(Reading time: 5 - 9 minutes)

01. நல்லதோர் வீணை செய்தே - ரேணுகா தேவி

Nallothor veenai seithe

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெடப்புழுதியில் எறிவதுண்டோ?

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெடப்புழுதியில் எறிவதுண்டோ?

 

சொல்லடி சிவசக்தி!

எனைச்சுடர்மிகும் அறிவுடன்படைத்ததுவிட்டாய்.

சொல்லடி சிவசக்தி!

எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்ததுவிட்டாய்.

தேன்கலந்த குரலில் மெல்லிய ஒலியில் பாடியவாறே தலைவாரிக் கொண்டிருந்தவளை படுக்கையில் போர்வைக்குள் வெறும்தலையை மட்டும் வெளியே நீட்டி பார்த்துக் கொண்டிருந்தாள் சித்து என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த வீட்டு கடைக்குட்டி சித்ராதேவி.

கண்ணாடிவழியே தெரிந்த தங்கையின் முகத்தை கண்டவள் புன்னகையுடன் "குட்மோர்னிங் லூசி " என்று சொல்ல "ஓய்ய்ய் காலங்காத்தால லூசி கீசினு சொல்லி வாங்கிக்கட்டிக்காத..." என்றவாறு மெத்தையில் எழுந்து அமர்ந்தாள்.

"சரிங்க மஹாராணி கோவிச்சுக்காதிங்க.. " என்ற தமக்கையை பார்த்து புன்னகைத்தவள் "பாட்டு சூப்பரா இருந்துச்சுக்கா. ஏன் நிறுத்திட்டு பாடு " என்றுகூற, அவளும்பாடியபடியே தன வேலைகளை sதொடர்ந்தாள்.

இவர்களின் உரையாடலை சமையலில் ஈடுபட்டுக்கொண்டே  கேட்டுக்கொண்டிருந்த  பர்வதம் சிரித்து கொண்டே கையில் இட்லியுடன் தன மூத்த மக்களிடம் வந்தார்.

"இந்தா டா சாப்பிடு " என்றவர் சித்துவிடம் திரும்பி "ஏய்ய்ய் வாயாடி இப்படியே கெடந்து உருண்டுட்டு இருக்காம சீக்கிரம் எழுந்து படிக்கிற வழியை பாரு. ஸ்டடி ஹாலிடேய்ஸ்னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருக்க நீ " என்று அவள் தலையில் செல்லமாக குட்டிவிட்டு தன் வேலையை தொடர செல்ல, "ஹேய் மிஸ்ஸஸ் பர்வதம் வெங்கடாச்சலம் சும்மா சும்மா என்னை சீண்டி பாக்காதே "என்று நம்பியார் பாணியில் சொல்ல, "என்ன வெங்கடாசலாம்னு என் பேரு அடிபடுது...ஓஹ் சின்னக்குட்டி எழுந்துட்டியா.... பர்வதம் சூட இன்னொரு கப் டி போடும்மா...சின்ன குட்டி பிரெஷா குடிக்கட்டும் " என்றபடியே கையில் காய்கறி கூடையுடன் உள்ளெ நுழைந்தார் வெங்கடாச்சலம், அந்த குடும்ப தலைவர்.

"ஹம்ம்கூம் உங்களுக்கு டி வேணும்னா நேரா கேக்கணும் அதா விட்டுட்டு சின்ன குட்டி பக்கத்து வீட்டு பாட்டின்னுட்டு..."என்று நொடித்தாலும் அடுத்த இரண்டு நிமிடங்களில் கையில் சுட சுட டீயுடன் வந்தார்.

இது தான் இவர்கள் குடும்பம். ஒற்றை அறையை கொண்ட அந்த சிறிய வீட்டில் இருந்தாலும் அவர்களின் சந்தோசத்திற்கு என்றும் குறைவிருந்ததில்லை. சாதாரண தினக்கூலி வேலையில் இருந்தாலும் வெங்கடாச்சலத்திற்கு தன் மனைவியும் பிள்ளைகளும் தான் உலகம். தினக்கூலிசெய்பவரின் மகள்கள்யென்று யாராலும் சொல்ல இயலாதபடி தன் பிள்ளைகளை வளர்த்திருந்தார்.

