(Reading time: 13 - 26 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலா

Vivek Srinivasan

ரை இறங்கி ஓடு தளத்தை முத்தமிட்டது விமானம். எந்த விதமான அதிர்வுகளும் இல்லாமல் மெத்தன ஒரு முத்தம்.

'ஆவ்சம் லேண்டிங் மேன். ஜஸ் லவட் இட் ' முகம் மலர்ந்து சக விமானி சொல்ல, அழகாய் சிரித்துக்கொண்டான் விவேக். இது ஒன்றும் புதிதல்லவே அவனுக்கு.

கேபின் பணியாளர்கள் பயணிகளுக்கு விடைக்கொடுத்து வழி அனுப்பிக்கொண்டிருந்தனர் சில நேரங்களில் பயணிகள் கூட இவன் காக்பிட்டை விட்டு வெளியே வர காத்திருந்து இவனுக்கு கை குலுக்கி விட்டு செல்வார்கள்!!!

இவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாக தெரிந்ததே இல்லை. காதலிப்பதற்கு கூட நீ மிக நன்றாக காதலிக்கிறாய் என பாராட்டுவார்களா என்ன??? சிரிப்புதான் வரும் அவனுக்கு.

எல்லா பயணிகளும் இறங்கி சென்ற பிறகு காக்பிட்டை விட்டு வெளியே வந்தான் அவன். கேபின் பணியாளர்களும் அவனுக்கு குலுக்க சின்ன புன்னகையுடன் அவற்றை ஏற்றுக்கொண்டு நடந்தான் அவன்.

எப்போதும் விமானத்தில் ஏறும் போது இருக்கும் உற்சாகம் இறங்கும் போது அவனுக்கு கொஞ்சம் குறைந்து விடும் தான். ஆனால் இன்று ஏதோ புதிதாய் ஒரு உணர்வு. எதையோ, இல்லையென்றால் யாரையோ புதிதாக சந்திக்க போகிறோம் என்று மனதின் ஓரத்தில் ஒரு உற்சாக தீப்பொறி.

தே நேரத்தில்....

அங்கே மதுரையில்... ஒரு கல்யாண மண்டபத்தில்... சமையலறையில் எண்ணை சட்டியின்  முன்னால் நின்று வடை தட்டிக்கொண்டிருந்தார் அவர்!!! தாமோதரன்!!!

'ஆச்சா??? இன்னும் எவ்வளவு நேரம்??? உங்களாலே முடியலை. எனக்கு நல்லா தெரியுது. வயசாச்சு நீங்க வேலை செஞ்சது போதும்ன்னாலும் கேட்க மாட்டேங்கறீங்க...' சமையல் காண்ட்ராக்டரின் குரல் ஒலிக்க

'இல்ல.... இல்ல... முடியுது..... முடியுது என்னாலே... இதோ முடிச்சிட்டேன். ரெண்டே நிமிஷம்...'  பரபரத்தார் அவர். .அவர் முகத்தில் வியர்வை வழிந்துக்கொண்டிருந்து!!!!

'வயாசச்சு இல்ல... உங்களுக்கு எதுக்கு இந்த வெட்டி வீம்பு... நீங்க சரின்னு சொன்னா உங்களை ராஜா மாதிரி பார்த்துக்க ஆள் இருக்கு...' அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் தாமோதரன் பல முறை கேட்ட வார்த்தைகள் இவை. ஆனால் அவரை பொறுத்தவரை இது வெட்டி வீம்பு அல்ல!!! தன்மானம்!!!

ங்கே டெல்லியில் அதே நேரத்தில்

மின்னலென விமான நிலையத்துக்குள் நுழைந்தாள் ஹரிணி. எல்லாவற்றிலும் வேகம்தான் அவளுக்கு. கார் ஓட்டுவதில் துவங்கி, நடையில், பேச்சில் என எல்லாவற்றிலும் எதை பற்றிலும் கவலை படாத பாவம் இருக்கும் அவளிடம்.

ஆனால் அவளது இத்தகைய வேகம் சிலரது வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பை தந்திருக்கிறதே அது அவளுக்கு எப்போது புரியுமோ???

அதே நேரத்தில் டாக்டர் சுஹாசினியின் கணவரும் அவளது பதிமூன்று வயது மகனும் அவளுக்கு எதிரே வர, எதிரே வந்தவர்களை கவனிக்காமல் நடந்தவள் அவர்களுடன் மோதிக்கொண்டு கீழே சடாரென விழுந்திருந்தாள்.

தெரியவில்லை அவளுக்கு!!! அந்த ராகுல் அவளது சொந்த அக்கா சுஹாசினியின் கணவன் என தெரியவில்லை அவளுக்கு!!! விழுந்தவள் எழுந்து, தான் கீழே விழுந்து விட்டோம் என்ற உணர்வு தந்த அவமானம் தாங்காமல், பொங்கி எழுந்த கோபத்துடன் படபடவென பொறிய ஆரம்பித்திருந்தாள் அவன் மீது. பதிலுக்கு தனது பங்கிற்கு பேச ஆரம்பித்திருந்தான் ராகுல்.

அங்கே அவர்கள் இருவருக்கும் வாக்கு வாதம் வலுத்திருக்க அந்த பதிமூன்று வயது சிறுவன் சற்றே பயந்து போனவனாக ஓரமாக சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டிருந்தான்.

அதே நேரத்தில் அங்கே விமான நிலையைத்தினுள் இருந்த அந்த ஹோடேலில் அமர்ந்துக்கொண்டு ஒரு கையில் சாண்ட்விச்சும் ஒரு கையில் காபியுமாக காலை உணவை ருசித்தபடியே திரும்பிய விவேக்கின் கண்களில் விழுந்தனர் சண்டையிட்டுகொண்டிருந்த இருவரும்.

அங்கே பொங்கி வெடித்துக்கொண்டிருப்பது ஹரிணி என சட்டென புரிய அவன் விழிகளில் கொஞ்சம் எரிச்சல் பரவியது.

'இவள் எப்போதும் இப்படித்தான்!!!' தனக்குள்ளே சொல்லிகொண்டவனுக்கு தனது தம்பியின் திருமணமும் அப்போது இவள் நடந்துக்கொண்ட விதமும் நினைவுக்கு வந்து போனது. அதுதான் இன்று வரை வீட்டில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.

சில நொடிகள் கழித்து நிமிர்ந்தவனின்  பார்வை விழுந்தது அந்த சிறுவன் மீது!!!

உடலை சற்றே குறுக்கிக்கொண்டு அந்த சண்டையையே பயம் கலந்த கண்களுடன் வெறித்துக்கொண்டிருந்த அந்த சிறுவன், சட்டென விவேக்கின்  மனதில் ஒட்டிக்கொண்டான். ஏதோ சின்ன வயதில் இருந்த தன்னையே பிரதிபலிப்பதை போல் ஓர் உணர்வு விவேக்குக்கு.

அடுத்த விமானம் கிளம்ப இன்னும் நேரம் இருக்க சாண்ட்விச்சை முடித்துவிட்டு மெல்ல நடந்து வந்து அந்த பையனின் அருகில் அமர்ந்துக்கொண்டான் விவேக். இப்படி எல்லாம் ஒரே பார்வையில் சட்டென யாரும் அவனை இப்படி ஈர்த்தது இல்லை இதுவரை. அவன் பார்வை அந்த சிறுவனை விட்டு விலக மறுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.