(Reading time: 6 - 11 minutes)

18. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

டுத்து என்ன செய்வது என்ற பலத்த யோசனையில் அர்னவ் இருந்த போது அவனது செல்போன் ஒலி எழுப்பியது…

திரையில் மின்னிய ஜானவியின் பெயரைப் பார்த்ததும் சற்று நேரம் யோசித்துவிட்டு பின் எடுத்தான்…

“கார்த்தி… அக்காகிட்ட பேசினீங்களா?...”

“…………….”

“நேத்துல இருந்து போன் ட்ரை பண்ணுறேன்… எடுக்கவே இல்லை அக்கா… நைட்ல இருந்து சுவிட்ச் ஆஃப்ன்னு வேற வருது… அக்காக்கு உடம்பு எதுவும் சரியில்லையா?... நீங்க எதுவும் பேசினீங்களா?...”

அவள் மாற்றி மாற்றி கேட்க அவனும் உண்மையை சொன்னான்…

“சிஸ் இங்கதான் இருக்குறாங்க…”

“என்ன???.............”

அவனது பதிலில் சற்றே அதிர்ச்சியானாள் ஜானவி…

“கார்த்தி… எதுவும் பிரச்சினையா?...”

அவள் நேரடியாகவே கேட்டுவிட, அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை… பின், சற்று முன்னர் அவள் வந்த விவரத்தை அவன் சொல்ல அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது..

இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறார்கள் என்றால், நள்ளிரவு அல்லவா பஸ் ஏறியிருக்க வேண்டும்?... என்ன நடந்தது?... மாமாக்கும் அக்காக்கும் பிரச்சினையா?..

பலவாறு சிந்தித்தவள் கடைசியில் கார்த்தியிடம் விசாரித்தாள்…

“அக்கா என்ன செய்யுறாங்க கார்த்தி?..”

“வந்ததுல இருந்து அழுகை தான்…”

“சரி நீங்க அக்காகிட்ட போனை குடுங்க… நான் பேசுறேன்…”

அவள் சொன்னதும் விதண்டாவாதம் பண்ணாமல், ஏன் எதற்கு என்ற கேள்வியும் கேட்காமல் சரயூவிடம் சென்றான்…

“சிஸ்… ஜானவி லைனில் இருக்குறா?...”

தம்பியின் குரல் கேட்டு எழுந்தவள், அவனையும் போனையும் மாறி மாறிப் பார்த்தாள்…

பின் கண்ணீருடனே போனை வாங்கியவள், பேசும் முன்னே,

“அக்கா… எப்படி இருக்குறீங்க?...” என கேட்டாள் ஜானவி…

“இன்னும் உயிரோட தான் இருக்குறேன் ஜானு…”

“ஏன்க்கா இப்படி பேசுறீங்க?... உடம்பு எதுவும் சரி இல்லையா?...”

“உடம்பு மனசு ரெண்டுமே செத்துப்போச்சு ஜானு…” என்றவளுக்கு தன்னை மீறி தொண்டை அடைக்க,

“என்னாச்சுக்கா?....”

மெல்ல ஜானவி கேட்டதும், அர்னவை மெல்ல திரும்பி பார்த்தாள் சரயூ…

“அக்கா… சொன்னா தான தெரியும்?... ப்ளீஸ்… சொல்லுங்க அக்கா….”

ஜானவியின் கெஞ்சலா?... இல்லை அவள் குரலா ஏதோ ஒன்று சரயூவை வாய் திறக்க வைத்தது…

நடந்ததை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்த சரயூவிற்கு அழுகை மட்டும் நின்றபாடில்லை…

கேட்ட அர்னவிற்கு கோபம் எல்லையில்லாமல் பெருக, அவன் சரயூவின் அறையை விட்டு வெளியேறினான் வேகமாக…

“இனி நான் என்ன செய்ய ஜானு?... எனக்கு எதுவுமே புரியலை…”

சரயூவின் அழுகை குரல் ஜானவியையும் அழ வைத்திட,

“ப்ளீஸ்க்கா… அழாதீங்க… அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்… மனசை போட்டு ரொம்ப வருத்தாதீங்க… சொன்னாக்கேளுங்க…”

“எப்படி ஜானு வருத்தாம இருக்க முடியும்?... அடுத்து இனியும் என்ன இருக்கு?... என் வாழ்க்கையே போச்சே….”

“அக்கா அப்படி எல்லாம் பேசாதீங்கக்கா… நீங்க இப்படி அழுதுட்டே இருந்தா அப்புறம் உங்க தலைவலி பிரச்சினை இன்னமும் ஜாஸ்தி ஆகிடும்… அப்புறம் ரொம்ப வலிக்கும்க்கா… ப்ளீஸ்… அழாதீங்க…”

“செத்தா கூட ஒரேடியா போய் சேர்ந்துடுவேன் போல… இப்படி நொடிக்கு நொடி சித்திரவதையா இருக்கு….”

“அக்கா ப்ளீஸ்… முதல்ல அழறதை நிறுத்திட்டு, போய் கொஞ்ச நேரம் தூங்குங்க… இப்போதைக்கு எதையும் யோசிக்காதீங்க… அதான் உங்க ஹெல்த்துக்கு நல்லது… ப்ளீஸ்க்கா… எனக்காக செய்யுங்க…”

“ம்ம்… சரி ஜானு... அழலை…” என்றவள் கண்களை அழுந்த துடைத்தாள்…

“கார்த்திகிட்ட போனை கொடுங்கக்கா….” என ஜானு சொன்னதும், ஹாலில் கோபமாய் அமர்ந்திருந்த அர்னவிடம் சென்று போனை கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் தனதறைக்குச் சென்று கட்டிலில் விழுந்தாள் சரயூ…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.