(Reading time: 5 - 10 minutes)

09. ஊனமறு நல்லழகே - ப்ரியா

oonamaru-nalazhage

ந்திரேஷ் தங்கியிருந்த ஹோட்டலின் பார்க்கிங்கில் வழுக்கி கொண்டு சென்று நின்றது அந்த கார்..!!  அது கேட்டின் வழியே உள்ளே நுழைகையில் தன்னறையில் இருந்த ஜன்னலோரம் நின்று சிந்தனையில் இருந்தவன் அதை கவனித்திருந்தான்... ஆனால் ஆழ்ந்த யோசனையில் இருந்ததால் அது ஸ்ரவந்தி வந்த கார் என்பதை அடையாளம் காண அவனால் முடியவில்லை.

அதிலிருந்து இறங்கி ஹோட்டலின் உள்ளே சென்றான் மிதுர்வன். கூடவே ஸ்ரவந்தி மற்றும் ருத்ரா. மாலை அவனுடன் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் அவன் கல்யாணத்திற்காக விருந்து கேட்க, அன்றிரவு அந்த நான்கு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தான். இன்னும் ரிசப்ஷன் வைத்து யாருக்கும் தெரிவித்திருக்கா விட்டாலும் ஸ்ரவந்தி மருத்துவமனைக்கு வந்து சென்றதும் கேள்வி கேட்டவர்களிடம் அவன் மறைக்கவும் இல்லை.

அவள் இங்கு வந்ததில் இருந்து குழப்பங்களும் அதன் பிறகு அந்த சம்பவமும் அவள் காலில் பட்ட அடியும் பின் ருத்ராவின் வருகையும் என பத்து நாட்கள் ஓடிவிட்டன!! ஆனாலும் ரிசப்ஷன் வைக்கும் நேரம் மட்டும் வந்திருக்கவில்லை!! விருந்திற்கு கிளம்பும் போதே ருத்ராவும் உடன் வருவதாக கூறி கிளம்பினாள்.

மதுமதியிடம் அனுமதி பெறுவதற்காக ஸ்ரவந்தி அவரை தேடி செல்ல, அவரும் மதியழகனும் வெளியில் செல்ல கிளம்பி வந்தனர்.

"அத்தம்மா"

"என்னம்மா?"

"அவர்.. அவரோட பிரெண்ட்ஸ்க்கு ஏதோ பார்ட்டி.. என்னையும் கூப்பிடறார்.. நான்.." திக்கி திணறி விபரங்கள் அனைத்தையும் அவள் சொல்வதிலேயே அவள் வெளியில் செல்வதை சொல்வதில் பயப்படுகிறான் என்று தெரிந்தது. அவள் பயப்படும்படியா நடந்து கொண்டோம்? என்று நினைத்த மதுமதிக்கு தன செய்கையின் மீது கோபமும் அவள் மீது கனிவும் வந்தது.

அவளையும் மதுமதியையும் ஒரு முறை பார்த்து விட்டு சோபாவில் சென்று அமர்ந்தார் மதியழகன்.

"தாராளமா போயிட்டு வா மா"

"சரிங்க அத்தை.. உங்களுக்கு சமைக்க சொல்லிட்டேன்.. முடிஞ்சா வரைக்கும் சீக்கிரமே வந்திடுறேன் அத்தை" அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து வந்த மிதுர்வன்,

"அம்மா அவளை எப்படி பயன்படுத்தி வெச்சுருக்கீங்க பாருங்க" என்று சிரிக்க, அவள் அவனை பார்த்துவிட்டு மதுமதியை பார்த்து இல்லை என்பது போல தலையாட்ட, புன்னகையுடன் அவள் கன்னத்தை தடவியவர்,

"மன்னிச்சுருமா ஏதோ கோபத்தை நான் உன்மேல காட்டிட்டேன்" என்று கூற பதறி போனாள் ஸ்ரவந்தி.

"ஐயோ என்னத்த இது நீங்க என் அம்... அம்மா மாதிரி" இதை சொல்கையில் ஒரு வார்த்தையில் அத்தனை வழியை கட்டியிருந்தாள் அவள். அவள் அதை அறியாமல் இருக்க, சட்டென்று மூவரும் அவள் முகம் பார்த்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"ம்ம்ம்ம் சரி சரி போய் கிளம்புங்க.. நானும் உங்க மாமாவும் கூட வெளியில கிளம்பிட்டோம்?"

"அப்படியா?" , மிதுர்வன்.

"ஆமாம் துருவா, உங்க ரிசப்ஷன் வர்ற வெள்ளிக்கிழமை வெச்சுடலாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம்.. இதுக்கு மேலயும் தள்ளிபோடறது சரி இல்லைன்னு தோணுச்சு"

"ம்ம்ம்ம் நானும் நினைச்சேன்ப்பா, ஹாஸ்ப்பிட்டல்லயும் எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க அதன் இன்னைக்கு சின்ன பார்ட்டி குடுக்குறேன்னு சொல்லிட்டேன்"

"ம்ம்ம்ம் இப்போ போய் பத்திரிக்கை வாங்கிட்டு அப்படியே மண்டபம் பார்த்துட்டு வரலாம்ன்னு போறோம்"

"பத்திரிக்கையா?"

