(Reading time: 8 - 15 minutes)

15. பைராகி - சகி

bhairagi

"ச்!"-பெரும் தும்மல் ஒன்றை சப்தமாக போட்டான் ஆதித்யா.

"நான் தான் சொன்னேன்ல என் பேச்சை எங்கே கேட்கிறீங்க!"-அன்று காலையில் கணக்கு வைத்துப் பார்த்தால் இந்த வசனத்தை நூறாவது முறையாவது கூறி இருப்பாள் யாத்ரா.

"போதும்டி!எத்தனை முறை சொல்லுவ!"

"பின்ன என்ன...குழந்தையா நீங்க?"

"ஏன் குழந்தைங்க தான் மழையில விளையாடணுமா?"

"ப்ச்...அம்மா வேற திருவையாறு போயிருக்காங்க!இப்போ என்ன பண்றதுன்னே புரியலையே..!"

"யாத்ரா கூல் டவுன்!கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்!"

"................."

"ஆமா..!நீயும் தானே என்கூட நனைந்த உனக்கு மட்டும் எப்படி ஃபீவர் வராம இருக்கு?"

"எனக்கும் ஃபீவர் வந்துட்டா உங்களை யாரு கவனிப்பா?"

"ஓ..ப்ளான் பண்ணி தான் வராம போயிருக்கா...ஹஹஹச்..!"-மீண்டும் தும்மினான்.

"நீங்க முதல்ல எழுந்திரிங்க!மருந்து குடிங்க..!"

"................."

"ஹலோ!"

"................."

"தூங்குறா மாதிரி நடிக்கிறதை பாரு.இவரை சமாளிக்கிறதுக்கு நூறு குழந்தைகளை சமாளித்து விடலாம்.."

"ஆ...அடிப்பாவி..!எவ்வளவு பெரிய ஆசை உனக்கு?"-சட்டென அவன் கூற வந்ததன் பொருள் விளங்காமல் விழித்தாள் யாத்ரா.அரை நிமிடம் தாமதமாய் பொருள் விளங்க,

"உங்களை...புத்தி போகுது பார்!"-என்று அவனை கடிந்துக் கொண்டாள்.

தன்னிச்சையாக அவள் முகம் சிவந்துப்போக அங்கிருந்து வெளியேற நகர்ந்தாள்.ஆனால்,அவனது கரமோ அவளை தடுத்து நிறுத்தியது.

அவளறியாமல் அவனது காதலின் விசைக்கு கட்டுப்பட்டு நகர தொடங்கினாள் யாத்ரா,அவனது மார்பினில் தன்னை புதைப்பதற்காய்..!

இரு முகங்களும் நெருக்கமாக இருக்க,அவளது கண்களை உற்றுப் பார்த்தான் ஆதித்யா.

என்றோ நடந்த நாமறிந்த இதுப்போன்ற நெருக்கம் அவனுக்கு நினைவு வந்தது.

"இல்லை யாத்ராவுக்கு பழைய நினைவுகள் வர கூடாது!மறுபடியும் எந்த வேதனையும் அவ அடைய விட மாட்டேன்!"-அவன் கண்கள் ஒருத்துளி கண்ணீரை விடுத்தன.

"என்னங்க?என்னாச்சு?"-அவன் விரைந்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

கனத்த மௌனம்..!அவனது அணைப்பில் ஒருவித ஏக்கத்தை அவள் உணராமல் இல்லை!

அவளது முகத்தை நிமிர்த்தி அவன் மனதை தனதாக்கிய அவளது கண்களை உற்றுப் பார்த்தான் ஆதித்யா.

"உனக்கு இனி எந்த கஷ்டமும் வர விட மாட்டேன்மா!"-யாத்ரா புன்னகைத்தாள்.

"தெரியும்!"-என்று மீண்டும் விரும்பி அவனது அணைப்பினுள் சென்றுவிட்டாள்.

காதலின்  வெற்றி இதுவே ஆகும்!எந்த ஒரு ஆண் தன் இணையின் துன்பத்தை உணர்ந்து அவளுக்கு இயன்றவரை எவ்வித துன்பமும் நெருங்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறுகிறானோ அதன்வழி நடக்கிறானோ அச்சமயம் அப்பெண்ணின் காதல் வெற்றி அடைகிறது.அதே சமயத்தில் அவள் மனம் உவந்து கூறும் அறிவேன் என்ற பதில் அந்த ஆணின் காதலை வெற்றிப் பெற செய்கிறது.எவ்வாறு வளிமண்டலத்தில் சுழலும் இவ்வுலகம் வீழாமல் தடுக்க ஈர்ப்பு விசை அற்ற நிலை அவசியமோ அதைப்போல காதல் என்னும் தெய்வீகம் உயிர் பெற சலனமில்லாத,சகிப்புத்தன்மை கொண்ட நிர்மூலமான மனம் அவசியம்!!காதல் யாருக்கும் விரோதி அல்ல..அது செல்லும் வழியே விரோதத்தை முடிவு செய்கிறது!!

நீண்ட நேரம் கழித்து ஒருவரை மற்றொருவர் விலகிக் கொண்டனர்.

"ஏ செல்லம்...!"

"ம்??"

"நமக்கு குழந்தை பிறந்தா நீ யாரை முதல்ல கவனிப்ப?என்னையா?இல்லை..என் பொண்ணையா?"-யாத்ரா விசித்ரமாக அவனை பார்த்தாள்.

"சொல்லு!"

"முதல்ல பையன் தான் வேணும்!"

"பையனா?அதெல்லாம் கிடையாது..பொண்ணு தான்!"

"பையன் தான்!"

"முடியாது முடியாது!சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்!முதல்ல பொண்ணு அப்பறம் பையன்!"

"ஐயோ!இன்னிக்கு உங்களுக்கு என்ன தான் ஆச்சு?அம்மா வீட்டில இல்லாம போயிடவே ரொம்ப துளிர் விட்டு போயிடுச்சு!"

"ஏ..என்னடி!ரொம்ப பண்ற!நான் என்ன அப்படி தப்பா சொல்லிட்டேன்?எனக்கு பெண் குழந்தை தான் வேணும்னு கேட்டேன்!அது ஒரு குற்றமா?"

"நான் போறேன் போங்க!"-மனதின் நாணத்தை எவ்வளவு தான் கட்டுப்படுத்த நினைத்தாலும் அம்முயற்சி எல்லாம் பயனற்று போக,எழுந்து அங்கிருந்து உடனடியாக வெளியேறினாள் யாத்ரீகா.மன்னிக்கவும்...யாத்ரா..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.