(Reading time: 12 - 23 minutes)

08. உயிர் ஆதாரமே..!! - ப்ரியா

Uyirin aatharame

வளுக்கு நேரெதிரில் ஒரு தூணின் அருகே அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் இவள் கண்பார்வை வட்டத்திற்குள் விழவே இல்லை!! எப்போதும் தூக்கி கொண்டையிட்டிருக்கும் முடியை தளர பின்னி ஒரு கூடை பூவை மொத்தமாய் அவள் தலையில் சூட்டியிருந்தார் கோமதி.!! அதன் பளுவில் தலை வழிப்பாதை போன்றிருந்தது!! காதுகளில் வேற சற்று குனிந்து அமர்ந்தால் கன்னத்தை ஒட்டி உரசி ஆடும் இரண்டு பெரிய ஜிமிக்கிகள்..!! பத்தாதற்கு நெக்லஸ் ஆறாம் வேறு..

கசகசவென இருந்த அனைத்தையும் எப்போது  கழட்டி வீசலாம் என்ற எண்ணத்திலேயே அவள் மணப்பெண்ணுக்கு நடக்கும் சடங்குகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மணப்பெண்ணுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்த சாரதா அவ்வப்போது இவளை திரும்பி திரும்பி பார்க்க, அதை கவனிக்காமல் தலைக்கு கைகொடுத்து அமர்ந்திருந்தாள் நித்திலா.

அருகில் இருந்த நேத்ராவை அனுப்பி வைத்தார் நித்திலாவை அழைத்துக் கொண்டு வருமாறு. நேத்ரா வந்து அழைக்க வேண்டா வெறுப்பாக எழுந்து சென்றாள். அந்த பெரிய வீட்டின் முற்றத்தில் நடுவில் இரு அலங்கரித்த நாற்காலிகள் போடப்பட்டிருக்க, கீழே ஜமுக்காளம் விரிக்க பட்டு சீர் வரிசை தட்டுகள் நிறைய வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.

ஒரு நாற்காலியில் பெண்ணை அமரவைத்து சடங்குகள் நடந்து கொண்டிருந்தன, அது முடியாததும் நிச்சயதார்த்தம். சுற்றிலும் இருந்த தூண்களில் சம்பங்கி செவ்வந்தி மலர்கள் மற்றும் சிறு வண்ண பல்புகளால் அலங்கரிக்க பட்டிருக்க, அதன் நடுவே அவளை அந்த நீல நிற புடவையில் அவள் எழுந்து நடந்து வருவதை காண அவனுக்கு சிறிதும் அலுக்கவில்லை!!

ஆனால் அவளோ அது எதையும் ரசிக்கும் மனநிலையில் இல்லை!! இது அவளுக்கான சூழல் அன்று!! அவள் மணபெண்ணருகே அமர்ந்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அமைதியாக இருக்கவும் சாரதா சற்று எரிச்சலானார்.

"இப்போ எதுக்குடி விஷேஷம் நடக்கற வீட்டுல இப்படி உட்காந்துருக்க? தலைல இடி விழுந்த மாதிரி?" அவள் காதோரம் அவர் கிசுகிசுக்க, மைதியை முகம் திருப்பிக் கொண்டாள் நித்திலா. சாரதாவின் பொறுமை பறந்து கொண்டிருக்க, அதை கவனித்த நேத்ரா கோமதி பாட்டியை இடித்து சைகையால் சாரதாவை காட்டினாள்.

என்ன செய்யலாம் என அவர் யோசிக்கும் முன்னரே, மணப்பெண்ணின் தயார் அங்கு வந்து நேத்ராவையும் நித்திலாவையும் அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க, நித்திலாவும் சற்று வியந்து போனாள்.

