(Reading time: 4 - 8 minutes)

21. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ள்ளே வந்த அர்னவினை சுதீப் அமர சொன்ன போது அவன் மறுத்தான்…

“எங்க உங்க அண்ணன்?...”

“நீங்க முதல்ல உட்காருங்க அர்னவ்….”

“உங்க அண்ணனை கூப்பிடுங்க… பேசவேண்டியதை பேசிட்டு போயிடுறேன்…”

அர்னவின் குரலில் தெரிந்த அழுத்தம் சுதீப்பிற்கும் தெரியாமல் இல்லை… இருந்தும் என்ன செய்ய?.. திலீப் செய்த தவறால் அவனால் எதுவும் பேசமுடியவில்லை…

“நீங்க இருங்க… நான் போய் கூட்டிட்டு வரேன்…”

“சரி….”

ஒற்றை வார்த்தையில் பதில் கூறினான் அர்னவ்… அந்த இரண்டெழுத்தில் தெரிந்த கோபம் சுதீப்பினால் நன்றாகவே உணர முடிந்தது…

திலீப்பை அழைப்பதற்காக திரும்பிய சுதீப், திலீப் அங்கே வருவதைக்கண்டு அப்படியே நின்றான் மேற்கொண்டு நகராமல்…

திலீப் சுதீப்பை தாண்டுவதற்குள், அர்னவ் சுதீப்பை தாண்டிச் சென்று தீலீப்பை நெருங்கினான்…

“அர்னவ்…. எதுவா இருந்தாலும் பேசலாம்…”

சுதீப் அவசரமாக அர்னவினை தடுக்க முனைய,

“பயப்படாதீங்க சுதீப்… என் நிதானத்தை நான் இழக்க மாட்டேன்… என்னைப் பெத்தவங்க என்னை அப்படி வளர்க்கலை…”

சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தான் திலீப்…

“குத்துதா?... குத்தட்டுமேன்னு சொல்லலை… அப்படி குத்தலா சொல்லுறதா இருந்தா நேரடியாவே சொல்லிடுவேன்… இப்படி சுதீப்கிட்ட சொல்லமாட்டேன்…”

“அர்னவ்……….”

குரலில் கோபத்தோடு திலீப் பார்க்க,

“என்ன அர்னவ்?... என் பேரை சொல்லி கூப்பிடுறதுக்கு நீங்க யாரு?.. எனக்கு என்ன உறவு?...”

“நான் உன் அக்கா புருஷன்….”

“என் சிஸ் உங்களுக்கு மனைவியா?... அப்படியா?... அது இப்போ நீங்க சொல்லித்தான் தெரியுது…”

“அர்னவ் அவ என் மனைவி… நியாபகம் இருக்கட்டும்...”

கிட்டத்தட்ட கத்தினான் திலீப்..

“சும்மா கத்தாதீங்க… மனைவிங்கிற நினைப்பு இருக்குறதனால தான் கொடுமை பண்ணீங்களா இத்தனை நாள்?... இல்ல தனக்கு சொந்தமானவங்கிற திமிருல தான் வீட்டை விட்டு வெளியேவும் அனுப்பினீங்களா?...”

அவன் நேரடியாகவே கேட்க, திலீப் பேச முடியாது தடுமாறினான்…

“பேசுங்க… கொஞ்ச நேரம் முன்னாடி கத்துனீங்க… இப்போ எங்க போச்சு அதெல்லாம்?...”

“…………..”

“கட்டின பொண்டாட்டியை நடுராத்திரியில வீட்டை விட்டு வெளிய துரத்தி பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் கொண்டு போய் விட்டா உங்களை அப்படியே மனிதாபிமான மாணிக்கம்னு சொல்லுவாங்கன்னு நினைச்சீங்களா?... கேவலமா இருக்குங்க நினைக்கவே… என் சிஸ் அந்த இடத்துல எப்படி துடிச்சிருப்பாங்க??.... நினைச்சுப்பார்க்க முடியுதா கொஞ்சமாச்சும்?...”

