(Reading time: 7 - 14 minutes)

10. வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

நட்புக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி மற்றும் சிரம் தாழ்ந்த மன்னிப்பு .... 

வேலைபளு மற்றும் உடல்நிலை காரணமாக கடந்த இருமுறை தரவேண்டிய பகுதிகளை தரமுடியவில்லை ... இதுவும் சிறிய பகுதியாக அமைந்துவிட்டது .... இனி இது தொடராது இனி தவறாமல் தொடர்ந்து அதிக பக்கங்களுடன் உங்களை சந்திக்கின்றேன் ...

சித்து  விக்ரம் அடுத்த பகுதில் இருந்து வந்துவிடுவார்ங்க :) 

தாமத்தை பொறுத்து தொடர்ந்து ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி ..

ங்கையும் குழந்தையும் இறந்த பிறகு வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என நொந்து போனால் ரஞ்சி ..... மீண்டும் ஊருக்கு வந்தவள் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருக்க அவளை தேற்றும் வழி சங்கிக்கு தெரியவில்லை ... 

நாட்கள் நகர்ந்துசெல்ல ரஞ்சி ஓட்டுக்குள் சுருங்கும் நத்தையானால் .... இப்படியாக போய்க்கொண்டிருக்க சங்கியின் கணவனின் அலுவலத்தில் நடந்த ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள ரஞ்சியையும் கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்றால் சங்கீ .... 

அங்கே விழாவின் தொடர்ச்சியாய் ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் இருந்து வந்த குழந்தைகளின் கலை  நிகழ்ச்சியும் கூடவே விருந்தும் வழங்கப்பட்டது .... அந்த குழந்தைகளின் குறும்பும் கண்களில் தெரிந்த ஒருவிதமான பயமும் ரஞ்சிக்கு சிவாவை நினைவுபடுத்த ... அவர்களுடன் ஒன்றி போனால் .... அதன் பிறகும் அவர்கள் முகவரி அறிந்து வாரஇறுதி நாட்களையும் விடுமுறை நாட்களையும் அவர்களுடன் கழித்தால் .... 

எப்படியோ ரஞ்சி மீண்டும் பழையமாதிரி இருந்தால் நல்லது என சங்கீயும் இருந்திட ... ரஞ்சியின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்தது ....அப்பொழுது வேறு ஒரு ஆஸ்ரமத்தில் இருந்து போதிய இட வசதி இல்லாததின் காரணத்தினால்  சில குழந்தைகள் இங்கே அனுப்பிவைக்க பட்டார்கள் ... அவர்களுடன்  வந்தான் இந்த மாயக்கண்ணன் ....கண்ணன் ....துருருவென பார்த்துக்கொண்டு கொள்ளை அழகுடன் இருந்த அவனை பார்த்ததும் ரஞ்சிக்கு பிடித்துப்போய்விட்டது ..... ஏதோ ஒரு வகையில் அவன் இவளுக்கு விக்ரமை நினைவுபடுத்தி கொண்டும் இருந்தான் ....

குரு அவன் பிரபஞ்சினி வாழ்வில் வந்த வரம் பல காலத்திற்கு பிறகு அவளுக்கு கிடைத்த இரண்டாம்  சந்தோசம் .... கண்ணன் எப்படி அறிமுகமோ அப்படிதான் குருவும் ... கண்ணன் இருந்த ஆஸ்ரமத்துக்கு மருத்துவ உதவி செய்தவன்  அதன்பின் அந்த ஆசிரமத்து மக்கள் இங்குவர இவனும் இங்கு வர ஆரம்பித்தான் .... கண்ணனை தவிர யாரிடமும் பேசாத பிரபஞ்சினியை பார்த்தும் பார்க்காமல் சென்று  விடுவான் ... அதனாலே இவளுக்கு அவன் மீதான மரியாதை கூடியது .. அங்கு இருக்கும் அணைத்து தாத்தாவுக்கும் பாட்டிக்கும் இவன் மீது தனி பிரியம் ...குழந்தைகளுக்கோ அவன் செல்ல அண்ணன் .. செல்லமாய் கோபிப்பதும் அவர்கள் உணவருந்த மறுக்கும்போது கண்டிப்புமாய் அவன் வரும்போது நிறைய நிறைய சந்தோஷத்துடன் வந்து அதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு சொல்லுவான் ...

