(Reading time: 6 - 12 minutes)

09. உயிர் ஆதாரமே..!! - ப்ரியா

Uyirin aatharame

லைபேசி ஒலியில் கவனம் கலைந்து நிமிர்ந்தான் வைஷ்ணவ். அந்த டைரியில் பதிந்திருந்த கவனத்தை திசை திருப்புவது சற்று கடினமாகவே இருந்தது அவனுக்கு. இரண்டாம் முறையை அவளை சந்தித்த நிகழ்வை அவள் எழுதியிருந்த விதம் அங்கங்கே அவள் வரைந்திருந்த சிறு ஓவியங்கள்..!! அவன் கண் முன் அந்த நிகழ்வை கொண்டு வர தவறவில்லை!!

அலைபேசி ஒரு முறை அடித்து ஓய்ந்திருந்தது. இன்னமும் அந்த தாக்கத்திலிருந்து அவன் வெளிவரவில்லை. தான இப்படி எல்லாம் ? அதுவும் பெயர் ஊர் தெரியாத ஒரு பெண்ணிடம்??!! அதற்கு காரணமும் இருந்தது அவனிடம்..!!

கனவில் என்றால் கூட அவன் நம்ப மாட்டான்!! இப்போதும் அவன் நம்பவில்லை ஆனால் அவள் எழுதியிருந்த விதம் அந்த வரைபடங்கள்!! அதில் இருப்பது அவன் தானே??!!  அவள் குழம்பி கொண்டிருக்கையில் மீண்டும் அலைபேசி அவனை அழைத்தது..

"ஹலோ"

"ஹலோ கண்ணா.."

"அ.. அம்மா? சொல்லுங்க அம்மா"

"இன்னும் ஹோட்டல்ல இருந்து வரலையா நீ?"

"காலைல கிளம்பலாம்ன்னு தான் இருந்தேன் ஆனால் நைட் மித்ரன் வந்ததால தூங்க லேட் ஆகிடுச்சு மா, அதான் காலைல இங்கேயே ரெஸ்ட் எடுத்துட்டு வரலாம்ன்னு இருந்துட்டேன்"

"சரிப்பா.. அப்பா உனக்கு கால் பண்ணாங்க ஆனா நீ எடுக்கலைன்னு எனக்கு கூப்பிட்டு கேட்டாங்க, அது தான் கேட்டேன்"

"அப்பா??? எப்போ பண்ணி இருந்தாங்க?"

"ஒரு அரைமணி நேரம் இருக்கும்"

"ப்ச்.. சரிங்க அம்மா நான் பேசிடறேன்"

"ஒன்னும் அவசரம் இல்லப்பா, போன விஷயம் ஓகே ஆகிடுச்சாம் அதை சொல்லத்தான் கூப்பிட்டாராம், டீலிங் நமக்கே கொடுக்குறேன்னு சொல்லிட்டாங்களாம்"

"வாவ்.. ரொம்ப சந்தோஷம்"

"ம்ம்ம் அது இருக்கட்டும் நீ சாப்பிட்டியா?"

"இதோ போய் சாப்பிடனும்மா"

"இப்போவா??? வைஷ்ணவ் அங்க எல்லாம்சரியா இருக்கு தானே?"

"என்னாச்சு மா? ஐயம் பைன்"

"மணி 4 ஆச்சு.. இன்னமும் சாப்பிடாம அப்பா கால் அட்டென்ட் பண்ணாம நீ என்ன செய்துட்டு இருந்த?"

"கொ..கொஞ்சம் தூங்கிட்டேன்மா வேற ஒன்னும் இல்ல.. இப்போ நான் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு கிளம்பி வரேன்"

"ஒன்னும்மில்லை தானே?"

"ஆமாம் மா"

"அப்போ சரி. அப்பாவும் நைட் வந்துடுவார்.. நீயும் வந்துடு"

"சியூர் மா"

"ம்ம்ம் சாப்பிட்டுட்டு பத்திரமா வா கண்ணா"

"கண்டிப்பா மா நீங்க பாத்து இருங்க"

"வெச்சுடவா?"

"சரி மா பை"

போனை வைத்தவன் அன்னையிடம் இரண்டாம் முறையாய் போய் சொல்வதை நினைத்து வருந்தி கொண்டிருந்தான்.இனி கொஞ்ச நாட்களுக்கு இந்த டைரியை படிக்க கூடாது என்று முடிவு செய்தவனாய் அதையும் வரைபடங்களையும் தன் பேக்கில் வைத்தவன். தந்தைக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு அந்த ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு சென்னை நோக்கி பறந்தான்.

தன் அன்னையிடம் கூற போகும் பொய்யை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்தபடி அன்னையி தேடி சென்றால் நித்திலா!! இது அவள் சொல்ல போகும் எத்தனாவது பொய்யென அவளுக்கே தெரியாது!!

சிறு வயது முதலே மிகவும் குறும்புக்கார பெண்ணாக நித்திலா இருக்க, அவளை அடக்கும் வழி தெரியாமல் கோபவதாரம் பூண்டார் சாரதா. இயல்பிலே மிகவும் கனிவான குணம் கொண்டவர், நித்திலாவிற்கு மட்டும் மிகவும் கண்டிப்பானவர். அதற்க்கு காரணமும் அவள் தான். ஆனால் சிறுவயதில் இது புரியாமல் தன்மீது மட்டும் அன்னை இப்படி கோபம் காட்டுவதன் விபரம் புரியாமல் அவரிடம் இருந்து தப்பிக்க பொய் சொல்வது ஒரு புறம் செய்து கொண்டு தான் செய்யும் குறும்புகளையும் நிறுத்தாமல் செய்துகொண்டிருந்தாள்.

இது சாரதாவின் கோபத்தை குறைக்காமல் அதிகரித்து கொண்டிருக்க அது தெரியாமல் அவளோ வளர்ந்த பின்னும் தன் பிடிவாதத்தில் நிற்க, இருவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.

சாரதா கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க, அவர் முன்னே சென்று நின்றாள் நித்திலா. அவரை பரிசோதிக்க ஒரு நர்ஸுடன் வந்திருந்தால் அபி. வைஷ்ணவின் தோழி அபி..!!

சாரதாவின் இந்த நிலைக்கும் ஒரு வகையில் நித்திலா தான் காரணம்.. நேற்று தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தார். அபி தினமும் வந்து பார்த்துக் கொண்டு போவதாக சொல்லி அனுப்பி வைத்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.