(Reading time: 8 - 16 minutes)

06. நிர்பயா - சகி

Nirbhaya

"ல்லவி!"-வழக்கத்திற்கு மாறாக,இனிமையாக ஒலித்தது சங்கரனின் குரல்!!

"சொ...சொல்லுங்க!"

"உன்கூட கொஞ்சம் பேசணும்மா!"-திடீரென்று வழங்கப்பட்ட அன்பு,பல்லவியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"சொல்லுங்க!"-மெதுவாக அவரருகே வந்தவர்,அவரது புஜங்களை மென்மையாக பற்றி,அவரது கண்களை உற்றுப் பார்த்தார்.

"முழுசா 24 வருஷமாச்சுல்ல!நம்ம கல்யாணம் வாழ்க்கையை தொடங்கி??"-இதமாக ஒலித்த இந்த குரலுக்காக தானே அவர் இத்தனை ஆண்டு தவம் கிடந்தார்??

"..............."

"உனக்காக நான் எதையும் செய்ததில்லை.எவ்வளவு கொடுமை பண்ணிருக்கேன்!நம்ம பொண்ணுக்கு இருந்த தைரியம் உனக்கிருந்தா என்னிக்கோ நான் கட்டின தாலியை கழற்றி என் முகத்துல வீசிட்டு போயிருப்பல்ல!"-சங்கரனின் குரல் தழுதழுத்தது.

"ஐயோ!அப்படி எல்லாம் பேசாதீங்க!என்னால நீங்க இல்லாம எப்படிங்க வாழ முடியும்??நீங்க இல்லைன்னா நான் செத்துடுவேன்!"-சங்கரன் அவசரமாக அவரது வாயை பொத்தினார்.

"லூசு!அடி வாங்குவ இப்படி பேசுனா!நீ இல்லாம நான் மட்டும் சந்தோஷமா இருப்பேனா??"

-என்றவர் பல்லவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.

24 ஆண்டுகளுக்கு பின் கிட்டிய முதல் ஸ்பரிசம்!!பல்லவியின் கண்கள் துளிர்விட்டன.அவரது கரங்கள் நடுங்கியப்படி தன் கணவனை அணைத்துக் கொண்டது.

சங்கரன் அவரது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்.

"ரொம்ப பெரிய பாவத்தை எல்லாம் பண்ணிட்டேன்மா!நான் செய்த பாவத்துக்கெல்லாம் நரகத்துல கூட எனக்கு இடம் கிடைக்காது போல இருக்கு!நீ என்னை மன்னிப்பியா?"

"தயவுசெய்து பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க!என்னால தாங்கிக்க முடியாது!"-அவர் உண்மையில் அழுதே விட்டார்.

"ஏ..அழாதே!நீ அழுதது எல்லாம் போதும்!இனி,நீ எப்போவுமே சிரிக்கணும்!சிரி!"

"..............."

"இப்போ நீ சிரிக்க போறீயா?இல்லை...எனக்கு தோணறதை நான் செய்யட்டுமா?"-சங்கரன் அவரை தன்னோடு இழுக்க அவர் முகத்தில் ஆயிரமாயிரம் வெட்கப்பூக்கள்!!24 வருடங்கள் கழித்து மலர்ந்த பூக்கள் அவை!!

"எனக்கு பசிக்குதும்மா!"

"ஐயோ!இதோ நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.கை கழுவிட்டு வாங்க!"-என்று அவசரமாக அந்த அறையை நீங்கினார் பல்லவி.அவர் செல்வதையே புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்தார் சங்கரன்.

நிர்பயாவின் வில் போன்ற புருவங்களின் மத்தியில் ஏதோ சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

"உன் அப்பா மாறிட்டான்மா!அவன் திருந்திட்டான்.பல்லவியை தப்பா பேசுன லட்சுமியை என் கண் முன்னாடியே ஓங்கி அறைந்தான்மா!"-காலையில் ஆனந்தமாக தொலைபேசியில் ஒலித்த விசாலாட்சியின் குரல் தான் அவள் குழப்பத்திற்கு காரணம்!!

"இது உண்மையா?"-யாருமில்லா வீதியில் நடந்தப்படி சிந்தித்தாள் நிர்பயா.

"எப்படி இந்த மாற்றம் சாத்தியம்??"

"இல்லை...இது நிச்சயம் உண்மையல்ல!!இது அவர் உருவாக்கிய மாயை!ஆனால் எதற்காக??"

"சங்கர் இன்ஸ்டியூட்ஸ் தான் அதற்கு காரணம் என்றால்..என்னிடமிருந்து கையெழுத்தை பெற வேறு உபாயங்களும் உண்டாயிற்றே!பிறகு,ஏன்???"-சிந்தித்தப்படி வெகு தொலைவு வந்திருந்தாள் அவள்.

"இந்த மாயையில் நிச்சயம் நான் விழ மாட்டேன்!இது என் தாயை எனக்கெதிராக மாற்ற தீட்டப்படும் திட்டமா?ஆனால்,அதனால்,என்ன பிராத்தி பெற போகிறார் அவன்??"-சிந்தித்தப்படி வந்தவளின் முகத்தில் பளீரென்று அடித்தது காரின் வெளிச்சம்!!

"டேய் மச்சான்!அங்கே பாருடா!"-குடி போதையில் காரின் மேல் அமர்ந்திருந்தனர் நால்வர்.அப்போது தான் உணர்ந்தாள் அவள்,தனிமையில் எங்கோ சிக்கிக் கொண்டோம் என்று!!

எதை பற்றி கவலைப்படாமல் திரும்பி நடந்தாள்.

"ஏ பாப்பா!என்னை கண்டுக்காம போற?நாலு பேரு இருக்கோம்னு பயந்துட்டியா?"-கத்தியவனின் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் என்ற சினம் எழுந்தது அவளுக்குள்!!எனினும்,அமைதியாக வந்தாள்.

காரிலிருந்து ஒருவன் வேகமாக இறங்கி வந்து அவளது கரத்தை பற்றினான்.அவனை எரித்துவிடுவதை போல ஒரு பார்வை பார்த்தாள் நிர்பயா.

"ஐயோ!பார்டா பத்தினி நெருப்பு!சாம்பலாக்கிடுவா போல!"-அவளை தன்னை நோக்கி இழுத்தவனை ஓங்கி அறைந்தாள் நிர்பயா.அவள் அறைந்த அறை,எஞ்சிய மூவருக்குமே கதி கலங்கி போனது.

"சாகடித்துடுவேன் ஜாக்கிரதை!"-என்று கூறிவிட்டு நகர்ந்தவளை இழுத்தான் அவன்.அவள் கொடுத்த அறைக்கு கூலி தர கை ஓங்கியவனின் கரம்,வேறு ஒரு உறுதியான கரத்தால் தடுக்கப்பட்டது.

நிர்பயாவின் விழிகள் அக்கரத்திற்கு உரியவனை பார்த்து ஸ்தம்பித்துப் போயின.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.