(Reading time: 7 - 14 minutes)

05. நிர்பயா - சகி

Nirbhaya

வனா??அவனா அது??எனதிரு விழிகள் கண்ட உருவம் நிச்சயம் அவன் தானா??அவளால் சிறிதும் நம்ப முடியவில்லை.அவன் எவ்வளவு மாறிவிட்டான்??அதன் காரணம் உண்மையில் நான் தானா??-பல கேள்விகள் அவள் இதயத்தை துளைத்தெடுத்தன.

அப்படி யாரை சந்தித்தாள் அவள்??யார் மாற்றத்திற்கு இவள் காரணமாகி போனாள்??

"ஹனி!உனக்கு சாக்லெட் எடுத்துட்டு வந்திருக்கேன்!"-வைத்தியநாதனின் குரல்,செவிகளில் விழ மறுத்து,அவள் கவனம் வான் நிலவையே தஞ்சம் அடைந்தது.

"ஹனி?"

"ஆ..தாத்தா?"

"என்னாச்சு??"

"..............."

"என்னம்மா?உடம்புக்கு முடியலையா?"

"அதெல்லாம் இல்லை தாத்தா!"

"வேற என்ன??"

"................"

"சொல்லும்மா!"

"அவனை பார்த்தேன் தாத்தா!"-அவளது கண்களில் அச்சம் நிறைந்திருந்தது.

"தெரியும்!"-சாதாரணமாய் அவர் கூறவும்,அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

"உங்க இரண்டு பேரையும் காலம் ஒருநாள் சந்திக்க வைக்கும்னு அன்னிக்கே எதிர்ப்பார்த்தேன்!"

"............."

"எப்படி சந்தித்தீங்க?"

"பார்ட்டில ஃப்ரண்ட்ஸ் கூட பேசிட்டு தனியா என் பழைய கிளாஸ் ரூம்ல இருந்தேன்!அப்போ எதிர்ப்பாராத விதமா கதவை லாக் பண்ணிட்டாங்க!நான் எவ்வளவோ திறக்க முயற்சி பண்ணேன்.அப்போ தான் யாரோ அந்தப் பக்கம் வர சத்தம் கேட்டுது!உடனே,கதவை தட்டுனேன்!அடுத்த சில நிமிஷத்துல கதவு திறந்தது.அது ஏ.சி.ரூம் வேற!வென்டிலேஷனே இல்லாம,மூச்சு முட்டி,நான் மயங்கின போது அவன் தான் என்னை தாங்கி பிடிச்சான்!"

"அம்மூ..உ..உனக்கு ஒண்ணும் ஆகலையே!உன்னை யாரு தனியா போக சொன்னா?"

"இல்லை தாத்தா!நான்..."

"நீ வா!டாக்டரை வர சொல்றேன்!"

"இல்லை..ஹாஸ்பிட்டல் போயிட்டு தான் வந்தேன் தாத்தா!"

"என்னம்மா நீ?எதாவது ஆகி இருந்தா,என்ன ஆகுறது?"

"அதுக்குள்ள அவன் காப்பாத்திட்டான் தாத்தா!"

"............"

"முதல்ல எனக்கு அவனை அடையாளமே தெரியலை..ஆனா,அவன் என்னை கண்டுப்பிடிச்சிட்டான்!அப்பறம்,எனக்கு பர்ஸ்ட் எய்டு பண்ணி நான் நார்மல் ஆகுற வரைக்கும் என் கூடவே இருந்தான்!நான் அவனுக்கு தேங்க்ஸ் சொல்லும் போது.. !"- (அதற்கு மேல் நான் கூறுகிறேன்!)

"ரொம்ப தேங்க்ஸ் சார்!இந்த உதவியை மறக்க மாட்டேன்!"

"ஆனா!என்னை மறந்துடுவ தானே!"-புன்னகைத்தப்படி கேட்டான் அவன்.

அவள் குழப்பத்தோடு அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

"இன்னும் ஞாபகம் வரலையா செல்லம்?"

"ஹலோ!யார் நீங்க?"-கோபமாக சீறினாள் நிர்பயா.

"பாரேன்!கோபப்பட கூட பழகிட்டியா??ரொம்ப மாறிட்ட நீ!உருவத்துலயும் சரி,குணத்துலயும் சரி!"

"யார் நீங்க?நான் யாருன்னு தெரியுமா??"

"ம்..ஏன் தெரியாம??நிர்பயா சங்கர்!"

"ப்ச்..நிர்பயா!"

"சரி நிர்பயா!சிம்ம ராசி,மகம் நட்சத்திரம்,மகர லக்னம்,சிவ கோத்திரம்,உன் தாத்தா உன்னை ஹனின்னு கூப்பிடுவாரு,பாட்டி குட்டிம்மான்னு செல்லமா கூப்பிடுவாங்க!உங்கம்மாவும்,நானும் மட்டும் அம்மூன்னு கூப்பிடுவோம்!"-அவன் ஜாதகத்தையே புட்டு வைக்க,அவள் திடுக்கிட்டு போனாள்.

"மட சாம்பிராணி!இன்னும் யாருன்னு தெரியலையா?"

".............."-அவன் தன் கழுத்தில் இருந்த ருத்ரத்தை எடுத்து காண்பித்தான்.நிர்பயாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

"ஞாபகம் வந்ததா?"-என்றான் ஜோசப்.

"நீ சொன்ன மாதிரியே திரும்பி வந்துட்டேன்!இத்தனை வருஷமா உன்னை தான் தேடிட்டு இருந்தேன்.இன்னிக்கு விதி மறுபடியும் நம்மளை ஒண்ணு சேர்த்துவிட்டது!"-(இவர்களின் கடந்த காலம் தெரியாமல் இவர்களின் உரையாடல் புரியாது!அதனால்,அதை முதலில் தெரிந்துக் கொள்வோம்!)

சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்...

நிர்பயா பத்தாம் வகுப்பு படித்த அதே பள்ளியில் ஜோசப் பன்னிரண்டாம் வகுப்பு பயின்றான்.

பள்ளிப்பருவத்தில் அவனை போன்று மோசமானவன் உலகில் இல்லை என்று அவன் ஆசிரியர்களால் பட்டமளிக்கப்பட்டவன் அவன்.யாரையும் மதிக்க மாட்டான்.முதுநிலை ஆசிரியர் ஒருவரின் கரத்தை முறித்த பெருமை அவனையே சாரும்!!அனைத்தும் தீய குணங்களிலும்,ஒன்று மட்டும் அவனிடம் இல்லை.அது,பெண்களை கண்டு கொள்ளவே மாட்டான்.

அதற்கு வேட்டு வைத்தனர் அவன் உயிர் நண்பர்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.