(Reading time: 7 - 13 minutes)

12. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ர்ஜுன் & கோ பேசிக் கொண்டே கேம்பஸ்க்கு சரியாக ஐந்தே முக்காலுக்கு வந்து விட, அர்ஜுன் செக்யூரிட்டி ரூம் அருகிலே நின்று கொண்டு மற்ற இருவரோடும் பேசிக் கொண்டு இருந்தான்.

சரியாக ஐந்து ஐம்பதேட்டுக்கு உள்ளே நுழைந்தனர் சுபாவும், நிஷாவும்.. அவர்களை கொண்டு விட சுபா பெற்றோர்களோடு, வருண் , மகிமாவும் வந்து இருக்க, முறைக்க ஆரம்பித்த அர்ஜுன் கட்டுபடுத்திக் கொண்டு நின்றான்.

முதல் நாள் போல் இன்றும் எல்லோருக்கும் சுபா உள்ளிருந்து டாட்டா காண்பிக்க, அவர்களும் பாய் சொன்னார்கள். அர்ஜுன் & அவன் friends நிற்பதை பார்த்து அவர்களுக்கும் பாய் காண்பித்தனர். அவர்களும் திருப்பி சொல்ல, எல்லோரும் கிளம்பினர்.

இவர்களும் உள்நோக்கி நடக்க ஆரம்பிக்க, சுபாவிடம் அர்ஜுன்

“சுபா.. உங்களுக்கு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்.. ? பத்து நிமிடம் முன்னதாக வாருங்கள் என்று.. ஏன் இப்படி கடைசி நேர டென்ஷன் எல்லோருக்கும் ஏற்படுத்துகிறீர்கள்?” என்று இந்த முறை தமிழில் வினவ,

ஒரு நிமிடம் முழித்து விட்டு பிறகு “இல்லை.. கேப்டன்.. நாங்கள் பத்து நிமிடம் முன்னாடியே வந்து விட்டோம்.. கேம்பஸ் முன்னாடி ஒரு பெரிய மரம் இருக்கு இல்லியா .. அங்க இருந்து எட்டு நிமிஷம் பேசிட்டு இருந்தோம்.. அதுதான் கரெக்டா ஆறு மணிக்கு உள்ளே வந்த்ட்டோம்லே.. கேப்டன்..” என்று கூற,

அவன் தலையில் அடித்துக் கொண்டான்.

அப்போது “கேப்டன் உங்களுக்கு மட்டும் தனி ரூலா?” என்று வினவ,

“ஏன்.. நான் உள்ளே வந்து பதினைந்து நிமிஷம் ஆச்சு..”

“ஜி.. நீங்க punctual பரந்தாமன் என்பது எங்களுக்கு நல்லா தெரியும்.. ஆனால் உங்க friend இங்கே campus குள்ளே எப்படி வந்து இருக்கார்...? உங்க friend நீங்க கூட்டிட்டு வந்தா நாங்க எங்க friend கூட்டிட்டு வருவோம்.”

“அறிவு கொழுந்து.. நீ யார கூட்டிட்டு வந்தாலும்... செக்யூரிட்டி உள்ள விடனும் லே..”

“ஆமாம்.. ஆனால் இவர மட்டும் எப்படி விட்டாங்க..?”

இப்போ மிதுன் பதில் சொன்னான்.. “பிரிகடியர் என்னோட மாமா.. அவர் தனியா invitation லெட்டர் மாதிரி கொடுத்து என்னை வர சொல்லி இருக்கார்.. “ என , இப்போது சுறா நன்றாக அசடு வழிந்தாள்..

ராகுல் “ரெண்டு பேரும் நோட்டீஸ் போர்டு பார்த்தீங்களா?” என்று வினவ,

நிஷா “இல்லியே கேப்டன்” என்றாள்.

“அதுதானே .. நமக்கு அதுக்கெல்லாம் நேரம் இருக்காதே.. இன்னிக்கு நைட் கேம்பஸ்குள்ளே தீபாவளி celebration இருக்கு ..”

“ஹையா... அப்போ ஜாலி தான்.. கேப்டன் அப்போ இன்னிக்கு வரட்டி கிடையாது இல்ல.. “ என்று சுபா வினவ,

“அடக் கொடுமையே.. “ என்று அர்ஜுன் தலையில் அடித்துக் கொண்டான்..

அவன் mind வாய்ஸ் “இவள எப்படி சமாளிக்க போறேனோ தெரியலியே.. சாப்பாட்ட தவிர வேறு எதுவும் யோசிக்க கூட மாட்டேங்கறாளே.. டேய் அர்ஜுன் நல்ல யோசிசுக்கோடா.. உனக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா “ அவன் மனசாட்சி கேட்க,

அர்ஜுன் அதற்கு “ என் ஸ்வீட் டார்லிங் சுபிகுட்டி தான் எனக்கு வேணும்” என்று பதில் சொன்னான்..

அதற்கு “நீ எல்லாம் திருந்த மாட்ட.. ‘” என்று விட்டு அவன் மனசாட்சி பாய் பாய் சொல்லியது.

அதற்குள் சுறாவின் குரல் உரத்து கேட்க, தன்னிலைக்கு வந்த அர்ஜுன் என்னவென்று பார்க்க,

சுறா நிஷாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்..

“ஹேய்.. கூஸ் .. நீயாவது போர்டு பார்த்து இருக்கலாம்லே.. “ என்றாள்

“ஹ்ம்ம்.. நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த..”

“ஹேய்.. நான் எதுக்கு உன்னை friend ஆ வச்சு இருக்கேன்.. இப்படி important மேட்டர் எல்லாம் நீ பார்த்துக்கணும் .. “

அவள் தலையில் நிஷா கொட்ட வரவும் நகர்ந்தவள்

“இங்கே பாரு.. இந்த முக்கிய விஷயத்தை பார்க்க நீ மறந்ததாலே இன்னிக்கு பார்ட்டி லே dull அடிக்க போறோம்.. “

“ஏண்டி.. ?”

“அம்மா .. இன்னிக்கு எடுத்துட்டு வந்த காக்ரா சோலி ரெண்டு பேருக்கும் எவ்ளோ நல்லா இருந்தது.. இங்கே வச்சு இருந்தா துவைக்கனுமே பயந்து அம்மா கிட்ட கொடுத்து அனுப்பிடோம்.. இப்படி பார்ட்டி இருப்பது தெரிஞ்சா அத இங்கே எடுத்துட்டு வந்துருக்கலாம்..

“அட மிஸ் பண்ணிட்டோமே.. “ என்று நிஷா வருந்த,

சுறாவோ “விடு .. நாம எல்லாம் மிலிடரி uniform லேயே.. உலக அழகியா தெரிவோம்.. நார்மல் சுடிதார்லே கண்டிப்பா பிரபஞ்ச அழகியா மாறிட மாட்டோம்.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.