(Reading time: 9 - 17 minutes)

11. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ருண் ... சுபாவையும், மகியையும் வாங்கு வாங்கு என வாங்கி கொண்டிருந்தான்.. காரணம்.. ஜங்ஷன் அருகில் எல்லோரும் ஷாப்பிங் சென்ற போது .. சுபத்ரா கடையில் பேரம் பேசுகிறேன் என்ற பேரில்... மொக்கை போட்டு கொண்டிருந்தாள்..

“ஹேய்.. சுறா... என்ன இது .. ? போற இடத்துலே எல்லாம் கலாட்டா பண்ணிட்டு இருக்க.. ? இங்கே எதாவது பிரச்சினை வந்தா.. நம்ம NCC மாஸ்டர் கிட்டதான் போய் நிக்கணும்.. ஏற்கனவே அவர் நம்ம மேலே செம காண்டுலே இருக்கார்.. கவனமா இருக்க வேண்டாமா?”

“டேய்.. அவர் சிங்கம் சூர்யா மாதிரி விறைசுக்கிட்டு forward மார்ச் சொல்லும் போது எல்லாம் எனக்கு பயங்கார காமெடியா இருக்குதுடா... அதான் அந்த சிங்கத்த கொஞ்சம் சொரிஞ்சு விட்டா... ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் ன்னு டயலாக் சொல்லுவார்னு பார்த்தேன்..” என்று சுபாவும் மகியும் hifi கொடுத்துக் கொண்டனர்.

“ஹேய்.. பக்கிகளா.. அவர் சிங்கம் சூர்யாவ இருக்கறவரை நமக்கு பிரச்சினை இல்லை.. ஏதோ ரெண்டு திட்டு தான்.. காக்க காக்க அன்புச்செல்வன் ஆயிட்டர்னு வை .. நமக்கு encounter தாண்டி.. “

“போடா.. அந்த ஆண்டவனே அதான் .. பிரின்சிபால்  நம்ம பக்கம் இருக்கார்.. “ என்று மூன்று பேரும் சினிமா டயலாக் எல்லாம் அள்ளி விட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த அர்ஜுனின் தாத்தா ..”என்ன பசங்களா.. ? வெளியூரா?” என்று வினவ,

வருண் சற்று சுதாரித்து .. “ஏன் கேட்கறீங்க?” என்று கேட்டான்.

“உங்கள பேச்சு கேட்டால் இந்த பக்கம் படிக்கிற பசங்க மாதிரி தெரியலேயே?”

“நாங்க எங்க படிச்சா உங்களுக்கென்ன..?”

“எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைப்பா... நானும் அப்போலேர்ந்து பார்க்றேன்.. இந்த தெரு முதல்லேர்ந்து.. கடைசி வரைக்கும் இதோட மூணு வாட்டி நடந்துடீங்க... ஆனால் ஒன்னும் வாங்கற மாதிரி தெரியலேயே.. போதாதா குறைக்கு கடைக்காரங்க கிட்ட பேரம் பேசற மாதிரி எங்க ஊர பத்தி கிண்டல் அடிக்கிற மாதிரி தெரியுது.. ?”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லியே.. நாங்க சாதரணமாதான் பேசிட்டு இருக்கோம்..” என்றபடி கிளம்பினான் வருண்.. அவனை பெண்கள் இருவரும் தொடர, மேலும் அவர்களிடம் பேச்சு கொடுத்தபடி நடந்தார்.

ட்ரைன்க்கு நேரமாவதால் மூவரும் ஸ்டேஷன் நோக்கி நடக்க, அர்ஜுன் தாத்தாவும் அவர்களோடு நடந்தார்.

வருண் “ஏன் தாத்தா.. ? எங்களை பின் தொடர்ந்து வரீங்க?” என்றான்..

“அட.. என் பேரனும் ஊருக்கு போறான்.. அதான் அவன வழி அனுப்ப வந்தேன்.. “ என்றார்.

வருண் மனதில் ஏனோ அவர் தங்களை பின் தொடர்கிறார் என்று தோன்றியது.. அதனால் பெண்கள் இருவருக்கும் கண்ணை காமித்து விட்டு ரெஸ்ட் ரூம் பக்கம் செல்ல, புரிந்து கொண்ட சுபா , மகி இருவரும் பெண்கள் ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றனர்.

தாத்தாவும் கொஞ்ச நேரம் வெயிட் செய்து பார்த்தார்... அவர்கள் வரும் வழியாக தெரியவில்லை. அதனால் அவர் வாசல் தெரியுமாறு அமர்ந்து கொண்டார்.. ஆனால் இவர்களோ வேறு வழியாக platform சென்று விட்டனர்..

சற்று நேரம் தாமதித்த அர்ஜுன் தாத்தா.. பிறகு தன் பேரனிடம் சென்று விட்டார்.. அங்கே அர்ஜுன் தன் தாத்தாவிடம் “என்ன ஓல்ட் man உங்க யோசனை வெற்றியா?” என்று கேட்டான்.

சற்று நேரத்திற்கு முன் அர்ஜுன் , மிதுன் இருவரின் மனசில் உள்ள எண்ணங்களை கேட்ட தாத்தா

“ஏன்பா.. அர்ஜுன் நீ என்ன அந்த பொண்ணுதான் உனக்கு வேணும்னு முடிவு பண்ணிட்டியா..?”

“ஆமாம்.. தாத்தா.. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சு இருக்கு “

“அந்த பொண்ணு பத்தின விவரம் எல்லாம் தெரியுமா..?’

“இல்லை தாத்தா.. இங்கே எங்க கூட கேம்ப்க்கு வந்தவர்கள்.. அது மட்டும் தான் தெரியும்”

 “சரி பேராண்டி.. நான் போய் அவங்ககிட்ட பேசற விதத்தில் பேசி .. அவங்க பத்தின விவரங்கள் வாங்கி வரேன்.. நீங்க ஊர்க்கு போய் அத வச்சு மேலே proceed பண்ணுங்க.. “ என்றார்..

அர்ஜுன் அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றாலும் யோசித்து சரி என்று சொன்னான்.. அவர் சென்றவுடன் “டேய்.. நல்ல தாத்தா.. டா.. பேரன் சைட் அடிக்க அட்ரஸ் விசாரிச்சுட்டு வரேன்னு போயிருக்கார்.. “ என,

“டேய்.. சும்மா இருடா.. நீ வேற.. அவர் எதாவது சொதப்பாம இருக்கணுமேன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.. “ என்றான்..

அதே போல் அவர் திரும்பி வந்தவுடன் கேட்க, அவரோ ..

“அட போடா.. எல்லார்கிட்டயும் பேசியே கவுத்துற என்னையே அந்த பசங்க கவுத்துடுங்கச்சிடா.. அந்த பையன் எமகாதகன்.. பார்க்கதான் சாதுவா இருக்கான்.. ஆனால் சுத்திலும் ஒரு நோட்டம் விட்டுட்டு இருக்கான்... எங்கிட்ட அவங்களை பேசவே விடலியே.. கொஞ்சம் கஷ்டம்தான் .”

“தாத்தா.. என்ன நீயே இப்படி சொல்ற?’

“ஆமாம்டா.. அந்த பசங்கள பார்த்தா சின்ன பசங்களாட்டம் இருக்கு.. ஆனால் நடவடிக்கை எல்லாம் ரொம்ப தெளிவா இருக்கு.. “

“ஆமாம்.. தாத்தா.. அவங்க பிளஸ் ஒன் தான் படிக்கிறாங்க.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.