(Reading time: 9 - 17 minutes)

02. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

னது மடிக்கணினியில் ஏதேதோ செய்துக் கொண்டிருந்தாள் கீதா!அவளின் அருகே புத்தகத்தை விரித்து வைத்து கன்னத்தில் கை வைத்தப்படி,அமர்ந்திருந்தாள் ஆராத்யா.

"ஸ்வீட்டி!"

"ம்..."

"நீ உண்மையிலே படிக்கிறீயா?"

"அக்கா!சத்தியமா முடியலை...தூக்கம் வருது!"

"ம்..எப்போ பார்த்தாலும் இதையே சொல்ற?யுனிவர்சிட்டி எக்ஸாம் வந்துடுச்சு!தெரியுதா?"

"அக்கா!நான் பாஸ் பண்ணிடுவேன்கா!"-அவர்கள் உரையாடிக் கொண்டிருக்க,ஒரு புத்தகத்தோடு அங்கே வந்து அமர்ந்தார் நிரஞ்சன்.

"என்ன பேபி?என்னாச்சு?"

"தூக்கம் வருது!"

"என்ன நீ?படிக்க உட்கார்ந்தா தூக்கம் வருமா உனக்கு?"

"தாத்தா!"

"எனக்கு தெரியாதும்மா!நீ மட்டும் ஃபையில் ஆயிட்ட..!உங்கப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வைத்து துரத்தி விட்டுவிடுவான்!"

"தாத்தா..!"

"என்னை ஏன் தாயி முறைக்கிற?உங்கப்பா அமைதியா இருக்கிறதுக்கு காரணமே உன் பெரியப்பா தான்னு தெரியும்ல!"

"போங்க...எல்லாரும் கல்யாணத்தைப் பற்றி பேசுறீங்க!எனக்கு முன்னாடி அக்கா இருக்கிறது உங்களுக்கு தெரியலையா?"-சுற்றி வளைத்த செய்தி நேரடியாக தன்னிடம் வர,அவர்களின் சூழ்ச்சி புரிந்தது கீதாவிற்கு!!

"இப்போ என்னை ஏன் 2 பேரும் இழுக்கிறீங்க?"

"இல்லை பேபி!"

"அம்மா பேச சொன்னாங்களா?"

"இல்லை பேபி!நானா தான் பேசுறேன்!சரி..நீ ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்ற?ஐயோ...கல்யாணம் வேணாம்னு உங்கப்பா சின்ன வயசுல ஒரு பாடு படுத்தினான் பாரு..!இப்போ,அவனோட பொண்ணு நீ பண்ற!"

"தாத்தா!நான் கல்யாணம் வேணாம்னு சொல்லலை!நான் எதிர்ப்பார்க்கிற மாதிரி இருந்தா,பண்ணிக்கிறேன்!"

"ரியலி...எப்படி இருக்கணும் பேபி?"

"எப்படி இருக்கணும்கா?"

"ம்..ஏன் இந்த ஆர்வம்?"

"சொல்லு!"

"இதுநாள் வரை,எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு எந்த எண்ணமும் வந்ததில்லை!எனக்காக வரப்போறவன்,ஏன்டா இத்தனை நாளா அதைப்பற்றி நான் யோசக்கலைன்னு என்னை வருத்தப்பட வைக்கிற மாதிரி இருக்கணும்!"-நிரஞ்சன் சற்றே வெறுப்பாக அவளை பார்த்தார்.

"என்னாச்சு?"

"அதுக்கு நீ லவ் பண்ணணும்!நீதான் யாரையும் கண்டுக்கவே மாட்றீயே!"

"அப்படி என்னையும் திரும்பி பார்க்க வைக்க,ஒருத்தன் பிறந்திருந்தா,கும்மிடு போட்டு நான் கட்டிக்கிறேன்!அதுவரைக்கும்,என்னை ஆளை விடுங்க!"-என்றவள் அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க,எழுந்துச் சென்றாள்.

"ஏன் தாத்தா?இதெல்லாம் நடக்கும்னு நம்புறீயா?"

"எனக்கு நம்பிக்கை இல்லை செல்லம்!உன் அக்கா மனசை ஜெயிக்கிறதுக்கு 1000 வருஷம் ஒருத்தன் தவம் பண்ணி வரம் வாங்கி இருக்கணும்!"

"இவ ஏன் இப்படி இருக்கா?யாராவது செய்வினை வைத்திருப்பாங்களோ?"

"ச்சீ..ச்சீ...அதெல்லாம் இருக்காது!ஆனா,உண்மையிலே கீதா மாதிரி ஒரு பொண்ணு துணையா வர கண்டிப்பா ஒருத்தன் பாக்கியம் பண்ணி இருக்கணும்!!பெத்தவங்க கொடுக்கிற சுதந்திரத்தை இதுநாள் வரை எந்த சூழலிலும் தவறாக அவ பயன்படுத்தியதில்லை.

ராகுலுக்கு கீதா மேலே எப்போதும் ஒரு பயம் இருக்கும் தெரியுமா?"

"தெரியும்!கீதா பாட்டியால தானே!அப்பா சொல்லிருக்காரு!"

"அது மரியாதைம்மா!ராகுல் கீதாவை வாங்க,போங்கன்னு சொல்லி,தன் அம்மா மேலே இருக்கிற மரியாதையை வெளிப்படுத்துறான்!பயம் எதுக்குன்னா,அவளுக்கு செய்யுற தப்பை ஒத்துக்காம வாக்குவாதம் பண்றது பிடிக்காது!ஒருமுறை ராகுல் ஏதோ தப்பை மறைத்து தீக்ஷாக்கிட்ட வாக்குவாதம் பண்ணிருக்கான்,உண்மை தெரிந்த இவ ஆறு மாசமா அவன் கூட பேசவே இல்லை!"

"என்ன தாத்தா சொல்ற?"

"ஆமாம்மா!கீதா எல்லாத்திலும் வித்தியாசம்!எல்லா விஷயத்தையும் தனித்துவமா செய்வா!நீ வேணும்னா பாரு...அவளுக்கு வரப்போற வரன் நிச்சயம் அவ எதிர்ப்பார்ப்பை தாண்டி எல்லாத்தையும் அவளுக்காக பூர்த்தி செய்ய போறான்!"-அவரது சொற்களில் ஒருவித உற்சாகம்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.