“……………….”

“மனுஷனாப் பிறந்திருந்தா நினைச்சுப்பார்த்திருப்பீங்க… அதுதான் இல்லன்னு ஆகிப்போச்சே… அதனால தான………” என்று மேற்கொண்டு சொல்ல வந்தவன் அதற்குமேல் எப்படி அதை பேச என்று நிதானித்தான்….

“உங்க வாழ்க்கையில அம்மா, தங்கச்சி, மனைவி, மகள்னு எல்லாரும் இருந்தும் பொண்ணுங்கிற வார்த்தைக்குண்டான அர்த்தத்தை இன்னும் நீங்க புரிஞ்சிக்காம இருக்குறது தான் வேதனையா இருக்கு…”

மனம் கலங்க பேசியவன், திலீப்பை நேரே பார்த்து,

“சமூகத்துல உங்களையும் ஆண்மகன்னு பூஜா பிரேமி மூலமா உணர்த்துனது என் சிஸ்… அந்த குழந்தைங்க இப்போ உங்களுக்கு வேண்டாதவங்க ஆகிட்டாங்களா?... வெட்கமா இல்ல உங்களுக்கு?... பொண்டாட்டி என்ன பிள்ளை பெத்து கொடுக்குற இயந்திரமா?.. ஆண்பிள்ளை இருந்தா இந்த உலகம் அப்படியே உங்களை தலைமேல தூக்கி வச்சு கொண்டாடிடுமா?... இல்ல மாலை போட்டு மரியாதை கொடுத்து வரவேற்கும்னு நினைக்குறீங்களா?...”

அர்னவ் ஆத்திரத்துடன் கேட்டதும் மௌனமானான் திலீப்….

“குழந்தை வேணும்னு நினைக்குறது தப்பில்லை… ஆனா ஆம்பள பிள்ளை பெத்து கொடுத்தா தான் சேர்ந்து வாழ முடியும்னு சொன்னா உங்களை விட முட்டாள் உலகத்துலயே யாரும் இல்லை….”

அர்னவ் நக்கலாய் சொன்னதும், அவனை ஏறெடுத்து பார்த்தான் திலீப் கண்கள் சுருங்க…

“என்ன பார்க்குறீங்க?... சயின்ஸ் ரீதியா குறை உங்களுக்கு தான் இருக்கு என் சிஸ்க்கு இல்லை… இந்த லட்சணத்துல கட்டின பொண்டாட்டியை கண்டவங்களும் பேசுறதுக்கு இடம் கொடுத்து வீட்டோட வச்சிருந்து வேடிக்கைப் பார்த்துட்டு இருந்திருந்திருக்கீங்க?... உறுத்தலையா உங்களுக்கு மனசாட்சி?...… தன்னோட குறையை தன்னை நம்பி இருக்குற பொண்ணு மேல திணிக்கப்பார்க்குறோமேன்னு மனசு கேள்வி கேட்கலை?.... அசிங்கமா இருக்கு எனக்கு மேற்கொண்டு பேசவே… சே…..”

கோபத்துடன் வெறுப்பும் சேர்ந்து கொள்ள அர்னவ் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்…

“பொண்டாட்டி, புள்ளை வேணும்னு நினைச்சிருந்தா அப்பவே வீட்டுக்கு வந்து அவங்களை இங்க கூட்டிட்டு வந்திருப்பீங்க… உங்களுக்கு உங்க வீணாப்போன ஆசையும், கண்டவங்க போட்டு விடுற தூபமும் தான் கண் முன்னாடி தெரியுது… இதே எண்ணத்தோட நாங்க இருக்குற வீட்டுப்பக்கம் தலைக்காட்ட கூட நினைச்சிடாதீங்க சொல்லிட்டேன்…”

திலீப்பின் முகம் கூட பார்க்க பிடிக்காமல் அங்கிருந்து விருட்டென்று வெளியேறினான் அர்னவ் வேகமாக..…

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.