(Reading time: 8 - 16 minutes)

04. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

"ம்மா!நான் இன்னிக்கு அப்பாக்கூட வெளியே போனேன்!"-பழகி இரண்டு திங்கள் கடந்த வேளையில் முழுதும் தாய்மையை கீதாவின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டான் விஷ்வா.

"அப்படியா கண்ணா?எங்கே போனீங்க?"

"ம்..மூவி போனோம்!அப்பறம் பார்க் போய் விளையாடினோம்!நீ அன்னிக்கு அப்பாவை திட்டினதிலிருந்து அவர் என் கூட ஜாலியா இருக்கார் தெரியுமா?இனிமே தினமும் அப்பாவை திட்டும்மா!அப்போ தான் அவர் நல்லப் பையனா இருப்பாரு!"-ஏதும் அறியாத அந்த கள்ளமில்லா வெள்ளை உள்ளத்தின் வெகுளித்தனத்தைக் கண்டு சிரிப்பதா?வருந்துவதா?என்று அவளுக்குப் புலப்படவில்லை.

"நாங்க ஊருக்குப் போக போறோம்!"

"ஊருக்கா?"-அவளது புருவம் சுருங்கியது.

"ம்...அப்பா!இனி இந்த ஊர் வேணாம்னு வேற ஊருக்கு கூட்டிட்டு போக போறார.நாம அங்கே போய் தான் இனி விளையாடணும்!"-இது என்ன அடுத்த சோதனை என்றானது அவளுக்கு!!

"கண்ணா!நான் கொஞ்ச நாள் வேற ஊருக்கு போக போறேன்பா!"-அக்குழந்தையின் முகம் வாடியது.தான் தாய் என்று உறுதிப்பூண்டவளை இறுக அணைத்துக் கொண்டான் அவன்.

"நான் உன்னை விட மாட்டேன்!நீ எப்படி போயிடுவ?"

"செல்லம்!நான் சொன்னா கேட்கணும்,நான் சீக்கிரமே வந்துடுவேன்!"

"மா!போகாதே!"

"அதான் அப்பா இருக்காருல கண்ணா!அப்பா ஏதாவது தப்பு பண்ணா உடனே அம்மாக்கிட்ட சொல்லு!அம்மா வந்துடுறேன் சரியா?"

"ம்..."

"இவனுக்கு இன்னும் ட்ரீட்மண்ட் முடியலை!ஆனா,இவனோட அம்மா என்ன ஆனாங்க?"-மனதில் கேட்டுக் கொண்டாள்.

"மனோ அங்கிள் வந்திருக்காரா செல்லம்?"

"ம்..அவர் தான் கூட்டிட்டு வந்தாரு!அப்பா உன்னைப் பார்த்து பயந்துட்டாருன்னு நினைக்கிறேன்!உன்னைப் பார்க்க வரவே மாட்றார்!"-அது ஏனோ காவியத்தலைவனின் பேச்சை அவள் விரும்பவில்லை.

"நீ மனோ அங்கிளை இங்கே வர சொல்லிட்டு!பக்கத்து ரூம்ல விளையாடிட்டு இரு!நான் இதோ வந்துடுறேன்."

"சரிம்மா!"-தாய் கூற்றை தட்டாமல் மதித்தான் அம்மழலை!!

"க்ஸ்யூஸ்மீ மேடம்!"-ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தவள்,மனோவின் குரலில் கலைந்தாள்.

"கம் இன்!"

"கூப்பிட்டிங்களா?"

"விஷ்வா விஷயமா சில தகவல்கள் எனக்கு தேவை!"

"எனக்கு அவன் குணமாகினா போதும்!என்ன வேணுமோ கேளுங்க!"

"அவனோட அம்மா என்ன ஆனாங்க?"

".............."

"அவனோட அப்பா ஏன் அவனை ஒதுக்கி வைத்திருந்தார்?"

".............."

"சொல்லுங்க!"

"மேடம்!விஷ்வா அம்மாவோட என் ச்சீப்க்கு நடந்த கல்யாணம் அவர் விருப்பப்பட்டு நடக்காத ஒண்ணு!"

"..............."

"அவங்க அம்மாவோட தனிப்பட்ட உந்துதலால் தான் என் ச்சீப் சரண்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார்!நாங்க எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் எல்லாம் சரியாயிடும்னு நினைத்தோம்.ஆனா,எதுவுமே சரியாகலை!இந்த உலகத்திலே ரொம்ப மோசமான பொண்ணுன்னு சரண்யாவை தான் சொல்லணும்!"

".............."

"வெளியே சொன்ன வெட்கக்கேடு!என் ச்சீப் சுண்டு விரல் நகம் கூட அவர் சுயநினைவில் இருக்கும் போது அவங்க மேலே படவில்லை!"-அவள் அதிர்ந்துப் போனாள்.

"அவர் சுயநினைவு இல்லாத....அவங்க எவ்வளவு கேவலமானவங்கன்னு உங்களுக்கே புரிந்திருக்கும்!"-அவளது கண்கள் தன்னிச்சையாய் கலங்க ஆரம்பித்தன.

"நடந்த விஷயத்தை சகிக்க முடியாம,அவர் அமெரிக்கா வந்துட்டார்!விஷ்வா பிறந்திருப்பான்,2 மாசத்திலே குழந்தையை பராமரிக்க முடியாம,அவனுக்கு உடம்பு சரியில்லாம போய்...அப்போ கூட அவங்க அதைப் பற்றி கவலைப்படலை!என் ச்சீப்க்கு இதெல்லாம் சகிக்கலை!குழந்தையை பிரித்து கூட்டிட்டு வந்துட்டார்!"

".............."

"ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கானே!அந்த சரண்யா வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணா!அவன் அவளை கொடுமைப்படுத்தி,கொன்னுட்டான்!"

"என்ன?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.