(Reading time: 29 - 58 minutes)

21. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

Puthir podum nenjam

 

அன்பான தோழமைகளே.. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

இந்த பதிப்பும் வழக்கம் போலவே தாமதப் படுத்தி விட்டேன் - நீங்க ரொம்ப நல்லவங்க என்னை மன்னிச்சு அப்டேட் படிக்க ஆரம்பிச்சு இருப்பீங்க - அதுக்கு முன்னாலே ஒரு விஷயம் - "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" - அந்த கூலி தான் இந்த பதிவு என்று நினைக்கிறேன்! பல முறை  ரீ வொர்க் செய்த பின் தான் நான் நினைத்த "ஃபீல்"  ஓரளவிற்கு கொண்டு வர முடிந்தது!  உங்க ஃபீல் எப்படி இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்!

புதிர் 21

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ தானே!!!!

ம்.... நண்பனாக அறிமுகமான அன்றே... வக்கிரத்துடன் தன்னை சூழ்வான் என்பது பேரதிர்ச்சி அவளை உறைய வைக்க.... தொண்டைக் குழிக்குள்ளே சிக்கிய

“ப்ளீஸ்....விட்டுடு”, என்ற வார்த்தையை திணறி வெளியில் கொண்டு வந்தாள் - என்னவோ இவள் சொன்னதும் விட்டுவிடுவான் என்ற நம்பிக்கையில் என்ன தான் தற்காப்பு கலையில்  வித்தகி என்றாலும்.. போராட முயலாமல் இப்பொழுதும் கெஞ்ச.....

அந்த கயவனோ தன் பலத்தால் அப்படியே தோளோடு அவளை இழுத்து.. தன்னோடு சாய்த்துக் கொள்ள முயன்ற சமயம் பார்த்து... அவனை உலுக்குவது போல அத்தனை சத்தத்தையும் கிழித்துக் கொண்ட வந்தது அந்த கடுங் கட்டளை!!!!

“யேய்ய்ய்..... !!!!!!”,

அந்த உறுமலில் திகைத்து திரும்பிய அதே சமயம் ... பக்கவாட்டிலிருந்து... திடுமென அவன் இடுப்பெலும்பை உடைப்பது போல  வந்திறங்கியது அந்த மிதி...

அதிரடியாக விழுந்த அடியில் அப்படியே மட்ட மல்லாக்க தரையில் விழப் போனவன் விரல்கள் அவள் ஸ்ட்ராப்பில் சிக்கி அவளையும் சேர்த்து இழுக்க அவன் மீதே விழப் போனவளை...

நொடி தாமதிக்காமல் அவனை தள்ளி விட்டு.. இவளைத் தாங்கிப் பிடித்து.... மார்ப்போடு அணைத்துக் கொண்டான் அவன்! ஆர்யமன்!!!!

ஆம் அவன் தான்! அவனே தான்!!!! அதே ஆக்ரோஷ மூர்த்தி அவதாரம்!!! கை இவளை அணைத்திருந்தாலும்... சீறும் வேங்கையாய் தொம்மென்று விழுந்தவனை மிதித்தே கொன்று விடும் முனைப்பில் அவனை நோக்கி பாய நினைக்க...

அவளோ பெரு நிம்மதியில்.. ‘ஆர்யா!’, என்று விம்மலுடன் அவனுக்குள்ளே  பதுங்க... அவன் சீற்றம் குறையவில்லை என்றாலும்.. தனக்குள் புதைந்தவளை விட்டு விலகவும் மனதில்லாமல் அவளை உரசியவனின் பார்வையில்... அவள் கிழிந்து போயிருப்பது பட்டதும்..

‘ஹய்யோ.. அத்தனை பேர் முன்னாலும்..இந்த கோலத்திலா’, என்று மனம் பதற.... அதே சமயம்...

“அய்யோ.. அம்மா.. “, என்று ஹரிபிரசாத்தின்  கதறல் சத்தம் கேட்க....