"ஆமாம் ஆரேட்ய சொல்லி வெச்சுட்டோம்"

"ம்ம்ம்ம் சரிப்பா போயிட்டு வாங்க"

"நாளைக்கு நீ நேரத்துலயே போய் ஸ்ரவந்தியோட காலேஜ் அட்மிஷன் முடிச்சுட்டு வந்துடுப்பா.. அப்போ தான் உங்களுக்கு டிரஸ் எடுக்க போக சரியா இருக்கும்.. இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு", மதுமதி.

"சரிம்மா.. அப்படியே ருத்ராக்கும் அட்மிசன் போடணும்"

"என்னது?" மதுமதியின் குரலில் கோபம் தெரிய, அவனை நிமிர்ந்து பார்த்ததோடு நிறுத்தி கொண்டார் மதியழகன்.

"ஆமாம்ம்மா.. இனி அவ இங்க இருந்து தான் படிப்பா"

"இதெல்லாம் நல்ல இல்லைடா மிது" , மதுமதி.

"ப்ளீஸ் மா.. உங்க கிட்ட நான் இதை பத்தி பேசறேன்.. இப்போ நீங்க கோபப்படாம கிளம்புங்க நாங்களும் கிளம்பறோம்.. அப்புறம் ருத்ராவையும் கூட்டிட்டு போறோம்" என்று மிதுர்வன் சொல்ல,

"அவ எதுக்கு? " என்று சீரிய மதுமதியை பார்வையால் அடக்கினார் மதி.

"கிளம்பு மது நம்ம போலாம்.. சீக்கிரம் பார்த்து போயிட்டு வாங்க.. ஸ்ரவந்தியை பார்த்து கூட்டிட்டு போயிட்டு வாப்பா, வரோம் ம்மா" என்று மீதூர்வனிடம் சொல்லிவிட்டு ஸ்ரவந்தியிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்றார் மதியழகன்.

அதற்கு மேல்  அங்கே நிற்காமல்,

"வரேன்மா பத்திரமா போயிட்டு வா" என்று ஸ்ரவந்தியிடம் சொல்லிவிட்டு மீதூர்வனிடம் ஒரு முறைப்படி செலுத்திவிட்டு சென்றார் மதுமதி.

அந்த ஹோட்டலின் உள்ளே நுழைந்து நிறைய பேர் அமரும் பார்ட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த அந்த ரூமிற்கு சென்றனர் மூவரும். இருபது பேர் அமர்ந்து உண்ணக்கூடிய பெரிய நீள்வடிவ மேஜை அலங்கரிக்க பட்டிருக்க, அறை குளிர்சாதன பெட்டியின் உதவியால் ஜில்லென்று இருந்தது. ஏற்கனவே அனைவரும் வந்திருக்க, இவர்கள் உள்ளே நுழைகையில் இன்னும் இரண்டு மூன்று பேர் வந்தனர்.

அனைவருக்கும் ஸ்ரவந்தியை அறிமுகப்படுத்தி வைத்தவன் அனைவருக்கும் வேண்டுவதை ஆர்டர் செய்துவிட்டு தானும் உண்டான். அனைவரும் மரியாதைக்காக ஸ்ரவந்தியிடம் பேசினாலும் இனிமையானவர்களாக தான் தெரிந்தனர்.

ருத்ரா உடன் இருந்ததால் தனிமையாகவும் அவள் உணரவில்லை..!! அனைவரும் உணவருந்தி விட்டு கிளம்பும் சமயம் தன்னறயில் இருந்து கீழிறங்கி வந்தான் சந்திரேஷ்.

எதிரில் வந்த ஒரு குழந்தை கையில் இருந்த ஐஸ்கிரீமை ஸ்ரவந்தியை கடந்து செல்களில் அவள் முந்தானையில் கொட்டி விட, அதை சுத்தம் செய்ய அவள் கைகழுவும் இடத்திற்கு செல்ல, சந்துருவும் சாப்பிடும் முன் கைகழுவ அங்கே வந்தான். அவனை தூரத்திலிருந்தே பார்த்தவள் அவன் வரும்முன் அவசரமாக சுத்தம் செய்துவிட்டு விரைந்து சென்று மிதுரவனுடன் சேர்ந்து நடந்தாள்.

அந்த இடத்தை விட்டு வெளியே செல்கையில் இவள் திரும்பி அவனை பார்க்க இவளுக்கு சில அடி தூரம் வரை வந்து நின்று இவளையே அவன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது!!

இவள் அவசரமாய் முகம் திருப்பும் முன்னர் "ஸ்ராவனி" என அவன் இதழ்கள் அசைவது தெரிந்தது..!!

தொடரும்…

Episode # 08

Episode # 10

{kunena_discuss:804}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.