிறேன்! மனதில் இருந்த கற்பனையை கொஞ்சம் உண்மை போல காட்ட சில பப்  R & Dகளை செய்து செதுக்க காலம் தாழ்த்தி  விட்டேன்! என்னுடைய முதல் கதை பேய் மாதிரி  இருக்காவில்  இருபதாவது  அத்தியாயம் எனக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமான  அத்தியாயம். இதுவும் அது போல தான்.. ஒரு பகுதி தான் இருபதாவதில்  கொண்டு  வர முடிந்தது..

புதிர் 20 

நீ! மழை!!!!

டிசம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை

ன்று தினேஷ் அக்காவின் திருமணம்! அன்பு இல்லத்தின் சிவநேசன் - கமலா தம்பதியரை திருமணத்தை  முன்னின்று நடத்த அழைத்திருந்தனர் தினேஷ் வீட்டினர்!

அது கலப்பு திருமணம் - மாப்பிள்ளை தமிழ்காரர் என்பதால், நமது ஊர் சம்பிரதாயங்கள் தெரியாமல் திணறிய தினேஷ்ஷின் குடும்பத்திற்கு உதவியாக கமலா சீக்கிரமே மண்டபத்திற்கு சென்று விட...

சிவநேசனை அழைத்து வரும் பொறுப்பை ஆர்யமன் எடுத்துக் கொண்டான். ஆம், நித்யா இறந்த செய்தி அவரை வாதத்தில் முடக்கி வீல் சேரில் தான் எஞ்சிய வாழ்க்கையை கழித்துக் கொள்ளும் நிலை வர - அவரை பராமரிக்க ஒரு ஆள் உடனிருக்க வேண்டியிருந்தது!

அவருக்காகவே தன் பதினெட்டாவது வயதில் உலகின் முதல்  Brain Controlled Wheel Chairஐ  உருவாக்கி கொடுத்திருந்தான் ஆர்யமன் - வீல் சேரை இயக்க அவர் விரலைக் கூட அசைக்க தேவையில்லை! வெறும் மூளையின் நுண்ணிய அலைகளை கொண்டு இயங்கும் Brain Controlled Wheel Chair அது*

அந்த வீல் சேரில் அமர்ந்த  படி வந்த சிவநேசனுடன் ஆர்யமன் மண்டப வாசலை நெருங்கிய பொழுது மேக மூட்டத்துடன் கூடிய வானம் மழை சாரலை இறைக்க ஆரம்பிக்க..

இருவரும் தங்கள் வேகத்தைக் கூட்ட... அதை செய்யவிடாமல் அங்கிருந்த சேற்றில் சிக்கி நகர மறுத்தது அந்த வீல் சேர்! இயற்கை முன் சில சமயம் எப்பேர்பட்ட டெக்னாலஜியும் செயலிழந்து விடுமே!

இதனையடுத்து இவர்களின் வேகம் தடைபட, மழை வேகமோ அதிகரிக்க.... நொடி கூட தாமதிக்காது சிவநேசனை  குழந்தையைப் போல கைகளில் அள்ளிக் கொண்டு நிமிரும் பொழுது அவனை சூழ்ந்த அந்த நெடி - அந்த ஆனந்த சுகந்தம் அவனை ஸ்தம்பிக்க வைக்க... அவனுக்கு முன்னரே..

தங்கள் இருவரையும் தன் குடைக்குள்ளே கொண்டு வந்த அந்த மங்கையை ஏறிட்டார் சிவநேசன்!

பூச்சூடிய கூந்தல் இல்லை.. ஏன் நெற்றியில் ஒரு பொட்டு கூட இல்லை... குறைந்த பட்ச அலங்காரம் கூட இன்றி... 

போட்டிருந்த இள நீல காலர் நெக் டிசைனர் குர்தாவின் பேட்டர்னில் க்வில் வொர்க் செய்த காகித கம்மலை மட்டும் அணிந்து கொண்டு திருமண வீட்டிற்கு வரும் ஒரு பெண் அழகாக தெரிவாளா?

ஆம், என்றது அந்த முகத்தில் தழுவிய இருபத்தி நாலு காரட் புன்னகை -  அவளின் முகம் மொத்தமும் பூரித்தது - ஆர்யமனைக் கண்டதும்!!!!

தங்களுக்காக குடையை சற்று சரித்து  பிடித்ததில்... சொட்டு சொட்டாய் வழிந்தோடும் நீர் இவள் தோள் பட்டையில் பட்டு நனைப்பதை கூட பொருட்படுத்தாது சிரித்த முகத்துடன் நிற்பவளைக் காண....

‘நல்ல குணமான பொண்ணா இருக்கிறாளே... இவனுக்கு தெரிந்த பொண்ணோ!’, என்று அவன் முகத்தை ஏறிட..

அவன் முகமோ பிரகாசமடைந்து... பின் அது வந்த தடமே தெரியாமல் இறுக்கமாகி போனது - அங்கு வந்து நின்றது அஞ்சனாவாயிற்றே! அவன் சிரிக்கக் கூட இல்லை! மாறாக,

“ஹர்ஷ் கூட எந்த பிரச்சனையும் செய்திடக் கூடாதுன்னு நினைக்கிறேன்”, என்று அவள் நீட்டிய குடையின் கீழ் இருந்தாலும், எங்கேயே பார்த்து சொன்ன படி வேக நடையிட...

‘பேசாதே!’, என்ற மறைமுக எச்சரிக்கையில் சட்டென்று அவள் முகம் செத்துப் போனது! அப்படி இருந்ததும்... பேச மாட்டானா என்று முகத்தை முகத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே...

குடையை பிடித்த படி  அவன் வேகத்திற்கு ஓட்டமும் நடையுமாக வந்தவளைக் கண்டதும் சிவநேசனின் மனம் வெகுவாக இளகிப் போனது!

இருந்தாலும், காரணமின்றி என் மகன் யாரையும் வருந்த வைக்க மாட்டான் என்று உறுதியாக நம்பியது அவர் மனம்!  இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கம்!

‘எத்தனை பேரை வளர்த்திருந்தாலும் என் கைக்குள் முதலில் வந்த இவன் என் தலை மகன்!’, என்ற பெருமிதம் வந்த பொழுதே, ‘இப்போ, அவன் கைக்குள் நான்....’, என்ற எண்ணம் வர மனது கலங்கியது!


* Inspired from Diwakar Vaish, Indian Roboticist to invent the world first brain controlled wheelchair

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.