(Reading time: 11 - 21 minutes)

19. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

வர் தன் மகனின் ரூமுக்கு போனார் அவன் கதவை போடாமலே தன் லப்டாபில் இருந்தான், அவன் ரம்யாவுக்குத் தெரியாமல் தன் போனில் அவளை போட்டோ எடுத்து வைத்திருந்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுந்தரம் உள்ளே நுழையவும்,திரும்பிப் பார்த்தான், 'ஏன் தூங்க வில்லையா?' என்று கேட்டார்

‘இல்லைப்பா,’ என்று சொன்னான் மகன்

அவன் முதுகை தடவி ‘என்னப்பா?’ என்று அவன் தலையில் தன் உதட்டை பதித்தார்.

‘என்ன கண்ணப்பா, இந்த அப்பாகிட்ட கூட உன் மனசுல இருக்கிறத சொல்லமாட்டாயா? ‘என்று கேட்டார்

‘ஒன்னுமில்லப்பா, உட்காருப்பா, ‘என்றான் ஆனந்தன்

‘என்னப்பா, நீ உன் மனசுல இருக்கிறத சொல்லு, என்னாலானத நான் செய்யறேன்,’என்றார்

‘இல்லப்பா யாராலும் முடியாதுப்பா,’ என்றான் ஆனந்தன்

‘சரி, முடியாதுன்னு வச்சுக்கோ, ஆனா விஷயத்தை வெளியே சொல்லி, உன் மனசுல இருக்கிற பாரத்த குறைச்சுக்கோ’

‘பாரத்த, எப்படிப்பா குறைக்கிறது? என்னன்னு சொல்றது,? ஒன்னும் புரியல்லப்பா?’

‘என்ன நடந்தது, நீ வந்து இன்னும் பன்னிரண்டு மணி நேரம் ஆகவில்லை அதற்குள் உனக்கு இவ்வளவு வேதனை தந்தது எது? சொல்லு? ‘என்றார்

‘அப்பா,’ என்றான் வேதனையுடன், எதுவாக இருந்தாலும் உன்னைப் புரிந்துக்கொள்ளும் பெற்றவர்கள்தான் நாங்கள்,’சொல்லுப்பா’

‘என்னை அனுப்பி வைத்தது உன் அம்மாதான், சொல்லு அவளும் வருவாள்’

‘சொல்லு, என்ன நடந்தது?’

‘அப்பா காலைல நான் நேரே என் ரூமிற்கு வந்தேன், அப்போ அந்தப் பெண் புடவை கட்டிக் கொண்டிருந்தாள், அவள் யாரென்று தெரியாது என் ரூமில் இருந்தாள், நான் அவளை யார் நீ? என்று கொஞ்சம் கோபத்தோடு கேட்டேன், ஏற்கனவே நீ கல்யாணம் பண்ணிக் கொள்வது கோபமாக இருந்தது அதை அந்தப் பெண்ணிடம் காண்பித்துவிட்டேன், அவள் அந்தப் பயத்தில் புடவையை கீழே போட்டுவிட்டாள், அவள் நின்ற கோலம் என் மனதைக் கலைத்தது, நான் அப்போது நினைத்தது ஒரு வேளை அவள் நீ கல்யாணம் பண்ணிக் கொள்கிற பெண்ணோ என்று, பிறகுதான் அவள் அம்மாவின் தங்கை என்று புரிந்துக் கொண்டேன்,ஏற்கனவே நான் என் மனசுல அவளை நினைத்து தவிக்கிறேன், இப்போ வேனும்னாலும் அவளை நினைக்கக் கூட முடியாத நிலையில் இருக்கிறேன், என்னால் தாங்க முடியவில்லை,’ என்றான் ஆனந்தன்

‘ஏன் அவளை நினைக்கிற நிலைமையில் இல்லை?’என்று கேட்டார் சுந்தரம்

‘என் வாயால் அது சொல்ல முடியாதப்பா,’ என்றான் ஆனந்தன்

‘உன் மனசை மாத்த வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்’ என்ன என்றார் சுந்தரம் ‘அப்போ இந்தப் பெண் மறந்து விடும்’ என்றார்

‘அப்போ, அம்மா போனவுடன் உங்களால் ஏன் அதை பண்ண முடியவில்லை நீங்கள் ஏன் வேற கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியவில்லை,’ என்று கேட்டான் மகன்

‘ஏன்னா, எனக்கு என் மேல் நம்பிக்கை நான் என் மனைவியை உண்மையாக காதலித்தேன், அதனால் அவளுக்காக வாழ்ந்தேன்,’என்றார் சுந்தரம்

‘அப்போ என்னை மட்டும் ஏன் இப்படி சொல்றே? , ‘என்றான் மகன்

‘நீதானே சொன்ன, அவளை நினைக்கக் கூட முடியாமல் இருக்கேன்னு , அதான் சொன்னேன்,’ என்றார் சுந்தரம்

‘நீ எவ்வளவு அவளை காதலிக்கிறாய்? தட் மட்டேர்ஸ் மை சன், ‘என்றார் சுந்தரம்

‘நீ அவளை உண்மையாக காதலித்தால், அவளும் உன்னை அதே அளவு காதலித்தால், யு பைட் பார் இட்’ என்றார் சுந்தரம்

‘எப்படிப்பா? ‘என்றான் மகன்

‘நீ என் பிள்ளைடா, நீ நினைச்சா அதை நடத்தனும், டூ இட், டாக் டு ஹர்,’

‘சொல்லு ரம்யா உன் ப்ராப்லம் என்ன? ஏன் அழற? ஏன் நீ கீழேயே வரல? இந்த அக்கா மேல கோபமா?’ என்று கேட்டாள்

‘இவ என்னிகக்கா இவ மனசுல இருக்கறத சொல்லியிருக்கா? நீயே சொல்லு ?’ என்று ரஞ்சனா சொன்னாள்

‘அது சரி,மனசுல இருக்கிறத சொல்லலேன்னா யாருக்குத் தெரியும்? பசி எடுத்தா பசி என்று சொன்னாத்தான் தெரியும், இப்போ நான் கேக்குற கேள்விக்கு ஆமாம், இல்லைன்னாவது சொல்றியா? உனக்கு கல்யாண ஆசை வந்துடுத்தா? நீ யாரையாவது காதலிகிறாயா? ஏதாவது சொல்லு ‘என்றாள் ராதா.

‘நீயே சொல்லு சீனு ஏதாவது வாய் திறந்து சொன்னாத்தானே தெரியும், நீ சீக்கிரம் சொல்லு ரம்யா, நான் அம்மா அப்பாகிட்ட பேசறேன், எனக்கு என்னன்னு தெரியும் ஆனா நான் நினைக்கிறது கரெக்ட்டான்னு எனக்கு எப்படி தெரியும் நீ சொல்லு, எனக்கு வேற கீழே போகனும், அவருக்கு கோபம் வந்தா, சமாளிகிறது கஷ்டம்,’ என்றாள் ராதா

சீனு கேட்டான்,’ நான் கேக்கனும்னு இருந்தேன் உன் கதை கூட பெரிய கதை போலிருக்கு? நீ என்னிடம் இதைப் பத்தி ஒன்னுமே, சொல்லலே ,’ என்று கேட்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.