நாட்கள் செல்ல செல்ல கண்ணன் மீதான பிடிப்பு அதிகமாக ... இவள் கண்ணனை தத்துஎடுப்பது என ஒரு முடிவு எடுக்க ... சங்கீ எவ்வளவு போராடியும் அவளால் தடுக்க முடியவில்லை ... ஒருவழியாக சட்ட சிக்கல்களை சரிசெய்து தத்து எடுத்தவள் ..இருந்த முதலீட்டுடன் மீதி இருந்த பணத்தையும் ஒருகிணைத்துவிட்டு மாதம் மாதம் வருமானம் வருமளவு செய்துவிட்டு வீட்டையும் விக்க நினைத்தவள் ... வேண்டாம் என முடிவு செய்து அதை பராமரிக்க மட்டும் ஏற்பாடு செய்தாள் ...

ஏற்கனவே சிலமுறை யோஷித்ததுபோல் தன்னைப்பற்றி தெரியாத ஊரில் வீட்டை வாங்கி கண்ணனுடன் வந்துவிட்டாள் .... கணவனை காண என வந்து சொந்தவீட்டில் சில நாட்கள் தங்கவும் ஆரம்பித்தாள் ...கூடவே சங்கீயுடன் நேரம் செலவிடுவது என இருப்பாள் ..

எவ்வளவு முயன்றும் சங்கிக்கு தான் வசிக்கும் ஊரை பற்றி மட்டும் கூறவில்லை ... இவள் இங்கு வரும்போதுமட்டும் சங்கீயை பார்த்து பேசி அவளுடன் நேரம் செலவிடுவாள்  ..... சங்கீயும் முக்கியமான விஷயம் என்றால் மொபைலில் தொடர்பு கொள்ளுவாள் ....

இடைப்பட்ட காலத்தில் சங்கீக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துவிடவே அவளும் வேளையில் பிஸி ஆக ... இவர்களைப்போல் ... கண்ணன் , சைந்தவி ( சங்கீயின் பெண் ) நட்பும் வளர்ந்தது ..

குருவை பற்றி சங்கீக்கு தெரியவில்லை அவளிடம் மறைக்கும் நோக்கம் என்று எதுவும் இல்லை எனினும் ..சொல்ல வேண்டிய அவசியமும் நேரவில்லை .....

குருவும் ரஞ்சியும் பேசத்தொடங்கிய நாள் மிகவும் மோசமானது ... கண்ணனுக்கு கடுமையான ஜுரம் வர அவன் அழுகை அடங்கவில்லை ... நிர்வாகி அழைக்க நேரில் சென்ற ரஞ்சிக்கோ ... மனம் வலித்தது ... துவண்டு போன வாழையாய் இருந்த கண்ணனை கைகளில் எந்த தனலை தகித்தது அவன் உடல் .... அவள் பதறும்போதே அங்குவந்த குரு அனைவரையும் கொஞ்சம் நகரச்சொல்லி ..

ரஞ்சி என அவன் அழைத்த அழைப்பு பூவிலும் மென்மையாய் இவள் செவிகளை வந்தடைந்தது...

இங்க பாருங்க கண்ணனை என்கிட்ட காட்டுங்க ..

அய்யோ  அவனை ஏன் கையில் இருந்து விலக்கினா குழந்தை குளிரில் நடுங்கிறான் ....

புரியுதும்மா .. நீங்க மெதுவா அவனை காட்டுங்க நான்  செக் பண்ணிட்டு மருந்து கொடுத்தா  அவனுக்கு முழுவதும் சரியாகிவிடும் ....

மெதுவாக கை  விலக்கி கண்ணனை காட்ட ... செக் செய்துவிட்டு ...

இங்க பாருங்க இவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் பிவேர் இருக்கு அதுனால நான் இப்போ அவனுக்கு ஊசி போடணும் சரியாய் நீங்க அழக்கூடாது .....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.