(Reading time: 7 - 14 minutes)

08. நிர்பயா - சகி

Nirbhaya

சில நேரங்களில் மனமானது சில இக்கட்டான சந்தர்பங்களில் முடிவெடுக்க இயலாமல் தடுமாறும்!!வாழ்வே இருண்டுப் போகும் சூழல் உருவாகும்.அடுத்தவரின் பழிச்சொற்கள் நமது சிரசை அலங்கரிக்கவும் செய்யலாம்.பலரின் சாபங்களை செவிக்குளிரவும் கேட்கலாம்.சிலருக்கு அதிகப்பட்சமாய் வாழ்வை விடுக்கும் எண்ணமும் உதிக்கலாம்.அது போன்ற சமயங்களில் பலர் செய்யும் தவறு ஒன்றே!!தவறு தன் மீது இல்லை என்றாலும்,பழியை தியாக மனதோடு தன் மீது சுமத்திக்கொள்வர்.இன்னல்களில் விட்டுக்கொடுப்பது வேறு!!பழியை தான் ஏற்பது வேறு!!அது போன்ற சூழ்நிலைகளில் மனதிற்கு பிரியமானவர்களே மனதினை காயமாக்கினால்,அவர்கள் முன் சிறு புன்னகையை விடுத்து உங்கள் பணியை நீங்கள் தொடருங்கள்..!உங்களின் மௌனமே தவறிழைத்தவர்களுக்கான தண்டனையை அவர்களுக்கு நல்கும்!!அதற்காக கவலைக்கொண்டு காலத்தை வீணாக்க வேண்டாம்!மாபெரும் மகத்துவமான பணியானது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை மறவ வேண்டாம்!!

தேநீரை பருகியப்படி தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தாள் நிர்பயா.

"என்ன ஹனி?ஆபிஸ் கிளம்பலையா?"

"மணி இப்போ தான் ஏழாகுது தாத்தா!"

"இல்லை..மறந்துட்டியோன்னு பார்த்தேன்!"-குறும்போடு கூறியவரை புன்னகையோடு பார்த்தாள் நிர்பயா.

"முக்கிய செய்தி!"-என்ற குரல் அவர்களின் கவனத்தை ஈர்த்தது.

"உதகை அருகே உள்ள வனப்பகுதியில் அலங்கோல நிலையில் இருபது வயது பெண் சுப்ரியாவின் பிணம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.இறந்த சுப்ரியா கடந்த ஒரு வாரமாக காணவில்லை என்ற வழக்கை கண்டுக்கொள்ளாமல் விட்ட காவல்துறை!"-என்று வாசித்தார் அந்த தொகுப்பாளர்.

நிர்பயாவின் விழிகள் கூர்மையாயின.

"விரிவான செய்திகள்!உதகையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மருத்துவ கல்லூரி மாணவி சுப்ரியாவின் பிணம் அலங்கோல நிலையில் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்த விசாரணையில் பெண்ணின் சரீரத்தை காலை ஆறு மணி அளவில் பார்த்ததாக,அங்கு விறகு எடுக்கும் பெண் கூறியுள்ளார்.இதைப்பற்றி சுப்ரியாவின் தந்தை மதுசூதனிடம் வினவுகையில் அவர் கூறியதாவது!"

"என் பொண்ணை காணலைன்னு ஒரு வாரத்திற்கு முன்னாடி கம்ப்ளைண்ட் தந்தேன்!ஆனா,யாரும் என் கம்ப்ளைண்ட்டை மதிக்கலை!இன்னிக்கு பிணமா தான் எனக்கு கிடைத்திருக்கா!அவ இறந்ததை விட,அவளைப் பற்றி தப்பா பேசுறதை தான் கேட்க முடியலை!என் சுப்ரியா தப்பானவள் இல்லை.என் மகளுக்கு நியாயம் வேணும்!இந்த கேசை மாவட்ட ஆட்சியர் நிர்பயாவோட தனிப்பட்ட பார்வைக்கு மாற்றுங்க!என் பொண்ணுக்கு நீதி வாங்கி தாங்க!"-கண்ணீரோடான தந்தையின் குரல் அதை கவனித்த எவரையும் கலங்கடித்திருக்கும்.

"எந்த பாவி இந்தக் காரியத்தை பண்ணிருப்பான்?மிருகத்தை விட கேவலமா நடந்திருக்கான்.ச்சே...!"-வெறுப்பை உமிழ்ந்தார் வைத்தியநாதன்.

"நான் ஆபிஸ் கிளம்புறேன் தாத்தா!"-என்றவள் வேகவேகமாக தன் அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.

ழு நாட்கள் கழித்து...

சம்பந்தப்பட்ட அந்த வனத்தில் இருந்தாள் நிர்பயா!!

காரணம்,சுப்ரியாவின் வழக்கு நிர்பயாவின் தனிப்பட்ட விசாரணைக்கு மாற்றம் அடைந்திருந்தது.

அவளோடு இருந்த காவல்துறை ஆய்வாளர் விசாரணையை புரிந்தார்.

"அந்த பொண்ணை எப்போ பார்த்தீங்க?"

"ஒரு வாரத்திற்கு முன்னாடி விறகு எடுக்க போனேன்.அப்போ இந்த பக்கம் காட்டு நாய்கள் சுற்றி இருந்தது.அதை விரட்டிவிட்டுட்டு பார்த்தா,ஒரு பொண்ணு அலங்கோலமா செத்துப்போய் இருந்தது.உடனே,போலீஸ்ல தகவல் சொன்னேன்!"

"நீங்க போங்கம்மா!தேவைன்னா கூப்பிடுறோம்!"

"சரி தாயி!"-அந்த வயதான பெண்மணி அங்கிருந்து சென்றார்.

"போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட் என்ன சார் சொல்லுது!"

"மேடம்!அந்த பொண்ணு ரொம்ப கொடூரமான முறையில கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கா!அவளோட தலையில பலமான காயம் இருந்திருக்கு!அதோட அடையாளத்தை வைத்து பார்த்தா,ஒரு கூர்மையான ஆயுதத்தால அவ மோசமான முறையில தாக்கப்பட்டிருக்கா!நாடி நரம்பை அறுத்து எல்லா இரத்தத்தையும் வெளியேற்றி இருக்காங்க.அந்த பொண்ணோட அந்தரங்க உறுப்பு அறுக்க.."-அதற்கு மேல் கேட்க முடியாமல் நிறுத்தினாள் நிர்பயா.

"என்ன சார் பண்ணிட்டு இருந்தீங்க?ஏன் ஆக்ஷன் எடுக்கலை?"-கோபமாக கத்தினாள் நிர்பயா.

"மேடம்!பர்ட்டிக்குலரா யார் மேலேஆக்ஷன் எடுக்கிறதுன்னு தெரியலை..."

"இது ஒரு போலீஸ் ஆபீஸர் கொடுக்கிற ரெஸ்பான்ஸ் இல்லை..."

"ஸாரி மேடம்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.