"அம்மாடி எங்க நீ வரமாட்டியோன்னு பயந்துட்டேன் டா, பாவனா குட்டி கூட உன்னை கேட்டாள், சின்ன வயசுல பார்த்ததுல நீ மறந்திருப்ப, ஆனா அவ ஞாபகம் வெச்சு சாரதா மதினி கிட்ட கண்டிப்பா நித்திலா நேத்ரா வரணும்ன்னு கேட்டுக்கிட்ட" என்று முடித்து விட்டு அவள் முகம் வலித்து த்ரிஷ்டி கழித்துவிட்டு செல்ல, அவள் மணப்பெண் பாவனாவை பார்த்தாள்.

அவளும் ஆம் என்பது போல தலையசைக்க, சற்றே இறுக்கம் தளர்ந்தது அவளிடம். 'பார்த்தியா?' என்பது போல சாரதாவும் விழிகளால் வினவ சற்றே இயல்பு நிலைக்கு வந்தாள்.

அவள் முக பாவங்கள் மாறுவதை துல்லியமாய் பார்த்தபடி தன் நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தவன் கவனித்துக் கொண்டிருந்தான்.மணமகனின் தோழன்!! நித்திலாவிடம் முதல் சந்திப்பிலேயே வம்பு வளர்த்த அவன்..!!

கூட்டத்தில் இருந்த பெண்மணிகள் மணப்பெண்ணுக்கு ஆரத்தி எடுத்துவிட்டு பாட்டுப்பாட அமைதியாய் அனைத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். மெதுவாய் அந்த சூழல் அவளுக்கு பிடித்து போனது!!

ஒரு கல்யாணத்தில் இருக்கும் அத்தனை இனிமையையும் அழகையும் அந்த வீடும் அதற்குள் இருந்து அம்மனிதர்களும் அந்த சடங்குகளும் அவளுக்கு உணர்த்தி கொண்டிருந்தன!!

நிச்சயம் நடக்க இன்னும் சில நிமிடங்கள் இருக்க, மணமகன் வந்து சேர, மணமகன் வீட்டாரும் வந்து சடங்குகள் முடித்து, பெண்ணுக்கு புடவையை கொடுத்தனர். சிறிது நேரத்தில் எல்லாம் பாவனா தயாராகி வர, இரு வீட்டாரும் தரையில் எதிர் எதிரே அமர்ந்து ஐயர் லக்னப்பத்திரிகை வாசிக்க, பின் குலதெய்வத்தை கும்பிட்டு தாம்பூலம் மாற்றி கொன்றனர்.

நடந்த சம்பிரதாயங்களை பார்த்துக் கொண்டிருந்தவள், எதிரில் மணமகனின் அருகில் இருந்தவன் தன்னையே பார்ப்பதை அறியவில்லை!!

மணப்பெண்ணும் மணமகனும் மோதிரம் மாற்றிக் கொள்ள நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்தது!! மணமகனின் அம்மா பெண்ணை பாட சொல்ல, பாவனா வெட்கத்தில் மறுக்க, அவளுக்கு பின்னே அமர்ந்திருந்த நித்திலாவையும் நேத்ராவையும் பார்த்து பாவனாவின் அம்மா பாட சொல்ல, திடுக்கிட்டு பார்த்தாள் நித்திலா.

சிறு வயதில் அம்மாவின் பிடிவாதத்தால் பாட்டு கிளாஸ் சென்றாள் அவ்வளவு தான். பாடுவது பிடிக்காது என்றில்லை ஆனால் அவள் இது போல சபைகளில் பாடி பலநாட்கள் ஆகின்றது!! இப்போது திடீரென்று சொன்னாள்?!! ஆனால் அந்த இனிய சூழலும் அவளுக்கு பிடித்து தான் இருந்தது.

நேத்ராவிற்கு இசை என்றால் உயிர் இன்னமும் பாட்டு க்ளாஸ் சென்றுகொண்டு தான் இருக்கிறாள்!! குஷியாகி போன நேத்ரா நித்திலாவை அவசரப்படுத்த, இருவருக்கும் பிடித்த பாட்டை தேர்வு செய்து பாடினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.