அவனிடம் பார்வையை திருப்பிய அஞ்சனாவோ... அவன் மூக்குடை பட்டு ரத்தம் கசிவதைக் கண்டு  பதறிப் போனாள்! அவன் கயவன் என்றெல்லாம் நினைக்க தோன்றாமல்,

“ஹையோ... ப்ளட்”, என்று துடிதுடித்து அவனுக்கு உதவ ஓடினாள் ஆர்யமனின் அணைப்பை விலக்கிக் கொண்டு..

அந்த மதுக்கூடத்திற்குள் ஆபத்து வளையத்திற்குள் அவள் நிற்பதைக் கண்டது முதல்... தன் கைக்குள் அவள் வந்து சேரும் வரை.. எத்தனை முறை செத்திருப்பான்! அந்த படபடப்பு அடங்காது இன்னும் இதயம் எகிறி குதித்துக் கொண்டிருக்க... மீண்டும் ஆபத்தை விலைக்கு வாங்க ஓடும் அவள் செயலைக்  கண்டு சீற்றம் கொண்டவனாக...

அழுத்தமாக அவள் கைப் பற்றி தடுக்க...

அவளோ திமிறிய படி... பதை பதைப்புடன் ஹரி பிரசாத்திற்கு உதவுவதே ஒரே நோக்கமாக.. ஆர்யமனை நோக்கி..

“துடிக்கிறான்! பாவம் ஆர்யா!”, என்று கெஞ்சலாக சொல்லி  முடித்திருக்கவில்லை - அவன் கரம் அவள் கன்னத்தை பதம் பார்த்திருந்தது! ஆம், அறைந்தே விட்டான்!!!!

அவன் இரும்பு கரத்தின் வேகத்தையும் பலத்தையும் தாங்க முடியாமல் அவள் பூ முகம் துடித்துப் போக செவிப்பறையே கிழிந்து விட்டது போன்று சுரீரென்று வலியெடுக்க...

“ஆஆஆ”, என்று கத்தலுடன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டவளுக்கு   கண்கள் தானாக குளம் கட்ட....  அவன் இதை எதையும் கவனியாது... அவள் சிற்று உடையும், கிழிந்த கோலமும்  மற்ற கண்களுக்கு காட்சியாகி விடக் கூடாது என்பதே முனைப்பாக கண்ணில் பட்ட ஒரு மேஜை விரிப்பை அவள் மீது போர்த்தி அங்கிருந்து அப்புறப்படுத்துவதே முயல...

அதற்குள் அவர்களை சுற்றியிருந்த கூட்டம் சற்றே சிதறி...  ஹரிபிரசாத் தாக்கப்பட்டதைக் கண்டதும் கலவரமான அவன் நண்பர்கள் ஆர்யமனை அடிக்க ஓடி வந்தனர்...

அதில் ஒருவன் பியர் பாட்டிலை அவன் மீது எரிய... அவன் சுதாரித்து விலகும் முன்.. அதை விட சுதாரிப்பாய் ஜக்கிலிங் செய்து பழக்கப்பட்ட அஞ்சனாவின் கரம் மின்னலென பாய்ந்து அதை பிடித்த மறு நொடி.. அவளிடம் இருந்து அதை பறித்து உடைத்த ஆர்யமன்... அதன் கூரிய முனையை ஆயுதமாக்கி..

அதற்குள் தன்னை சுற்றி வளைக்க வந்தவர்களில் ஒருவனை மின்னல் வேகத்தில் தன் கைவளைவிற்குள் கொண்டு வந்து... அவன் தொண்டையிலே அந்த கூரிய முனையை வைத்து..

“யாராவது பக்கத்தில் வந்தீங்க இவன் செத்தான்!!!”,, என்று பாட்டிலை அழுத்தி மிரட்ட....

அதைக் கண்டதும் பயந்து போன அஞ்சனா மிரட்சியோடு, “வேண்டாம்... ஆர்யா!”, முனங்கிய படி அவனோடே ஒட்டிக் கொள்ள..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.