(Reading time: 22 - 44 minutes)

18. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சத்தியமாகவா?
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..)
இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ராஜா இது மெய்தானா?
பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை

ரு வாரத்திற்குப்பின் விநாயக்கை பார்க்க வந்திருந்தார் ரஞ்சித்..

வாங்க DCP சார் என்ன ஆளையே காணும்??

இல்ல சார் பேமிலி பங்ஷன் அதான் திடீர்நு போக வேண்டியதா போச்சு..

ம்ம்ம் இல்லையே முகமே ஏதோ பதட்டமாயிருக்கு என்ன விஷயம்??

அதெல்லாம் ஒன்னுமில்லை..டயர்ட்டாயிருக்கு அவ்ளோதான்..

என்னவோ சொல்றீங்க…சரி நம்ம கான்ட்ராக்ட்லா எப்படி போய்ட்டுருக்ககு??

நல்லா போய்ட்டுருக்கு சார்..அல்மோஸ்ட் முடிய போகுது நெக்ஸ்ட் மந்த் மார்க் இந்தியா வராரு..அவரு பாத்து ஓ.கே பண்ணிட்டா மெடிசின்ஸ் அவங்க நேம்ல ட்ரண்ஸ்வர் பண்ணிடலாம்..பேசினபடி பணம் நம்ம கைக்கு வந்துடும்..

குட்..அப்போ அதர்வாவோட அழிவுகாலம் நெருங்கிடுச்சுநு சொல்லு..

ஆமா சார் உங்களுக்கு அப்படி என்ன கோபம் அதர்வா மேல..

அவன் மேலயில்ல ரஞ்சித்..மிஸ்டர் அமர்நாத் மேலதான் என்னோட ஒட்டுமொத்த வெறுப்பும் நா எப்படி இப்போ தனி மரமா நிக்கிறேனோ அந்த ஆளும் அப்படி ஆகணும்..அதுக்காகதான் இவ்ளோ பண்ண வேண்டியிருக்கு..அதர்வா உள்ள போய்ட்டான்னா அந்த சாக்ட்சி மட்டும் தான் அவளுக்கும் ஒரு முடிவு கட்டிட்டு அந்த அமர்நாத் முன்னாடி போய் நிப்பேன்..அப்போ தெரியும் இந்த விநாயக் யாருநு..அடிபட்ட மிருகத்தின் கர்ஜனை இருந்தது அந்த குரலில்..

மகி ஏதோ ஒரு புத்தகத்தை விரித்து வைத்து கண்கள் அதிலிருக்க அவளோ வேறொரு உலகத்தில் இருந்தாள்..அவளருகில் வந்து கையசைத்து அவளது தவத்தை கலைத்தவன்,என்ன மகி பயங்கர யோசனைல இருக்க..

அதெல்லாம் ஒண்ணுமில்லங்க..

ம்ம் சரி ஈவ்னிங் கொஞ்சம் வெளியே போணும் வரியா??

போலாம்ங்க பட் எங்கநு சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி ரெடி ஆய்டுவேன்..

என் காலேஜ் மேட்டோட மேரேஜ் பார்ட்டிடா..கொஞ்சம் க்ரேண்ட்டா ட்ரெஸ் பண்ணிக்கோ..

சரிங்க என்றவாரு தனதறைக்குள் சென்றாள்..ராம் சொன்ன நேரத்திற்கு தயாராகி வந்தவள் அந்த கடல் நீலமும் பச்சையுமான அனார்கலி சுடிதாரில் சந்தன நிற பாட்டமும் துப்பட்டாவுமாய் அழகாயிருந்தாள்..கடல்நீல வண்ண சட்டையில் கருப்பு பேண்ட்டோடு வெ ளியே வந்தவனுக்கு இருவரின் உடைநிற ஒற்றுமை நிறைவை தந்திருந்தது..தன்னவனிடமிருந்து கண்களை அகற்ற போராடி கொண்டிருந்தாள் மகி..

ஷர்ட் நல்லாயிருக்கு..-மகி..

தங்க்ஸ் டா உன் செலக்ஷன்தான்..போலாமா??

மாலை மங்கும் நேரத்தில் ராமின் அருகாமையில் கார் பயணம் மனதிற்கு இதமாயிருந்தது மகிக்கு..அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம் வந்தாள்..என்ன குட்டிமா பயங்கர சீரியஸா வர…என்னாச்சு??

அப்படிலாம் ஒண்ணுமில்ல ராம்..ஆமா ப்ரெண்ட்னு சொன்னீங்க பரணி அண்ணா வரலையா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.