(Reading time: 10 - 20 minutes)

07. நிர்பயா - சகி

Nirbhaya

ழைப் பொழிந்து சில்லென்ற உணர்வை உணர்த்திக் கொண்டிருந்தது இயற்கை.உறக்கம் கலைந்துவிட்ட சமயத்திலும்,எழ விருப்பமில்லாமல் படுத்திருந்தாள் நிர்பயா.அவளது முகத்தில் மந்தகாசம்!!காரணம் அவன்!!அந்த திருடன் தான்.எவ்வாறு என்னை கவர்ந்துப் போனான் அவன்??அவனை இனி சந்திக்கவே போவதில்லை என்றல்லவா எண்ணினேன்.ஆனால்,இன்று என் முன்னால் வந்து நின்று நீ வேண்டிய வாழ்வை தந்துவிட்டேன்.நான் வேண்டிய உன் இதயத்தை எப்போது தர இருக்கிறாய் என்கிறான்??

போர்வையால் தன் முகத்தை மூடிக்கொண்டாள் அவள்.

மனம் பழைய சம்பவங்களை அசை போட்டது.

"நீங்க ஏன் எல்லாரிடமும் கடுமையா நடந்துக்கிறீங்க?"-தைரியத்தை வரவழைத்து கேட்டே விட்டாள் நிர்பயா.ஆனால்,அன்று அவள் கேட்டதோ ஒருவித வெறுப்பில்!!

அதற்கு அவனிடம் பதில் இல்லை.

"உன்கிட்ட சொல்றதுக்கு என்ன?என் தம்பி பிறந்த உடனே என் அம்மா இறந்துட்டாங்க,அப்பாவும் கொஞ்ச நாள்ல இறந்துட்டார்.அன்றிலிருந்து துளி பாசம் எனக்கு கிடைத்ததில்லை.என் சந்தோஷம்,கஷ்டம் எதையும் பகிர்ந்துக்க ஆள் கிடைத்ததில்லை.அது எனக்கு ஒரு வெறுப்பாகி,என்னை மொத்தமா மாற்றியது.நான் இப்படி இருக்கிறது என் உணர்வுகளை மறைக்க தான்!நாலு பேருக்கிட்ட போராடி நல்லவன் பட்டத்தை வாங்குறதுக்கு கெட்டவனாகவே வாழ்ந்துட்டு போயிடலாம் தானே!"-அவனது பதில் தான் அவனுள் ஒரு நல்லவன் புதைக்கப்பட்டு இருக்கிறான் என்ற உண்மையை அவளுக்கு கூறியது.

நினைவுகளில் மூழ்கியவள் முகத்தில் அவ்வளவு காதல்!!

அவனிடம் சிறிது விளையாடி பார்க்க சொல்லியது மனம்!!

அன்று தங்களின் முதல் சந்திப்பில் தனது கார்ட்டை தந்துவிட்டு சென்றிருந்தான் ஜோசப்.அதிலிருந்த அவனது அந்தரங்க அலைப்பேசி. எண்ணுக்கு தொடர்பு கொண்டாள் நிர்பயா.

அங்கே,நன்றாக உறங்கி கொண்டிருந்தவன்,அலைபேசி அலறலில் பதறியப்படி எழுந்தான்.

"ப்ச்..!"-என்று சிணுங்கியப்படி ரிசிவரை எடுத்து செவியில் வைத்தான்.

"ஹலோ!ஜோசப் ஹியர்!"-கொட்டாவி விட்டப்படி கூறினான் அவன்.

"சார் ஒரு முக்கியமான கேஸ் விஷயமா பேசணும்!"

"சொல்லுங்க!என்ன கேஸ்?"

"ஒருத்தர் மேலே கேஸ் போடணும் சார்!"

"யார் மேலே?"

"ஜோசப் வில்மட்!"

"ஓ...யார் மேலே?"

"ஜோசப்!பெரிய கிரிமினல்!"

"கிரிமினலா?"

"அதாவது கிரிமினல் லாயர்!"

"யாருங்க நீங்க?எனக்கு போன் பண்ணி,என்னை வைத்தே.,என் மேலே கேஸ் போடணும்னு சொல்றீங்க?"

"சொல்லுமா?"

"ம்!!"

"அம்மூ!"

"................"-அவள் பெயரை கேட்டதும் அவன் முகத்தில் புன்னகை!!

"நீங்களே  சொல்லிட்டீங்க போட்டுவிடலாம்!என்ன கேஸ் போடணும்?"

"................"-அவளிடம் பதில் இல்லை.

ஜோசப் ஒரு தலையணையை அணைத்தப்படி சாய்ந்து உட்கார்ந்தான்.

"நான் சொல்லட்டா?"

"................"

"திருட்டு கேஸ் போடலாமா?சிக்கிட்டான்னா,சாகுற வரைக்கும் வெளியேவே வர முடியாது!உள்ளே தான் அடைந்திருக்கணும்!"

"..............."

"ஏற்கனவே பய சிக்கிட்டான்!அவனை வெளியே விடுறதும்,பூட்டி வைக்கிறதும் உங்க கையில தான் இருக்கு".

"................"

"மேடம்??"

"வெளியே விடுற யோசனை இல்லை!வெளியே விட்டா அந்த திருடன் மறுபடியும் கெட்டு போயிடுவான்.அதனால,திறந்து விடுற எண்ணமில்லை!"-(இப்படியும் காதலை கூறலாமா??நான் இத்தனை வருடங்களாய் ஐ லவ் யூ என்ற மூன்று எழுத்து தான் இக்கால காதலை வெளிப்படுத்தும் ஒரே உக்தி என்றே எண்ணி இருந்தேன்!!)

"அப்போ வெளியே விட மாட்டீங்க?"

"மாட்டேன்!"

"அப்போ உங்க இஷ்டம்!ஆனா,இனி அந்த திருடன் என்ன பண்ணாலும் என்கிட்ட வந்து என்னை திட்ட கூடாது சொல்லிட்டேன்".-நிர்பயாவின் நாவிலிருந்து சுத்தமாக பேச்சே வரவில்லை.மனம் ஒடுங்கி போனது!!

நீண்ட நேரம்...நீண்ட நேரமாய் பேசினர்.காலத்தைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.