(Reading time: 22 - 44 minutes)

08. ஹேய்..... சண்டக்காரா... - ஜோஷ்னி

Hey sandakkara 

நினைவில் நிஜமாய் என்னுள் நீ

நிறைந்து இருக்கும் பொழுது பிரிவென்ற சொல்

நமக்கு எதுக்கு??????

" தேங் யு மிஸ்.மகதி!!  தாங்க்ஸ் அ லாட். இவ்ளோ சீக்கிரம் இந்த வொர்க் முடியும்னு நினைக்கல "  

எக்ஸைட்மென்ட் ஸ்டேட்டில் குதிக்காத குறையாக, அதற்குமாய் சேர்த்து, வாயில் இருக்கும் பல் மொத்தமும் தெரியும் அளவு சிரித்து நன்றி கூறினார் புரொஃபசர்  நகுலன்.

 " ஐ நோ, இருதயாளால இந்த டிசைனை  சீக்கிரம் கம்ப்ளீட் பண்ண  முடியாதோனு  ஒரு தாட் ஆரம்பத்துலயே  இருந்துச்சு. வேற வழி இல்லாம தான் கொடுத்தேன். அண்ட், எவ்ளோ லேட் பண்ணுவாங்களோனு யோசிச்சுட்டே இருந்தேன். பட் யு ஆர் டூ ஸ்மார்ட். தேங் காட்! என் டிசைனை காப்பாத்திடிங்க "

 பதிலாக ஒரு ரெடி-மேட் புன்னகை வீசிய மகதி,

"  ஸாரி ஸார். இந்த டிசைனை கம்ப்ளீட் பண்ணது நான் இல்ல. இருதயாள் தான். அவளுக்கு ஆபீஸ் ரூம்ல கொஞ்சம் வொர்க் இருக்குது. அதான் என்னை சப்மிட் பண்ண சொன்னாள் "

 வாங்கிய சிறிய சைஸ் பல்பில் தரையிறங்கியவர்,

" ஓ....  வேர் இஸ் இருதயாள்? "  என்றார்.

“ ஐ திங் வர டைம் தான். அநேகமா இங்க வந்துட்டு இருப்பா ஸார் ” 

மெல்ல திரும்பி பார்த்தாறே மகதி சொல்ல, சரியாக அந்த நேரம் பார்த்து அந்த அறை வாசலை லைட்டாக எட்டி பார்த்தாள் பொன் இருதயாள்.  

நம்ம மகி கண்ணுல மாட்டாமலா!

" இதோ அவ வந்துட்டா ஸார். எனக்கு ஒரு சின்ன வர்க். எக்ஸ்கியூஸ்-மி ஸார் " என்று பக்காவாக மாட்டிவிட்டு எஸ்ஸானாள் மகதி.

'அடிப்பாவி!!! காப்பாத்துறேனு கூட்டிட்டு வந்துட்டு, கரெக்ட் டைமிங்ல மாட்டி விட்டுடியே வாத்து!!!! வெளிய வந்து, வச்சு செய்றேன் இரு' என்று கருவிக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் இருதயாள்.

" குட் ஆஃப்டர்நூன் ஸார் "

" குட் நூன்மா. எக்ஸலண்ட் இருதயாள். டிசைன்ஸ் சூப்பர்பா இருக்கு. உங்ககிட்ட இருந்து இவ்ளோ அவுட்கம்.. நான் நிஜமா எதிர்பார்க்கல  "

" தேங் யு ஸார்..  "

மேலும் அரை மணி நேரம் அவருக்கு தலையாட்டிவிட்டு, அவரிடமிருந்து எஸ்கேப் ஆகி  வெளியே வந்த இருதயா முதலில் பிடித்தது மகதியின் கழுத்தை தான்.

" அடியே, உன்ன நான் என்ன சொல்லி அனுப்பி வச்சேன்? கொடுத்துட்டு மட்டும் வாடி. எதுவும் உளறாதேனு தானே...... துரோகி இப்படி கோர்த்து விட்டுடியே. எதுக்கு மாட்டிவிட்ட அவர்கிட்ட? சொல்லு.. "

" அதுக்கு ஃபர்ஸ்ட் கழுத்துல இருந்து கை எடுடி "

" எதுக்கு எடுத்த உடனே ஓடவா.. இந்த டகால்டி வேல எல்லாம் என்கிட்ட நடக்காது. ஒழுங்கா, மரியாதையா இப்படியே பதில் சொல்லு! "

" சொன்னா கேளு பொன்னு.  கொல கேஸ்ல உள்ள போய்ருவ.. கைய எடு "

" வெள்ள வாத்து உன்ன.....சரி, எடுதுட்டேன். இப்ப பதில் சொல்லு "

" நான் கொடுத்துட்டு வரலாம்னு தான் போனேன் பொன்னு. ஆனா ஸார் அந்த வொர்கை நான் தான் மூடுச்சேனு நினச்சு, அந்த ஃபுல் க்ரெடிட்டயும் எனக்கு கொடுத்தாரா.. அதான் மனசு கேக்காம, உன் பாராட்ட உனக்கே திருப்பி விட்டுட்டேன். உன் திறமை என்னனு உனக்கே தெரியல பொன்னு "

" வாத்து, வாத்து.. எதாவது வேல கொடுத்தால் சொதப்பிட்டு, குழந்தை லுக் விட்டு பதில் சொல்ற உன்னை திட்ட கூட மனசு வரமாட்டேங்குது "

" அதான் வரலயே, விடு "

" வாத்து "

" இப்போ என்னாச்சு? வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் பொன்னு? யாராவது இவ்ளோ அழகா டிசைன் பண்ணிட்டு, க்ரெடிட்ட மத்தவங்களுக்கு விட்டு தருவாங்களா? எப்படியும் உள்ள அவர் பேசினதைக் கேட்டுகிட்டு தானே நின்னுயிருப்ப, உன் ரத்தம் கொதிக்கலயாக்கும் "

" போடிங்க அவர் இங்கிலீஷ்ல பேசி கொல்வாருனு தானே உன்ன அனுப்புனேன். சொதப்பிட்டு பேசுறா பாரு பேச்சு, இட்லிக்கு சட்னி மிஸ்ஸிங்னு "

" அவர் இங்கிலீஷ்ல பேசுனா, நீயும் பேசு "

" அதான் வரலயே "

" ஏன் வராது? "

" ஏன்னா எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்த இங்கிலீஷு.."

" அடிங்க!  இங்கிலீஷ் வரணும்னா, அதுக்கு நீ கொஞ்சமாவதும் முயற்சி எடுக்கணும். இப்படி பயந்து ஓட ஓட தான், எதுவுமே பூதமா தெரியும். ஒரு நிமிஷம் நின்னு அத ஃபேஸ் பண்ணி பாரேன்,

தைரியம் தானா வரும். இப்படியே இருந்தா, அந்த ஸார் போல ஆளுங்க அவங்க வொர்க் எல்லாம் உன் தலைல கட்டிட்டு ஜாலியா இருப்பாங்க "

" நீ ஈசியா சொல்லிட்டா. இங்கிலீஷ் தப்பா பேசுனா எவ்ளோ கிண்டல் பண்ணுவாங்கனு  எனக்கு தானே தெரியும். நான் தமிழ் மீடியம்டி "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.