இளையவள் சித்ரா இப்போதுதான் பனிரெண்டாம் வகுப்பு எழுதுகிறாள். பர்வதம், தன் கணவரின் மிக குறைந்த சொற்ப வருமானத்தில் அழகாக குடும்பத்தை எடுத்து செல்பவர். தனக்கென அவர் இது வரை எதையும் கேட்டிராத டிபிக்கல் தமிழ் மதர் :)

கைகளில் இட்லி தட்டை வைத்து கொண்டே இவர்களை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அந்த வீட்டு மூத்த பெண்ணான சரித்ராவின் மனதில் என்றும் போல அன்றும் ஓடிய ஒரே எண்ணம் "இறைவா இப்படி ஒரு குடும்பம் கிடைக்க நான் போன ஜென்மத்தில் எவ்வளவு பெரிய தவம் செய்தேன் என்று தெரியவில்லை. நான் படித்து முடித்து இவர்களையெல்லாம் சந்தோசமாக பார்த்து கொள்வேன்" என்று மனதில் உறுதி பூண்டாள்.

"அம்மா பேசாம அக்காவை சூப்பர் சிங்கள சேர்த்து விட்டுரலாம். " -சித்து

"ஏய்ய்ய் உனக்கு பொழுது போகலைனா அதுக்கு நான் தான் கெடைச்சனா... " -சரித்ரா

"உண்மையைத்தான் கூறுகிறேன் என் ஆருயிர் தமக்கையே ... தினம் தினம் காலையில் நீ உன் இனிய குரலால் என் உயிரை வாங்குவதை போல இந்தா தமிழ்நாட்டு மக்களின் உயிரையும் வாங்க வேண்டாமா " இதை சொல்லி முடிக்கும் போது தயாராக பாத்ரூம் வாசலில் நின்று கொண்டாள்.

"அடிங்க்க்க் ..." என்று சரித்ரா அவளை அடிக்க செல்ல "வெவ்வவ்வ்வே " என்று அழகு காட்டிவிட்டு உள்ளே நுழைந்து கதவை பூட்டி கொண்டாள் சித்து.

"உள்ளையே இருந்துருவியாடி வெளிய வருவைல " -சரித்ரா

"ஹாஹாஹா உனக்கு பஸ்ஸுக்கு டைம் ஆயிடுச்சு சரித்து " என்று உள்ளிருந்து குரல் கொடுக்க "அய்யயோ அம்மா டைம் ஆச்சு நான் கிளம்பறேன்... ஹெய்ய பிசாசு பை டி....அப்பா வாங்கப்பா போலாம் " என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு தந்தையின் டிவிஎஸ் 50 யில் ஏறி அமர்ந்தாள்.

இவள் தான் நம் நாயகி சரித்ரா. இன்ஜினியரிங் நான்காம் வருடம் படிக்கிறாள். இத்தனை கஷ்டத்திலும் ரேஷன் அரிசியை சாப்பிட்டு தன்னை படிக்க வைக்கும் தன் குடும்பத்தை காப்பதே அவள் லட்சியம்.மனதளவில் மென்மையானவள். சினிமா கதாநாயகிகளை போல கண்ணைக்கவரும் அழகு இல்லை. ஆனால் அவளுடன் பழகும் எவராலும் அவளை வெறுக்க இயலாது. எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் முகம் சுளித்ததில்லை. பாரதியாரின் ரசிகை. படிப்பில் கெட்டி.தன் குடும்பம் படிப்பு இதை தவிர வேறெதிலும் தன் கவனம் சென்றதில்லை. தன்னுடன் படிக்கும் வசதியான பெண்களை பார்த்து அதை போல உடுத்தவும் நடக்கவும் ஆசை கொண்டதில்லை. தன் படிப்பிற்காக இருந்த ஒரே ஒரு வீட்டை விற்று இன்று ஒண்டு குடித்தனத்தில் கஷ்டப்படும் தன் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தவேண்டும் அவர்கள் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் இது மட்டுமே இப்போது அவளுடைய லட்சியம்.

அவளின் இந்த லட்சியம் இது நிறைவேறுமா ??

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:1077}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.