(Reading time: 9 - 18 minutes)

13. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

மிதுன் தன் மாமா வீட்டிற்கு செல்ல, அங்கே அவனுக்கு ஆர்ப்பாட்டமான வரவேற்பு கிடைத்தது. மிதுனின் மாமா மிலிடரியில் சேர்ந்த பின் ஒரு வடஇந்திய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அவர் குடும்பத்தில் கலப்பு திருமணத்தால் அவருக்கு கொஞ்சம் கஷ்டங்கள் ஏற்பட்டாலும், பின் அது எல்லாம் சரியாகி விட்டது.

தன் அக்கா மகனான மிதுன் மேல் அவருக்கு பிரியம். அவருக்கு அவனையும் ஆர்மியில் சேர்க்க ஆசை இருந்தது, ஆனால் மிதுன் இன்ஜினியரிங் முடிக்கும் போது , அவனின் அப்பாவிற்கு உடம்பு சரி இல்லாமல் போக, அவன் அம்மா, அப்பா இருவரும் அவனை தங்களோடு இருக்க வைக்க எண்ணினார்கள். மிதுன் மாமாவிற்கும் அது புரிய, தானும் உடனே வந்து பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் , மிதுன் அவர்களோடு இருப்பதுதான் சரி என்று, எல்லோருமாக சேர்ந்து அவனை சென்னையில் பிசினஸ் செய்ய வைத்தனர்.

அர்ஜுனும், ராகுலும் ஆர்மியில் அதிலும் அவரின் regiment லேயே சேர, அவருக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இருவரையும் மிதுனின் friends என்பதை தாண்டி, அவர்களின் திறமையும் புரிந்து அவர்களுக்கு ஊக்கமளித்து தன் பிள்ளைகள் போல் எண்ணிக் கொள்வார்.

ஆனால் முக்கியமான நாட்களிலும், சற்று ஓய்வு கிடைத்தாலும் மிதுன் வந்து தன் மாமாவை பார்த்து விட்டு செல்வான். மகிமாவை தேடும் முயற்சியில் கடந்த ஆறு மாதங்கள்தான் அவன் வர வில்லை. வந்து இருந்தால் அவன் இணையை தேடும் முயற்சியில் வெகு முன்னதாகவே வெற்றி பெற்று இருப்பன்.

நிறைய நாட்கள் கழித்து மிதுனை பார்த்த சந்தோஷத்தில்,

“ஹேய்.. மிதுன்.. வா.. வா.. நானே நினைத்து இருந்தேன் .. பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது என்று.. சரியாக வந்து விட்டாய்.”

அவன் அத்தையும் “ஹேய்.. பேட்டா .. உன்ஹோனே தேகா .. மேன் பஹுத் குஷி ஹுவா (உன்னை பார்த்ததில் மிகுந்த சந்தோஷம்” ) “ என்று ஆசையாக வரவேற்றார். இருவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன்

“சாரி மாமா ... கொஞ்சம்  வேலை ஜாஸ்தி.. அதான் உங்களை பார்க்க வர இத்தனை நாள் ஆயிடுச்சு.. “ என்று கூறிக் கொண்டிருக்கும் போதே , உள்ளே வந்த ராகுலும், அர்ஜுனும்

“ஆமாம்.. அங்கிள்.. ரொம்ப முக்கியமான வேலை..  “ என்று நக்கலடித்தனர். அவர்களுக்குதான் தெரியுமே அவனின் முக்கிய வேலை மகிமாவை தேடுவது தான்.

“கண்ணா.... என்னடா.. ரெண்டு பேரும் சொல்ற தொனியே சரி இல்லையே.. கியா பாத் ஹாய்..?”  என்று வினவ,

இருவரையும் முறைத்தவன், “ஒன்றுமில்லை மாமா.. இவனுங்களுக்கு என்ன வேற வேலை.. “ என்று சமாளித்தான்.

“நீங்க சொல்லுங்க பாய்ஸ்.. என்ன விஷயம்..?” என்று இவர்களை கேட்க,

மிதுனின் முகம் பார்த்துவிட்டு “ ஒண்ணும் இல்லை அங்கிள்.. சும்மா அவனை கலாய்த்தோம்..” என்று சமாளித்தார்கள்.

தீபாவளிக்கு செய்த ஸ்வீட்ஸ் எடுத்துக் மூவருக்கும் கொடுத்தார் மிதுனின் அத்தை.. சற்று நேரம் அரட்டை அடித்து விட்டு எல்லாரும் celebration க்கு கிளம்பினர்.

இவர்கள் மூவரும் இங்கு இருக்கும் வேளையில், நம் சுபத்ரா & கோ  , தங்கள் அறைக்கு சென்ற போது அங்கே உள்ள எல்லா பெண்களும் celebration பற்றி பேசி கொண்டு இருந்தனர். celebration என்றால் மொட்டையாக இல்லாமல், எதாவது அலங்காரம் செய்யலாம் என்று அவரவர்க்கு தோன்றியதை சொல்ல, பின் சுபத்ராவின் யோசனை படி, எல்லாரும் சேர்ந்து நிறைய எண்ணிக்கைகளில் விளக்குகள் ஏற்றி அந்த இடத்தை அலங்காரம் செய்யலாம் என முடிவு செய்தனர்.

அவர்கள் ஸ்பெஷல் permission வாங்கி கடைகளில் கிடைத்த அகல் விளக்கு போன்ற  candle வகைகள்..  வாங்கி வந்தனர்.

பின் அனைவரும் சேர்ந்து அதை அலங்காராமாக அடுக்கி வைத்து விட்டு, எல்லோரும் ரெடியாகி வந்தனர்.

சரியாக எட்டு மணிக்கு உள்ளே வந்த எல்லா வீரர்களும் அசந்தனர்.. ஸ்வஸ்திக் போன்றும், ரங்கோலி கோலம் போன்றும் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தது. அனைவரும் வாவ் .. என்று கூச்சல் போட்டனர். இவர்களின் ஐடியாவிற்கு அங்கே quartersஇல் வசிக்கும் ஆர்மி குடும்ப பெண்கள் அனைவரும் ஒத்துழைத்தனர்.

ஹாப்பி தீபாவளி என்று விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர்.

அங்கே ஆடிடோரியம் மேடையில் சீனியர் ஆபீசரின் மனைவி எல்லோரையும் வரவேற்று விட்டு, யார் யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை வெளிபடுத்தலாம் என்று கூறினார்.

மிமிக்ரி, ஸ்டான்ட் up காமெடி போன்றவை முதலில் செய்தார்கள். பின் பெண்கள் பிரிவில் சிலர் பாட்டு பாடினார்கள்.

நிஷா மேடை ஏறியவுடன் ராகுல் கிறங்கி போனான்.. இதுவரை அவர்களை uniform மற்றும் casual ஆடைகளிலும் பார்த்து வந்தவன், இன்றைக்கு நிஷா அழகான ஆகாய வண்ண designer சல்வாரில் வர, அவளின் அழகில் சொக்கிப் போனான். அவனின் ஏக்க பெருமூச்சை பார்த்து மிதுனும், அர்ஜுனும் சிரிக்க இருவரையும் முறைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.